உன்னை காதலித்தபின்...

 

 

உன்னை காதலித்தபின்னும்

மிகுதியாய்

குடித்துக்கொண்டுதானிருக்கிறேன்...

 

உன்னை காதலித்தபின்னும்

பிற பெண் மார்புகளில்

கண் விழத்தான் செய்கிறது...

 

உன்னை காதலித்தபின்னும்

என்

சுய இன்பத்துக்கு குறைவில்லை...

 

உன்னை காதலித்தபின்னும்

என் மனம்

வஞ்சகங்களால் சூழ்ந்தே இருக்கிறது...

 

உன்னை காதலித்தபின்னும்

சந்தேகக் கொலைகாரனின் அரிப்பு

சில நேரம் எனக்கும் வருகிறது...

 

ஆனால்

உன்னை காதலித்தபின்

தனித்தீவின் கொடும்பனியில்

செத்துக்கிடக்கும்

ஆட்டுக்கிடாயின் தலை வரும்

அந்த ஒற்றைக்கனா

இப்போதெல்லாம் வருவதேயில்லை...

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.