இவளே கவிதை

வானில்வரும் நிலவில் வண்ணமயில் அழகில்

கன்னங்குழிச் சிரிப்பில் காதலதன் திளைப்பில்

கன்னிவிழி அழைப்பில் காமத்து இணைப்பில்

எங்குஇல்லை கவிதை எதிலில்லை கவிதை


அன்னையவள் அணைப்பில் அன்புதரும் நினைப்பில்

அலுக்காத உழைப்பில் அடங்காத அன்பில்

கறுக்காத நெஞ்சில் கள்ளமிலாத் தொண்டில்

எங்குஇல்லை கவிதை எதிலில்லை கவிதை


பொங்குகின்ற சினத்தில் புகழுகின்ற சொல்லில்

ஏங்குகின்ற மனதில் ஏழைகளின் வயிற்றில்

தாங்குகின்ற இதயத்தில் தள்ளாடும்முதுமையில்

எங்குஇல்லை கவிதை எதிலில்லை கவிதை


அரசியல் சாக்கடையில் அங்காடித் தெருக்களில்

குரங்கு சேட்டையில் குழந்தையதன் மழலையில்

தென்றலதன் சுகத்தில் தெய்வீக இசையில்

எங்குஇல்லை கவிதை எதிலில்லை கவிதை


எங்குஇல்லை கவிதை எதிலில்லை கவிதை

என்றபோதும் என்னவளை கைபிடித்த நாளாய்

அன்னவளுடன் வாழும் அற்புத நாட்கள்தான்

உயர்ந்தக் கவிதையாய் உள்ளமெலாம் நிறைகிறது


எதிர்பார்ப்பில்லா அன்பை என்றும் தருவதிலும்

உறவுகளின் மேன்மையை உணர்ந்து போற்றுதலிலும்

இன்முகமாய் இன்னல்களை எதிர்கொள்ளலிலும்

இருக்கிறது கவிதையென்றால் இவளே கவிதையென்பேன்!

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.