அம்மு..குட்டிமாவை பார்த்தியா.? எப்பவும் இந்த நேரத்தில சாப்பிட வந்துடுவா.. இன்னிக்கு இன்னும் காணோமே.. என்ன ஆச்சோ என்னவோ ? கடவுளே...

என் மகள் அம்மு .. உள்ளறையிலிருந்தே பதில் அளித்தாள்.. அது பாட்டுக்கு வந்து சாப்பிடுமா? நீ ஏன் இவ்வளவு கவலை படற?

குட்டிமா என்பது எங்கள் தெருவிற்கு புதுசா வந்துருக்கும் நாய் குட்டி. நான் தினமும் காலை, இரவு பாலும் ,, மத்தியானம் சிறிது சோறும் .. அவளுக்கு மட்டும் மல்ல.. அவளை போன்ற இன்ன சில பேருக்கும் தினமும் வைப்பதுண்டு.. இன்று அனைவரும் வந்து சென்று விட்டார்கள்... என் குட்டி மாவை தான் இன்னும் காண வில்லை..

கண்கள் அசதியில் சொருகினாலும் .. மனம் ஏனோ வெளியே நிமிடத்திற்கு நிமிடம் எட்டி பார்த்து கொண்டு இருந்துது..

அம்மா.. பசிக்குது சாப்பிடலாமா..

நீ சாப்பிடு தங்கம்.. அம்மாக்கு பசி இல்லை.. கொஞ்சம் நேரம் கழிச்சு சாப்பிடறேன்.

வா மா.. சும்மா சொல்லாத.. காலையிலே சாப்பிட்டது... அதெப்படி பசிக்காம இருக்கும்.. உன்னை பத்தி எனக்கு தெரியாத.. உன் குட்டி மா வந்துரும் வா மா.. என்று என் கையை பிடித்து இழுத்து வந்தாள்..

அப்போது... வெளியில் குலைக்கும் ஓசை கேட்டது.. அம்மு குட்டி மா னு நினைக்கிறன்.. என்னை விடுடா.. போய் பார்த்துட்டு வரேன்..

வெளியே ஓடி போனேன்.. என் குட்டி மா தான்.. வாஞ்சையுடன் என் காலை நக்கி.. வாலை ஆட்டியது .. எங்கடா போன நீ? அம்மா எவ்வளவு பயந்துட்டேன்,, இனிமே நேரத்துக்கு வந்துடனும் சரியா? என்று கூறியவுடன் புரிந்தது போல்.. வாலை ஆட்டிவிட்டு சோறு சாப்பிட தொடங்கியது.

மனம் நிம்மதி அடைந்தவுடன்.. உள்ளே வந்தேன்..
என் மகள் கோபத்துடன் அமர்ந்து இருந்தாள்.. செல்லம் இன்னும் சாப்பிடலையா நீ ? ஏன் மா ?

முகத்தை திருப்பி கொன்டாள்.

மெல்ல அவளருகே சென்று முகத்தை திருப்பினேன்.. கண்களில் நீர் ..

என்னடா மா?

போ மா. நீ ரொம்ப மோசம்.. என்னை விட உனக்கு அதுங்க தான் முக்கியம் ஆயிடுச்சு லா.

அப்படி இல்ல டா?...

போ நீ அது கூடவே இரு.. எனக்கு தான் யாருமே இல்லை.. என்று அறைக்கு சென்று விட்டாள்.

இரவும் சாப்பிட வில்லை..எவ்வளவு அழைத்தும் பதிலே இல்லை..

என் அம்முக்கு உண்மையை சொல்லித்தான் ஆக வேண்டும்.. புரிந்து கொள்வாளா.. என்னை வெறுத்து விடுவாளா.. பாக்கலாம் ..

மேல ஏறி என் பெட்டியை எடுத்தேன்.,. அதில் ஒரு பழைய செய்தி தாள் .. பத்திர படுத்தி வைக்க பட்டு இருந்துது..
அதை எடுத்து கொண்டு மௌனமாக அவள் அறைக்கு சென்றேன்..

அம்மு.. நீ பேச மாட்டே .இந்த அம்மாக்கு உன்னை விட்ட யாரும் இல்லைடா....இந்தா இந்த நியூஸ் பேப்பரை படி... என் கண்ணீரை அடக்கி கொண்டு திரும்பி தள்ளி அமர்ந்து கொண்டேன்..

செய்தி தாளை படித்தவள்.. சில காண நேரம் மௌனமாக கழிந்தது.... அம்மா .. அப்ப..

எனக்கு கல்யாணம் ஆன 1 வருஷத்திலேயே என் வீட்டுக்காரர் என்னை விட்டு இன்னொரு பொண்ணை கூட்டிட்டு ஓடி போய்ட்டார் மா. .. உங்க பாட்டியும் நானும் மட்டும் தனியாத்தான் இருந்தோம். .

அப்போ எனக்கு எதிர்காலத்தை நினைச்சு பயந்துட்டே இருப்பேன்.. தூக்கமே வராது.. அப்ப தான் ஒரு விடியற்காலை.. பக்கத்தில் இருக்கும் குப்பை தொட்டியில் ஒரு குழந்தை அழும் சத்தமும்.. நாய்கள் குறைக்கும் சத்தமும் கேட்டுச்சு.. உடனே ஓடி போய் பார்த்தேன் .. அங்கே.. தேவதை மாதிரி ஒரு பெண் குழந்தை.. அந்த குழந்தையை எலிகள் மற்றும் வேற யாரும் நெருங்காம.. தெரு நாய்கள் காவல் காத்துட்டு இருந்துச்சு மா..

அப்புறம் குழந்தையை தூக்கிட்டு வந்து.. சுத்தம் பண்ணி.. போலீஸ் வந்து.. காப்பகம் கொண்டு போய்ட்டாங்க.. ஆன விளம்பரம் பண்ணி கூட.. ஒரு மாசம் யாருமே வரல.. நான் போய் மறுபடியும் கேட்டு அவளை தூக்கிட்டு வந்துட்டேன்... என்ன அந்த தேவதையோட பார்வை அப்படி.. இன்னிக்கு வரைக்கும் அவளும் என் அம்மாவும் தான் டா என் வாழ்க்கைக்கு ஆதாரம்..

இப்ப அந்த தேவதை....

நான் தான் இல்ல மா..

ஆமாம் டா..

ஆறறிவுள்ள ஒரு உயிர் .. இன்னொரு உயிரை மதிக்க மாட்டேங்குது..துச்சமா மதிச்சு தூக்கி போட்டுட்டு போய்டுச்சு.. ஆன ஐந்தறிவுள்ள அந்த ஜீவன்கள்.. என் தேவதை எனக்கு கிடைக்க காரணமா இருந்துச்சு மா. ,,

அதனால ....

என் அம்மு என்னை கட்டி கொண்டாள்..

அடுத்த நாள் காலை ..

அம்மா.. இன்னிக்கு.. நான் பால் வைக்கிறேன் மா.. உன் செல்லங்களுக்கு

சிரித்து கொண்டே தலை அசைத்தேன்..

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.