ராஜிம், சிவாவும் தோட்டத்து வேலையில் மும்முரமாக இருந்த போதுதான் வார்டன் ஜெயராமன் நெருங்கினார்.

“தம்பிகளா! உங்களை பாக்க வரதன் வந்துருக்காம்பா! “என்றவுடன் இருவருக்கும் கோபம் தலைக்கேறியது.

“அவனுக்கு அறிவில்லை! எத்தனை தடவை சொல்ரது? அந்ததுரோகி முகத்தை பாக்க பிடிக்கலைன்னு! “என்றான் ராஜ்.

“கையில கிடைச்சான்னா கொலை பண்ணிட்டு நிரந்தரமா உள்ளேயே இருந்துருவேன்! “என்றான் சிவா.

“கொஞ்சம் யோசிங்கப்பா! இதோட ஆறு தடவை உங்கள பாக்க வந்துட்டான்.நீங்க பாக்க மாட்டேன்னுட்டிங்க.அப்படி என்னதான் சொல்ரான்னு ஒரு தடவை கேளுங்களேன்.அப்புறம் முடிவு பண்ணுங்க! “

ராஜ் சிவாவை பாக்க “அவரு சொல்ரதும் சரிதான்.என்னதான் டூமில் விடறான்னு கேப்போம்.நீங்க முன்னாடி போங்க சார். வர்ரோம்! “என்றான் சிவா.

வார்டன் கிளம்பி போக பைப்பில் கை கால் கழுவிக் கொண்டிருந்த இருவரின் நினைவும் பின்னோக்கி போனது.சரியாக ஒரு வருடத்திற்கு முன்பாக வரதன், சிவா, ராஜ் மூவரும் ஜிங்கிடி தோஸ்தாக இருந்தனர்.சின்ன சின்ன திருட்டுகளில் ஈடுபட்டு சலித்தவர்கள் பெரிய தேட்டையாக போட நினைத்தார்கள்.அவர்களிடம் வாகாக மாட்டியது ராயல் பேங்கின் பிராஞ்ச் ஆபிசிலிருந்து ஹேட் ஆபிசிற்கு பத்து கோடி ரூபாயை கொண்டு சென்ற வாகனம்.கத்தியின்றி ரத்தமின்றி வாகனத்திலிருந்து பத்து கோடியை ஆட்டையை போட்டு விட்டு ஒரு பாழடைந்த பில்டிங்கில் பதுங்கினார்கள் மூவரும்.வரதன் எப்போதும் பணத்தின் மீது கண்ணாக இருந்தான்.டிவி நியூசில் பறி போன பணத்தின் எண்கள் அறிவிக்கப்பட்டு தேடுதல் துவங்கியது.சாப்பாடு வாங்கி வரப் போன வரதன் நேராக போலீஸ் ஸ்டேசனில் அப்ரூவராக மாறினான்.போலீஸ் சுற்றி வளைத்த போது பணத்துடன் தப்பிக்க நினைத்த ராஜிம் சிவாவும் துப்பாக்கியை பிரயோகித்து ஏமாற்றமடைந்தனர்.அதிலிருந்த தோட்டாக்களை வரதன் ஏற்கனவே அப்புறப்படுத்தியிருந்ததால் எளிதாக மாட்டி கொண்டனர்.துப்பாக்கியை கண்டு பயப்படாமல் நெஞ்சை காட்டிய இன்ஸ்பெக்டர் சிவாவின் தலையில் தட்டி “அதில் தோட்டா இல்லை! “என்ற போது இருவரும் செய்வதறியாது திகைத்து கூனி குறுகினர்.பணம் பறிக்கப்பட்டு இரண்டு வருட சிறைத்தண்டனையோடு இருவரும் உள்ளே தள்ளப்பட்டனர்.வரதன் அப்ரூவரானதால் விடுவிக்கப்பட்டான்.

பழையதை நினைத்தபடி இருவரும் பார்வையாளர் பகுதிக்கு வந்தனர்.கம்பிக்கு பின்னால் நின்ற வரதன் சினேகமாக சிரித்தான்.“துரோகி! இங்க எதுக்குடா வந்த? “என்றான் ராஜ்.

“எம் மேல நீங்க கோபமா இருப்பீங்கன்னு தெரியும்.நான் சொல்ரதை முதல்ல கேளுங்க! “

“என்ன சொல்ல போற துரோகியே! “

“பாரு ராஜ்! நாம பத்து கோடிய ஆட்டய போட்டது உண்மைதான்.ஆனா அதை நாம எப்பவுமே செலவு பண்ண முடியாது.ஏன்னா நோட்டோட நெம்பர் எல்லா டிவியிலும் வந்துருச்சு.நாம எப்ப செலவு பண்ணினாலும் மாட்டிக்குவோம்.அதான் யோசிச்சேன்.2000 ரூபாய் நோட்டா நூறு நோட்டு.ஒரு கட்டுக்கு இரண்டு லட்சம்.நான் என்ன பண்ணினேன் தெரியுமா? அதிலிருந்து கட்டுக்கு 2000திருடுனேன்.!”

“அதெப்படிடா முடியும்? எங்களை கிறுக்கனாக்குறியா? எண்ணுணா 2000குறைவது தெரியாதா? “

“கைல எண்ணுணா தெரியும்.கவுண்டிங் மிசின்ல எண்ணுணா கரெக்டா இரண்டு லட்சத்தை காட்டும்.ஆனா கட்டுல. 2000 கம்மியாத்தான் இருக்கும்.!”

“அதெப்படி முடியும்? “

“முடியும். இரண்டு லட்ச ரூபா கட்டுல இரண்டு நோட்டை எடுத்துட்டா எவ்வளவு இருக்கும்.?”

“ஒரு லட்சத்து தொண்ணுத்தி எட்டாயிரம்! “

“ரைட்டு! இப்ப எடுத்த நோட்டுல ஒரு நோட்டை இரண்டா மடிச்சு நோட்டு கட்டுக்குள் நடுவில் வைத்து பெவிகால் போட்டு ஒட்டினால் கவுண்டிங்கில் ஒரு பேப்பர் சேர்ந்து வந்து இரண்டு லட்சமா காட்டிரும்.இரண்டு லட்சத்துக்கு இரண்டாயிரத்தை திருடினால் பத்து கோடிக்கு எவ்வளவு வரும்னு யோசிங்க! “

“எவ்வளவு வரும்? “

“நான் கணக்குல வீக்.அதை இன்னும் எண்ணலை.நீங்க போலீஸை சுட்டு கொலை கேஸாக கூடாதுன்னுதான் தோட்டாவை எடுத்தேன்.நீங்க வெளிய வந்ததும் உங்க பங்கை வாங்கிக்கலாம்.!”

“எப்படிடா! பேங்குல கண்டு புடிக்க மாட்டாங்களா? “

“மிஷின்ல எண்ணுனா கண்டு பிடிக்க முடியாது.பணம் கட்டா ரொட்டேசனாகும்வரை இந்த உண்மை தெரியாது.அப்படி கண்டு பிடிச்சாலும் நம்ம யாரும் சந்தேகப்பட மாட்டாங்க.இப்ப பணத்தோட நம்பரை யாரும் நோட் பண்ண மாட்டாங்க.!”

“வரதா!எங்களை மன்னிச்சிடுடா! “

“வெளிய வாங்க! திருந்தி வாழ்வோம்.உங்க பணத்தை எப்ப வேணா வாங்கிக்கலாம்.முக்கியமா நான் துரோகி இல்லை.!”

வரதன் கம்பீரமாக நடந்தான்.ராஜீம் சிவாவும் கை குலுக்கி கொண்டனர்.

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.