கருப்பு நட்சத்திரங்கள்

-பார்கவி தி


‘சேலம் மத்திய சிறைச்சாலை-07’ என்று வில் வடிவில் எழுதபட்டிருந்தது. சிறைச்சாலையில் இருந்து வெளிபட்டார் வேணுகோபால். முகம் முழுவதும் கவலைகள் குடியேரிந்திருந்தன.பார்ப்பதற்கு நடுத்தர உயரமும்.அவரின் தொப்பை சமீபகால சிறையின் உணவின் காரணமாக வற்றியும் காணப்பட்டார். சற்று மாநிறம்,கடவுள் படைத்த கண்கள் பாதி செயல் இழந்ததால் மனிதன் படைத்த மூக்கு கண்ணாடியே அவருக்கு கண்களாக செயல்பட்டுகொன்டிருந்தன. பல கட்டங்களால் நிரப்பபட்ட சட்டையும் பழுப்பு நிற பேன்ட்டும் அணிந்திருந்தார்.


'எவ்வளவு நாட்கள் தன் வாழ்நாளில் சிறைவாசம் இருந்தேன்',என்று மனதில் நினைவுகளுக்கு உயிர் கொடுக்க தொடங்கினார்.


“கணம் நீதிபதி அவர்களே இதோ குற்றவாளி கூன்டிலே நிற்க்கும் வேனயம்கோட்டை’வேணுகோபால்’என்பவர் பிரபல பத்திரிக்கை ஒன்றில் எழுத்தாளர் மட்டுமல்லாமல்,திரைபடங்களுக்கு வசனங்களும்,பல நாவல்களும் எழுதியுள்ளார் .சென்ற மாதம் இவர் எழுத்தில் வெளிவந்த ‘கருப்பு நட்சத்திரங்கள்’ என்னும் நாவலில் ,இரு மதங்களை பற்றி குறிப்பிட்டிருந்தார்,ஒன்று தாழ்ந்ததாகவும் மற்றொன்று உயர்வாகவும் கூறியுள்ளார். இதனால் சேலம் அம்மாபேட்டை பகுதியில் சம்மந்தபட்ட இருமதங்களை சார்ந்த மக்கள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கான சாட்ச்சியங்கள் அனைத்தும் தங்கள் பார்வைக்கு ஏற்கனவே சமர்பிக்கபட்டுவிட்டன.ஆதலால் இவருக்கு தக்கதண்டனை வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்,என்று தான் மனம் செய்த பொய்கள் அனைத்தையும் முற்றுபுள்ளி அல்லாமல் கக்கினார் அந்த வழக்கறிஞர்


அங்கே அமர்ந்திருந்த மக்கள் யாரும் வேணுவிற்கு தெரியவில்லை,பொழுதுபோக்கிற்காக அமர்ந்திருந்தனர்.ஆனால் இருவரை அடையாலம் கண்டான்,சற்று கருமை நிறம் கொன்டு வேணுவை பாவமாக பார்த்துகொன்டிர்ப்பவன்,அவனின் ஒரே நண்பனான மகேந்திரன்.இன்னொருவன் வெள்ளை கர்தா சட்டையும்,வேட்டியும் உடுத்தி வேணுவை பார்த்து நக்கலாக சிரிப்பவன் பனிவேந்தன்,அம்மாபேட்டை நகராட்ச்சியின் செயலாளர் மட்டுமில்லாமல் , வேணு தற்போது கோர்ட்டில் நிற்க காரணமான அம்மாபேட்டை நகராட்ச்சியின் தலைவர் சதாசிவத்தின் நண்பனுமாவான். நான் இங்கே அசிங்கபடுவதை பார்த்து ரசித்து வா என்று அவன்தான் இவனை அனுப்பிவைத்திருக்கவேண்டும்.

நீதிபதி அவர்கள் ஓர் பேப்பரில் மும்முரமாக குற்றத்தையும் தண்டனையும் எழுதிகொன்டிருந்தார்.


‘கலவரம் ஏற்பட காரணம் நான் அல்ல,அந்த சதாசிவமே.அவனையும் அவன் கட்சிகளும் இரவில் செய்யும் ஊழல்களையும்,குற்றங்களையும் பத்திரிக்கையின் மூலம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததால்தான் நான் இப்போ இந்த கூண்டிலே. நான் எழுதிய எத்தனையோ கதைகளில் இதே நீதிமன்றத்தில் பல நிரபராதிகளுக்கு தண்டனை வழங்கியிருக்கின்றேன்,ஆனால் இன்று எனக்கு தண்டனை வழங்கபோகிறார்கள்.


‘உங்கள் எழுத்துகளுக்கு நானும் என் மனைவியும் அடிமை,உங்கள் நாவல்கள் அனைத்தையும் பொக்கிஷங்களாக வைத்துள்ளேன்’,என்று மனதில் எண்ணிகொன்டவாரேயிருந்த நீதிபதி பெருமூச்சொன்றை விட்டுவிட்டு தீர்ப்பை வாசிக்கதொனடங்கினார்.


‘’குற்றம் சுமத்தபட்டிர்க்கும் வேணுகோபால் என்பவர் அவர் நாவலில் மதங்களை பற்றி உயர்வாகவும் தாழ்வாகவும் குறிப்பிட்டுள்ளார்.அதனால் அம்மாபேட்டை பகுதியில் ஏற்பட்ட மதகலவரத்திற்கும் காரணமாகின்றார். இதனால் அவருக்கு இ.பி.கோ செக்ஷன் 153ன் கீழ் ஐந்து மாதங்கள் சிறைதண்டனை விதித்து இந்த கோர்ட் தீர்ப்பளிக்கின்றது’


நான்கு மாதங்களுக்கு பிறகு


அதே கோர்ட்,அதே நீதிசக்ரவர்த்தி,அதே நண்பன்,அதே பனிவேந்தன் ,அதே பொய்களை பொழியும் வழக்கறிஞர், அதே குற்றவாளி கூண்டில் நான்.


வழக்கறிஞர் பாரபட்ச்சயம் பாராமல் பொய்களை வாரிஇரைத்தார்.’’ குற்றவாளி கூன்டிலே நிற்க்கும் ’வேணுகோபால்’ என்பவருக்கு இதே நீதிமன்றம் ஐந்துமாதங்கள் சிறைதண்டனை விதிக்கபட்டிருந்தன . ஆனால் அவரோ சிறைகாவலர்களை தாக்கி தப்பிக்கமுயன்றுள்ளார்.இதற்கான ஆதாரங்கள் உங்கள் முன் சமர்பிக்கபட்டுவிட்டன.ஆதலால் குற்றவாளிக்கு இ.பி.கோ 224 ,225 மற்றும் 226ன் கீழ் மேழும் மூன்று மாதங்கள் சிறைவிதிக்குமாறு கேட்டுகொள்கிறேன்’’

நீதிபதி வழக்கறிஞரிடம் ‘நீங்கள் மறுபடியும் சட்டபுத்தகத்தை படித்துவிடுவது நல்லது, ஏனென்றால் செக்ஷன் 226 எப்போதோ நீக்கபட்டுவிட்டதே’ என்றார். கோர்ட்டில் சற்று கலகலப்பும் சலசலப்பும் ஏற்பட்டது


நீதிபதி சம்பிரதாயமாக தீர்ப்பை படித்துவிட்டு மேலும் மூன்று மாதங்கள் சிறைதண்டனையை பரிதாபமாக வழங்கினார்

ஐந்து மாதங்களுக்கு பிறகு


இப்போது.tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.