செல்லாக் காசு

அழத் தெம்பில்லாமல் அழுது முடித்துவிட்டாள் என் மனைவி. ஊரே சொந்தமுன்னு நினைச்சேன் பத்துப் பேரு கூட இன்னும் என் பொணத்த பார்க்க வரல.தம்பி மட்டும் வந்தான் சொத்த பிரிக்க. என்ன எரிசிட்டு பேசிக்கலாம்னு மற்ற சொந்தம் சொல்ல அமைதி கத்து கொண்டு இருக்கிறான். சாதி தான் பெருசு கௌரவம் தான் பெருசு அப்படின்னு நினைச்சேன் கடைசில எல்லாம் செல்லாக் காசு னு நான் செத்ததுக்கு அப்புறம் தான் புரியுது.சாதி கௌரவம் மட்டும் தான் முக்கியம் னு எங்க அப்பா சொல்லி வளந்தவன் நான்.ஆனால் அவரும் செத்ததுக்கு அப்புறமும் இத தான் நினைச்சிருப்பாரோ..?

செத்ததுக்கு அப்புறம் எல்லாம் புரிஞ்சு என்ன ..? பிரியோஜனம் உயிரோட இருக்கும் போது யாரையும் மதிக்கலையே. யாரும் என்ன வந்து பார்கலைனாலும் பரவாயில்ல என்னோட மகளாவது என்ன வந்து பார்க்க கூடாத..? எப்படி பார்க்க வருவாள் ஒரு பொண்ணுக்கு அப்பா மாதிரியா நான் இருந்தேன் மிருகம் மாதிரி தான அவள் கண்ணுக்கு தெரிஞ்சுருப்பேன்.ரொம்ப வருஷம் கழிச்சி பொறந்தா என்னோட மகள் செல்வி அவள் மேல பாசம் வைக்கிறதுக்கு பதிலா என்னோட கௌரவத்த வச்சேனே அவள் தான் என்னோட கௌரவத்த காப்பத்த போறன்னு நினைச்சேன். கடைசியா வேற ஒரு சாதிக்கரான கல்யாணம் பண்ணிட்டு வந்து நின்னாள். அவளுக்கு அவன் மனுஷனா தெரிஞ்சான் எனக்கு அவன் சாதியா தெரிஞ்சான்.

வீட்ட விட்டு தொரத்துனேன் அவள் என் மகளே இல்லன்னு தல முழுகினேன்.அத்தோட விட்டுச்சா இந்த சாதியும் கௌரவமும் என் கையால் தூக்கி வளர்த்தவள என் கையாலேயே கொலை செய்ய ஆட்கள அனுப்புனேன்.யார் செஞ்ச புண்ணியமோ உயிர் பிழைச்சிட்ட ஆன நான் செஞ்ச பாவம் ரெண்டு கையும் இழந்த்துட்டாளே.அந்த பையனும் அவள விட்டுட்டு போய்டுவான் நினைச்சேன். காதல்னா என்னனு நிரூபிச்சிட்டங்க.

இப்ப அவங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துருக்காம் அப்படியே என்ன மாதிரி இருக்குறத பக்கத்து வீட்டுக்காரங்க சொல்லி கேட்டுருக்கேன் இதனால அவங்ககிட்டயும் சண்டப்போட்டேன் என்னோட கௌரவத்த காப்பாத்த.என்னோட பேத்தி எப்படி இருக்களோ னு நினைச்சி நினைச்சி எத்தன நாள் எனக்குள்ளையே அழுது இருக்கேன் கடைசியா ஒருமுறையாவது அவள பாக்கனும் என் பேத்திய கொஞ்சனும்னு இப்படி என்னோட ஆசைகள என்னோட கெள்ரவுத்துக்காக இழந்துட்டேனே.இப்ப என்ன எரிக்கப் போறாங்க கடைசியா அவள் முகத்தை பார்க்க முடியாத போச்சே.சாதியம் கௌரவமும் என்னோடவே எரிஞ்சுப் போகட்டும் அவளாவது நல்லா இருக்கட்டும்.

யாரது..? என் உடலைத்தேடி வருவது அழுதுக்கொண்டே அவள் குரல் அழுகை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே எனக்காகத் தான் அழுகிறாளா அப்படினா அவள் என்னோட மகளா என்று தெரிவதற்குள் நான் முழுசாக எரிந்து போனேன் அவளாகத் தான் இருக்கும் என்ற நிராசையில்.

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.