நட்பதிகாரம்

'நான் வந்துட்டேன் ' என உலகுக்கு அறிவிக்க அழுகையுடன் வந்தோம் !

அம்மாவின் அன்பில் அழுகை மறந்து புன்னகைக்க துவங்கினோம் !

கவிழ்ந்தோம் , விழுந்தோம் ஒரு நாளில் எழுந்தோம்

அத்தை என ஆரம்பித்து அத்தனை வார்த்தைகளையும் மழழைத் தமிழில் உலறிக் கொட்டினோம்

பள்ளிக்கூடம் போக ஆசையாய் புறப்பட்டு பள்ளிவாயில் வந்ததும் அழுது புரண்டு அம்மாவையும் அழவைத்து ஒரு வழியாய் நாம் 'அ' எழுதக் கற்றோம்

'அ ' வில் ஆரம்பித்த கல்விப் பயணம் தொடர் கதையாய் தொடர்ந்தது ஒன்று , இரண்டு என பன்னிரெண்டாம் வகுப்பு வரை !

நமெக்கென ஒரு நண்பர் கூட்டம் தானாய் அமைந்தது

விட்டுக் கொடுக்காமல் தட்டிக் கொடுத்து தவறை உணர்த்தி அன்பால் அதட்டி நம்மோடு சிரித்து நமக்காக ஜெபித்து வேதனையில் நம் கண்ணீரைத் துடைக்கும் அடுத்த 'அம்மாக்களை ' கண்டோம் அந்த நண்பர் கூட்டத்திலே

ஒருவருக்காக ஒருவர் அழுதிருக்கிறோம் ! சமந்தமே இன்றி நம் தோழிக்காக யாரோ ஒருவரோடு சண்டை போட்டிருக்கிறோம் ஒருவரை ஒருவர் புரிந்திருக்கிறோம் ஒருவர் மனதின் நினைவுகளை மற்றொருவர் அறிந்திருக்கிறோம்

ஒரு உண்மை , முடியப் போகிறது நம் பன்னிரண்டு வருட கல்விப் பயணம்

பிரியப் போகிறோம் நம் தோழிகளை தவிர்க்க முடியாத கொடுரமான பிரிவு

காலம் இதற்கு மருந்து போடுவதில்லை மாறாக , காலம் மறைக்க முயற்சிக்கிறது

கல்லூரியில் , அடுத்த வருடம் யாரை அடிப்பேன் ? யாரிடம் அடிவாங்குவேன் ? யாரிடம் உரிமையாய் கோபித்துக் கொள்வேன் ? யார் என்னிடம் உரிமையாய் கோபித்துக் கொள்வார்? யாரை நான் பேசியேக் கொள்வேன் ? யார் என்னைப் பேசியேக் கொள்வார் ? யாருக்கு நான் 'பல்பு' கொடுப்பேன் ? யார் எனக்கு 'பல்பு' கொடுப்பார் ? யாருடைய பண்டத்தை நான் பிடுங்கித் திண்பேன்? யாரிடம் இருந்து என் பண்டத்தை காப்பாற்ற ஓடுவேன் ? யாருடைய சிரிப்புக்காக நான் அர்த்தமேயின்றி வீணாய் நடிப்பேன் ? யார் நடிப்பார் எனக்காக ?

ஒருவேளை என் இத்தணைக் கேள்விகளுக்கும் பதிலாக யாரேனும் வந்தாலும் , உன் பார்வை எனக்குத் தரும் நம்பிக்கையை யார் தரக் கூடும் ?

'அடுத்தது என்ன படிக்கலாம் ' என்ற வெளிப்படையான கேள்வியோடு இதயத்தில் இத்தணை கேள்விகளை சுமந்துக் கொண்டே நகர்கிறோம் நாம்

நாவினால் சுட்ட வடு போல நீ இனி என்னோடு இருக்கப்போவதில்லை என்ற ஆறா காயத்துடன் கண்களில் கண்ணீருடன் முடிகிறது உனக்கான என் கவிதை !

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.