உறவுப் பாலம்

ராமநாதன் -கீதா இணை பிரியாத தம்பதியர் ...அவர்களுக்கு வான்மதி என்று பத்து வயதில் ஒரு மகள் உண்டு ..அவளை தவிர வேறொரு பிள்ளைக்கு பாசத்தை பகிர்ந்து கொள்ள விரும்பாத அவர்கள் குடும்ப கட்டுப்பாடும் செய்து கொண்டனர் ...ராமநாதனின் அம்மா அஞ்சம்மாள் உடல் நிலை முடியாதவள் ..இருந்தாலும் வீட்டில் சிவனே என்று கிடக்க விருப்பமில்லாமல் ஏதாவது உதவி செய்யலாம் என்று நினைத்து பூந்தொட்டிக்கு தண்ணீர் ஊற்ற முற்பட்டாள்,கால் இடறி தரையில் விழுந்தாள் பூந்தொட்டியும் உடைந்தது அவள் கையிலும் ,காலிலும் அடியும் பட்டிருந்தது…

கீதா பாசக் காரி ஆனால் ஆபிசில் இருந்த ஒர்க் டென்ஷனில் தன் அத்தை அஞ்சம்மாவை கண்ட படி திட்டினாள் அவள் மனசொடிந்து போனாள்..அவ கிடக்குறா அம்மா என்று பதறி போய் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றான் ராமநாதன் .

ட்ரீட் மெண்ட் முடிஞ்சு வீட்டுக்கு வந்தாள் அஞ்சம்மா ...ஆபிஸ் முடிந்து மாலை வீடு வந்ததும் கீதா தன் அத்தையிடம் மன்னிப்பு கேட்டாள்...

சில வாரங்களுக்கு பிறகு

கீதா நம்ம பொண்ணு நாம்ம ஆபிஸ்ல வேலை செய்யும் போது வீட்ல தனியா தான் இருக்கா எங்க அம்மாவும் உடம்பு முடியாதவங்க அதனாலே உங்க அம்மாவை எங்க அம்மாவுக்கும் ,நம்ம வான்மதிக்கும் துணையா கொண்டு வந்தா என்ன?

உங்க அண்ணனும் -அண்ணியும் அமெரிக்காவுல செட்டில் ஆயிட்டாங்க ..உங்க அம்மாவும் அந்த வீட்ல தனியா தானே இருக்காங்க ..இங்க கொண்டு வந்தா என்ன ?

கணவன் ராமநாதனிடம் அண்ணன்கிட்டே கேட்டு சொல்லுறேன் என்றாள் கீதா ..

சில தினங்களுக்கு பிறகு கீதா அண்ணனின் அனுமதியோடு கீதாவின் அம்மா ராதா அந்த வீட்டிற்கு வந்தாள் .தன் பேச்சு துணைக்கு அஞ்சலை கிடைத்ததை எண்ணி மகிழ்ந்தாள் ..சமையலில் தன் மகளுக்கும் வேண்டிய உதவிகளை செய்தாள்..பள்ளி முடிந்து வரும் தன் பேத்தியையும் பத்திரமாக பார்த்து கொண்டாள்..

ஒரு நாள் தலைவலி காரணமாக ராமநாதன் திடீரென ஆபிஸ்க்கு லீவு போட்டான் ..

கோபமாக தன் மனைவிக்கு போன் செய்தான்

கீதா ஆபிசில் பர்மிசன் போட்டு நேராக வீட்டுக்கு வா என்றான் ..கீதாவும் வந்தாள் வந்ததும் வராததுமாக கீதாவை தனியே பேசுவதற்காக வீட்டு மொட்டை மாடிக்கு அழைத்தான் ராமநாதன் ...

ஏங்க அவசரமா கூப்பிட்டிங்க...?

இல்லை கீதா உங்க அம்மாவும் -உடம்பு முடியாத என் அம்மாவும் சேர்ந்து நாம்ம இல்லாத நேரத்துல என்ன செய்யுறாங்கன்னு தெரியுமா ?

என்னங்க செய்யுறாங்க ??ஆச்சரியம் விலகாமல் கேட்டாள்..

இந்த தெரு பசங்கள மொட்டை மாடிக்கு கூட்டிட்டு வந்து கிரிக்கெட் விளையாடுறாங்க அது மட்டுமா எதிர்த்த வீட்டு மாமியோட ஜன்னல் கதவையும் உடைச்சிட்டாங்க ...அவங்க நம்ம வீட்ல கம்பிளைன்ட் கொடுக்க கூடாத அளவுக்கு அவங்களுக்கு பிடிச்ச வடு மாங்காய் ஊறுகாய் போட்டு கொடுத்து அவங்க வாயை அடைச்சிட்டாங்க ...

இந்த தெருவுல யாருமே நம்ம அம்மாக்களை பத்தி கம்பிளைன்ட் பண்ண மாட்டாங்க

ஏன்னா எல்லார் வீட்டுலயும் நம்ம அம்மாக்கள் போட்டு கொடுத்த ஊறுகாயும் -வத்தலும் தான் இருக்குது ...அவங்க இந்த வயசுல சந்தோசமா இருக்கிறது தப்பு இல்லை ..ஆனா வீணா பல பிரச்சனை வருமோன்னு பயமா இருக்குது ?

இது மட்டுமா ஒழுங்கா ஸ்கூல் உண்டு படிப்பு உண்டுன்னு இருந்த நம்ம பொண்ணையே விளையாட்டு ஜோரை காட்டி கெடுத்திட்டாங்க ...

இப்ப வீட்டுக்கு வந்தாலே படிக்கிறதை விட்டிட்டு பேட்டும் பந்தும் கையுமா தான் சுத்துறா ...அம்மாவுக்கு உதவியா இருக்குணும்னு உங்கம்மாவை கொண்டு வந்ததுக்கு அவங்க எங்க அம்மாவையும் கெடுத்து நம்ம பொண்ணோட படிப்பையும் கெடுத்திடுவாங்களோன்னு பயமா இருக்கு கீதா ?இவங்க நாம்ம வேலைக்கு போனதும் செய்யுற கள்ளத்தனம் எல்லாம் திடீர்னு நான் லீவு போட்டதாலே தான் தெரிஞ்சிக்க முடிஞ்சது ..இல்லைனா நம்ம பொண்ணோட வாழ்க்கைய விளையாட்டிலேயே வீணாக்கி இருப்பாங்க

இப்ப நாம்ம என்ன செய்யுறது கீதா ?

கீதா செய்வதறியாது திகைத்தாள் !!?? உடனே கோபம் வந்து நேரே தன் அம்மாவிடம் சென்றாள் ஏம்மா இப்படி செய்யுற ?

உங்க அண்ணனுக்கு காசும் வேலையும் முக்கியமா போச்சு அதான் என்னை அனாதையாக்கிட்டு அமெரிக்கா பொண்டாட்டியோட போயிட்டான்..நீயும் உன் உதவிக்காக தான் என்னை கூப்பிட்டே ...வீட்ல வந்து பார்த்தா நீ இல்லாத நேரத்துல பள்ளி முடிஞ்சு வந்ததும் பேத்தி கம்ப்யூட்டர்ல அவ வயசுக்கு மீறி கண்ட கண்ட கேம் எல்லாம் வருது அதே கதியா கிடக்கா அதான் அவ மனசை மாத்தி கிரிக்கெட் ஆர்வத்தை கொண்டு வந்தேன் ..மாலையிலே ஒரு ரெண்டு மணிநேரம் ஓடி ஆடி விளையாடுறதாலே ஒண்ணும் கெட்டு போயிட மாட்டா ..சம்பந்தி அஞ்சம்மாள் யாரும் பேசாம தனியா விட்டதாலே தான் சீக்கு வந்து படுத்திட்டாங்க இப்ப பாரு நான் வந்ததும் ஓடி ஆடி விளையாடுறாங்க ..இப்ப புரியுதா இத்தனை நாள் அவங்கள சீக்காக்கி போட்டது உடம்பு இல்ல மனசு ...வீட்ல இருக்குற பெரியவங்களுக்கு சோறு போட்டு நல்ல வசதி பண்ணி கொடுத்திட்டா மட்டும் திருப்தி அடைய மாட்டாங்க ..கொஞ்ச நேரம் அன்பா பேசினாலே போதும் ...இப்படி எங்களை பார்த்துக்கிறதுக்கு பதிலா பேசாம எங்களை முதியோர் இல்லத்திலேயே சேர்த்திடுமா என்றாள் ராதா

என்னை மன்னிச்சிடும்மா என்றாள் கீதா ...இனிமே உன்னோடயும்,அத்தை ,வான்மதி எல்லோரோடயும் மனம் விட்டு அன்பா பேசுறேனம்மா ..என் வீட்டுக்காரர் சம்பளமே இந்த குடும்பத்துக்கு போதுமானது ..உங்கள பாசமா ,பத்திரமா பார்த்துக்கிறது தான் எனக்கு முக்கியம் என்றாள் கீதா ...

கீதாவின் பேச்சை கேட்டு மனம் நெகிழ்ந்து போனான் ராமநாதன் ...!!!

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.