உனக்கு நீயே, 
கேள்விகள் கேட்டு நடுங்காதே!
மனக் குமுறல்களால் பதறாதே!
பதற்றமெடுத்து மிரளாதே!
 
இவ்வயது 
இவ்வாறு தோன்றும் வயதுதான்
ஆண்/பெண்  அங்கம் குறித்து 
ஆசை கொள்ளும் வயதுதான்
தவறான எண்ணங்கள், நோக்கங்கள் 
எழும் வயதுதான்
இதில் உன் பங்கு தவறு ஏதும் இல்லை
 
சமூகம் 
உனக்கு உண்மை உணர்த்தாத இச்சமூகம் 
அதுவே தண்டைனைக்குரியது
அதனால்,
உன் பங்கு தவறு ஒன்றும் இல்லை என்பதனால்
எதுவும் செய்யலாம் என்று எண்ணாதே!
 
நண்பா..
நீ! உணர வேண்டும் 
உண்மை உணர வேண்டும்
காமம் என்பது புனிதத்தில் ஒன்று 
அது வெறும் வெற்றுக் கவர்ச்சியோ, ஆபாசமோ அல்ல.
அப்புனிதம் குறித்த தேடல் வேண்டும் 
அத்தேடலில் நீ உடனே இறங்க வேண்டும்
எவ்வாறு?
 
காமத்தினுள் செல்! 
உள்ளே என்ன உண்டு? தேடு! 
தேடி அடைந்தபின் உடை!
காமம் உடை! உருக்குலை!
கிழித்து எரிந்து வெளிவா!
மெல்ல மூச்சுவிடு!
நிம்மதிகொள்
 
சுற்றும் முற்றும் பார்
உயிர் தெரியும்
உடல் தெரியாது
நீ உண்மை உணர்ந்துவிட்டாய் அல்லவா!
அதனால்
உன் கண் கண் மட்டுமே நோக்கும் 
அங்கங்கள் இனி அர்த்தமற்றுப் போகும்
ஏனெனில் 
காமம்தான் எரிக்கப்பட்டுவிட்டதே!
அதுபற்றிய கவலை இனி இல்லை
 
இனி எவ்வுடம்பும் 
உன் உடம்பு தாங்கும்
பேரழகும் 
உன் முன் மண்டியிடும்
இனி எந்தவொரு அங்கமும் 
எந்தவொரு காட்சியும் 
உன் உடல் கிளறாது 
 
இனி உலகெங்கிலும் 
ராமன்க  / கண்ணகிக - ளும் மட்டும் இருப்பார்கள்
பாலியல் வன்கொடுமை 
வரதட்சணை பெண்கொடுமை குறையும்
உலகம் அமைதி பெரும் 
பெண்மை உயர்வு பெரும்
 
நடக்கும் 
இவையெல்லாம் கட்டாயம் நடக்கும் 
நீ  (ஆண் / பெண்)
காமம் கடந்தால்
 
ஆனால், ஒன்று நீ மறுமுறை
இன்னும் ஒரே ஒருமுறை 
கட்டில் மெத்தையில் காதல் துணைகொண்டு 
கணவ / மனைவி  னுடன் / யுடன் கலந்திருக்கும்போது
கடைசியாய் ஒருமுறை 
மெய்க் காமத்தால் தோற்கடிக்கப்படுவாய்!!
 
tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.