அவள்கள் அப்படித்தான்!!!

அவளுக்கு மட்டும் ஆயிரம் கட்டளைகள்!
ஆயிரம் கட்டுப்பாடுகள்!


பிறரின் அன்றாடத்தில்
தன் அடையாளத்தை தொலைத்தவளும் அவள் தான்


அவளது அவளை
அவளுக்குள் இருக்கும் அசலை
அவளைத் தவிர யாருக்கும் தெரியாது!
யாரும் அறிய முற்படுவதேயில்லையே


அவளுக்கு ஆசை என்று ஏதுமில்லை
இருந்தாலும் சொல்வதற்கில்லை
சொன்னாலும் கேட்பதற்கில்லை
கேட்டாலும் செயலுறுத்தப்படுவதில்லை


அவள்களுக்கும் தோல் தான் மேல் போர்த்தப்பட்டிருக்கிறது!
இதயம் கூட இடப்பக்கம் தான் என்றாலும்
இச்சை என்று ஏதேனும் சொன்னால்
அது பச்சை பச்சையாய் பார்க்கப்படுகிறது


அவள்களுகளுக்கு அவள்களின் நட்பை அளவோடு வைத்தல் வேண்டும்!
அவன்களின் நட்போ அறவே கூடாது!
அதையும் மீறினால் அவள்கள் வேசியெனப்படுவார்கள்


அவள்களுக்கே உரிய தனித்துவம்
என்பதெல்லாம்
அவள்களை உடன்வரும் எவரோ ஒருவருக்காய்
தொலைத்துவிட்டு வெறுமனச் சிரிப்பதுதான்
உடன்வருவது நிச்சயம் எவனோ ஒரு அவன்!


அன்று முதல் இன்று வரை
ஆயிரம் மாறினாலும்
அவள்கள் எப்பொழுதும் இப்படித்தான் வைக்கப்பட்டிருக்கிறார்கள்!
உனக்கொன்றும் தெரியாதென்று


அவள்கள் எல்லாம் தியாகிகள் தான்!
அன்னையாயும், சகோதரியாயும்,
மனைவியாயும், மகளாயும்
பிறரின் விருப்பத்திற்கு வாழ்ந்து
தன்னையே தொலைத்துவிடுவதால்


அவள்கள் அப்படித்தான்!


tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.