விழியில் தெரியுது நெருப்பு

விழியில் தெரியுது நெருப்பு - இதன் வீச்சுக்கு யார்தான் பொறுப்பு . கண்களில் கொட்டுது அருவி - இதன் காரணம் யாரது கருவி .

வேதனை மிகுந்த பார்வை - இதில் விளக்கமாய் தெரியுது பாவை. சோதனை தாங்கிடும் கண்கள் - இதை சுயமாய் வென்றிடும் பெண்கள்.

துக்கம் கண்ணை அடைக்குது - இதில் தூக்கம் வரவோ மறுக்குது . அக்கம் பக்கம் பார்க்குது - நல் அன்புக் காகவே ஏங்குது.

எப்படியும் வாழ்ந்திட துடிக்குது - இதில் இழிதொழில் எண்ணிட வெடிக்குது . தப்பிதம் செய்திட கொதிக்குது - தான் தமிழ்ப்பெண் என்றே துதிக்குது.

கற்பினைப் பெரிதாய் மதிக்குது - வரும் கயவரைக் காலால் மிதிக்குது . பொற்புடைத் தமிழைப் பேசுது - தரும் பொருளை வாங்கிடக் கூசுது.

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.