இன்றென் கருவறை ஒரு முறை புரண்டது

இன்றென் கருவறை ஒரு முறை புரண்டது

சொல் தசை மீது போர்த்தப்பட்ட திமிர் கொண்ட தோல் காற்றின் வாடைக்கெல்லாம் வயப்பட்டு காலனாய் மேல் கர்ச்சிக்கிறதே!

மருந்தொன்று கொண்டு வா இல்லை ஒரு திராவகம்! பொசுங்கட்டும் என் தூக்கம் கலைக்கும் துரோகி.

உடன் அவ்வையாய் மாறும் உபாயம் அறியப் படாததால் குஷ்டக் கிருமிகள் என் மீது புகுந்து விரல் தின்று விகசிக்கட்டும்.

போ இனி அவ்வாறு பார்க்காதே

தோலைக் கிழிக்கும் வழியறியா பிச்சிக்கு மனமொளிக்கத் தெரிவதில்லை.

கருப்பை சுழன்று அவள் மூளை அடைந்ததை எந்தச் சபையில் கூறுவாளவள்?

விலகு!ஐயோ!அணை! இல்லை ! இவள் பெண்மையைக் கொல்!

அல்லது மற்றொரு முறை அந்தக் கண்களைக் கொஞ்சம் மூடிக் கொள் .

இவளைக் கொல்வது இலகுவாய் போகும்.

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.