ஊரில் ஒரு மாதம்

ஐரேனிபுரம் பால்ராசய்யா

துபாயிலிருந்து புறப்பட்டு மாலை நான்கு மணிக்கு திருவனந்தபுரம் விமான நிலையம் வந்து சேருவேன் என்ற கோபியின் வார்த்தையில் ஆனந்த பரவசமடைந்தார்கள் அவனது  மனைவியும் குழந்தைகளும் உறவினர்களும். மதியம் ஒரு மணிக்கு கோபியின் மனைவியும் குழந்தைகளும் அவனது அப்பா, தம்பி, மச்சான் என ஒரு கூட்டமே மார்த்தாண்டத்திலிருந்து வாடகைக்கு கார் பிடித்து மதியம் மூன்று மணிக்கே விமான நிலையம் வந்து காத்திருந்தனர். மணி ஐந்தாகியும் விமானம் வந்தபாடில்லை.

’’அம்மா அப்பா எப்பம்மா வருவாரு!’’ என்ற அவளது மூத்த மகனின் கேள்விக்கு ‘’இப்ப வந்துடுவாரு!’’ என்று பதில் சொல்லி சலித்து போயிருந்தாள் கோபியின் மனைவி சுசீலா. வழக்கமாக மாலை நான்கு மணிக்கு வரவேண்டிய விமானம் காலதாமதப்பட்டு ஒரு வழியாக ஆறு மணிக்கு வந்து சேர்ந்தது. தூங்கிபோயிருந்த மகளை தோளில் போட்டுக்கொண்டு வரவேற்பறையில் காத்திருந்த தனது மனைவி குழந்தைகளையும் உறவுக்காரர்களையும் தூரத்தில் பார்த்ததும் சந்தோஷத்தில் கை அசைத்தான் கோபி.

“ செல்வி இங்க பாரு, அப்பா வந்துட்டாரு!” தோளில் தூங்கிக்கொண்டிருந்த சிறுமியை வலுக்கட்டாயமாக உலுக்கி எழுப்பினாள் சுசீலா. குழந்தை பேய் முழி முழித்தது. கோபி ஆர்வத்துடன் குழந்தையை தூக்க, தூக்க கலக்கத்திலிருந்த குழந்தை வீல்லென்று கத்தி விமான நிலையத்தையே ஒரு வழி பண்ணியது.

’’ ஆளு மனசிலாயிருக்காது!’’ என்றாள் சுசீலா. செல்வி பிறந்து மூன்று மாதங்கள் ஆன போது கோபி துபாய் சென்றவன் திரும்ப இப்பொழுது தான் தனது குழந்தையை முதல் தடவையாக பார்க்கிறான். கோபி தனது பேண்ட் பாக்கெட்டுக்குள் கைவிட்டு விமானத்தில் பணிப்பெண்கள் கொடுத்த சாக்லெட்களை எடுத்து இருவருக்கும் தந்தான்

’’ யாத்திரையெல்லாம் சொகமா இருந்துதா?’’ என்ற சுசீலாவின் கேள்விக்கு ‘ஆமா’ என்று பதிலளித்துவிட்டு விமான நிலையத்தைவிட்டு வெளியேறினான். அவன் கொண்டு வந்த சூட்கேஸ்களை ஆளுக்கொருவராக தூக்கி டாக்சியின் டிக்கியிலும் டாப்பிலும் வைத்து கட்டிவிட்டு மார்த்தாண்டம் நோக்கி டாக்சி நகர ஆரம்பித்தது.

விமான பயணத்தின் போது இலவசமாக கிடைத்த டீ, காபி சாக்லெட் ஆகியவற்றை ஒன்று விடாமல் சொல்லிக்கொண்டிருந்தான் கோபி. ‘’ அப்படியா!’’ என்று ஆச்சரியத்தில் வாய் பிளந்தான் அவனது தம்பி சாமிநாதன்.

‘’ எனக்கும் ஒருநாள் பிளைன்ல ஏறணும், அண்ணன் மனசு வெச்சு ஒரு விசா அனுப்பி தரணும்!’’

’’ நீ பாஸ்போர்ட் கூட இன்னும் எடுக்கல, பிறகெப்படி விசா அனுப்ப முடியும்!’’ அவனது பதிலில் வாயடைத்தான் அவனது தம்பி.

‘’ பிளைன்ல குடிக்கியதுக்கு விஸ்கி எல்லாம் தருவினுமோ?’’ கோபியின் தந்தை ஆர்வமாய் கேட்டார்.

‘’ ம், ஓசுல கிட்டியதில்லா!’’

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.