வீட்டுக்குள் என்னடா பண்ணிட்டு இருக்கே?

இன்று மனிதனுக்கு என்ன தேவையோ அதைச் செய்ய முடியுமான்னு பார்த்திட்டு இருக்கேன்.

என்னடா! பசியே இல்லாமல் இருக்க என்ன வழின்னு பார்க்கறியா? என்று சொல்லி வயிற்றைத் தடவினான் சிவா.

சாரி உன்னைச் சாப்பிடச் சொல்ல மறந்துட்டேன். சாப்பிட்டு விட்டு வா! உன்னிடம் ஒரு சந்தேகம் கேட்கவேண்டும். நீதான் அணுக் கொள்கையைக் கரைத்துக் குடித்தவனாயிற்றே!

சரி! என்ன டிஃபன் இன்று?

பூரி வித் பொடேடோ குருமா…தட்டில் ஸ்பூன் போட்டு எடுத்து வரட்டுமா?

சரி! சமையல்கட்டிற்கே நான் சென்று எடுத்துவருகிறேன்.

ஹீலியத்தின் வெப்ப ஈர்ப்புத்தன்மையைக் குறைக்கின்ற மரம்,செடி நம்மிடம் இருக்கிறதா?

எல்லா செடிகளுக்குமே அந்த சக்தி கிடையாது. ஆனால் சில ஆக்சிஜன் அதிகம் வெளியிடுகிற மரத்திற்கு அந்த சக்தி அதிகம் உண்டு. இதனால் பூமியில் நச்சுத்தன்மையைக் குறைக்கலாம்.

இனி வருங்காலம் ஆக்சிஜன் சிலிண்டருடன்தான் போகவேண்டுமோ?

ஆமாம்! மரம் வளர்க்க மறந்தால் இப்படித்தான். ஒரு மூங்கில் நாளொன்றுக்கு 850கிராம் ஆக்சிஜனை வெளியிடுகிறது. யார் அந்த வேலையைச் செய்கிறார்கள்?

பிளாஸ்டிக் யுகத்தில் வாழ்கிறோம். தண்ணீரில்லாமல் சாகப்போகிறோம்.

அப்ப நாங்கள் இந்த யுகத்தில் அன்னியராகி விட்டோம் இல்லையா?

யார்டா அது பேசியது?

ஒன்றுமில்லை…நீ கவனி………ஓருயிரிக்கும் உணர்வு உண்டு என்று சொல்கிறோம் இல்லையா? இசையை அது இரசிக்கும் என்று சொல்கிறோம் அல்லவா? அப்ப மனிதர்கள்போலத் தாவரங்கள் பேசுவதை நாமும் கேட்க முடியும் என்பதற்கான இயந்திர இணைப்புகளை இணைத்துப் பேசும்படி வைத்திருந்தேன். நல்ல ரிசல்ட்.

மாமரம் நாம் பேசியதற்குப் பதில் பேசியதைப் பார்த்தாயா! மகிழ்ச்சிப் பிரவாகத்தில் வினோத் திளைத்தான்.

எத்தனைநாள் இதற்காகப் பாடுபட்டிருப்பேன் தெரியுமா? பத்திரிகைக்கு இந்த செய்தியினை அனுப்பவேண்டும்.

வினோத் காதிற்குள் வைத்திருந்த ஒலி வாங்கியில் ஏதோ செய்தி வர சட்டென நகர்ந்து குனிந்தான்.

சிவா தான் மறைத்து வைத்திருந்த கத்தியைத் தவறாக கீழே பாய்ச்சினான்.

கீழே குனிந்து தன்னைக் காத்த மரத்திற்கு நன்றி சொன்ன வினோத்

மரத்தில் காமெராவுடன் இணைந்த கருவி ஒன்றை வைத்துள்ளேன். அது எனக்கு செய்தி கொடுக்கும். சிவாவின் இரு கைகளையும் கட்டி நண்பன்னு உனக்கு இடம் கொடுத்தேன். என்னடா! ஆய்வகத்துல எழுதி வச்சிருக்கிற குறிப்பெல்லாம் ஆன்லைன்ல அப்படியே வருதுன்னு யோசிச்சேன். இப்பதான் யாருன்னு தெரியுது. படிக்கப் படிக்க அறிவு தெளிவாகும். அதுக்குத்தான் டாக்ட்ரேட் தர்றாங்க. ஆனா உன்னைமாதிரி வெளிநாட்டிற்கு எடுத்து விற்க அல்ல! இரு போலிஸ் வந்துடும் என்றான்.

பொன்.இராம்

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.