1

"சுமதி.... அம்மா.... யாருமே இல்லையா வீட்டில்?", என்று கேட்டவாறே கதவை திறந்து உள்ளே வந்தான் செல்வம். பிரபல மென்பொருள் நிறுவனத்தில் பல லகரங்களில் சம்பளம் வாங்குபவன். சுமதி, அவன் மனைவி, அவளும் அதே துறையில் வேலைப் பார்க்கிறாள். தன் தாயார் சரஸ்வதியையும் தன்னுடன் அழைத்து வந்துவிட்டான்.

சென்னையின் போக்குவரத்து நெரிசலில் சிக்கி, களைப்பின் உச்சியில் வீட்டிற்கு வந்தவனுக்கு மலர்ந்த முகத்துடன் மனைவி வீட்டிலிருந்து அவனை உபசரித்தால் நன்றாகதான் இருக்கும். ஆனால், அது அவன் வாழ்க்கையில் கற்பனைக்கும் ஒவ்வாத விஷயம். படித்து வேலைபார்க்கும் பெண்ணை விரும்பி மணந்து, இப்பொது வேலைக்கு போகாதே என்று கூறி, ஏற்ற தாழ்வின்றி ஒன்றுபட்டு இருக்கும் அவர்கள் வாழ்க்கையை குலைக்க விரும்பவில்லை. என்றாலும், இன்று ஏனோ மனது தன் மனைவி தனக்கு உபசரிக்க வேண்டும் என்று அலைபாய்ந்தது.

பலவற்றை யோசித்தவாறே தன் தாயின் அறைக்கு வந்தவன், அங்கு அவர் கோபமே உருவாய் அமர்ந்திருந்ததைப் பார்த்து அருகில் சென்று அமர்ந்து, "அம்மா, சாப்பிட்டீர்களா? காபி கலந்து தரவா? ஏன் என்னவோ போல் இருக்கிறீர்கள்?".

"ஆமாம், நீ அடுப்படியில் கிடந்து வேகவா உன்னை படிக்க வைத்தேன். என்னவோ போ நீங்கள் குடும்பம் நடத்துகிற அழகு எதுவும் எனக்கு பிடிக்கவில்லை. என்றாவது ஒருநாள் சீக்கிரம் வீட்டிற்கு வந்து, வேலைகளை செய்வோம் என்று இருக்கிறாளா? நேற்றானால் வந்தவுடன் படுத்துவிட்டாள். பாதி நாட்கள் இரவில் கடையில் வாங்கிக்கொள்கிறீர்கள். இது என்ன குடும்பமா இல்லை சத்திரமா?", என்று தன் மனதில் தோன்றியவற்றையெல்லாம் முன்பின் யோசிக்காமல் பொரிந்து தள்ளினாள், சரஸ்வதியம்மாள்.

ஏற்கனவே, களைப்புற்றிருந்த செல்வத்திற்கு அம்மாவின் பேச்சு சலிப்பூட்டியது. "அம்மா, என்ன பேசுகிறீர்கள், அவள் யாரம்மா? என் மனைவி, அவள் அலுவலகத்தில் வேலை முன்பின்னாகத்தான் இருக்கும்", என்றவன் டையை கழற்றியவாறு எழுந்து, "அம்மா, இது நம் குடும்பம், நாம் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழவேண்டும்", என்றபோது தன் தாயின் முகக்குறிப்பைப் பார்த்து, "உங்கள் இஷ்டம், அம்மா", என்று சொல்லியபடி மாடியிலிருந்த தங்கள் அறைக்குச் சென்றான்.

குளித்து உடை மாற்றிவிட்டு வந்தவனுக்கு நன்றாக பசித்தது. கதவு திறக்கும் சத்தம் கேட்டு கீழே வந்தவன், தன் மனைவி சோர்ந்து வந்து சோபாவில் அமர்வதைப் பார்த்து அருகே சென்றான். அவனைப் பார்த்ததும் சுமதி முறுவலுடன், "அப்போதே வந்தாயிற்றா? அத்தை எங்கே? காபி போட்டு தாருங்களேன், இன்று ஒரே டென்ஷன்", என்றாள். சிறிது நேரம் அவளை கூர்ந்து பார்த்த கணவன், "என்ன டென்ஷன்உனக்கு? இன்று ஏன் இவ்வளவு லேட்?", என்றான்.

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.