கொஞ்சல் மொழி

இயற்பெயர் தவிர செல்லப்பெயர்கள் கொஞ்சல் மொழிகளை விரும்புபவர் யார்? அனைவரும்தான் இல்லையென்றுரைப்பின் பொய் என்றே நினைப்பேன். எத்தனை வயதானாலும் அன்புடன் செல்லப்பெயரிட்டு அழைப்பதை அன்புள்ளம் கொண்டு வரவேற்பர். வெட்கம் தயக்கம் காரணமாக மறுப்பது போல் மறைக்கலாம் அவ்வளவே. இவையெல்லாம் காலம்காலமாக இருந்து வருபவைதான் ஒன்றும் புதிதல்ல . பெயர்கள் காலத்திற்கேற்ப மாற்றம் பெறலாம் கொஞ்சல் போவதில்லை.

ஆண்கள்தான் பாவம் சட்டென்று வெளிப்படுத்திட இயலாமல் தவிப்பர் நாலு பேர் இருக்கையில் பிள்ளைகளைக் கொஞ்ச தயங்கி விழிப்பர். பெண்கள் அதகளம்தான் எத்தனை வயதானாலும் பிள்ளை பேரப்பிள்ளை என்று எல்லோரையும் வாரி அணைத்து உச்சி முகர்வர் செல்லப்பெயர்கள் அதன் போக்கில் வந்து விழுந்து கொண்டே இருக்கும் .

அன்பின் மொழிதானே இது பிடித்தவரிடம் பேச என்ன தடை...

குழந்தைகளைக் கொஞ்சும் போதுதான் உலகில் செல்லப்பெயர்களுக்கான பற்றாக்குறையோ என எண்ணத் தோன்றும். எவ்வளவு கொஞ்சியும் தீராத தாகமாக ஏங்கும் மனது.

மொழி பிரச்சனையைே இல்லை . அர்த்தம் கொண்டவை அர்த்தமற்றவை அகராதியில் இருப்பவை இல்லாதவை என அனைத்தும் இடம் பெறும் கொஞ்சலில் . எல்லா சொல்லும் அன்பிற்கே வார்க்கப்பட்டது. செல்லப் பெயர் பெரும்பாலும் வல்லினம் (க ச ட த ப ற என்னும் எழுத்துகள்) கொண்டு அமைக்கிறோம். இவற்றில் வெளி நாட்டவர் வேறு . பொங்கும் அன்பை கொட்டி தீர்த்திட துடிக்கும் மனது பிள்ளையை கட்டிப்பிடித்து செல்லப்பெயர்களை அன்பில் குளிக்கவைத்து இனிப்பாக மொழிந்து கொண்டே இருக்கிறது அது ஒரு தீரா தாகமாக உருவெடுக்க ...தேடும் நா ஏதேதோ சொற்களை எல்லாம் கொஞ்சி தாகம் தீர்க்க அலைகிறது. தீரா தாகம் குழந்தைகள் பேரக்குழந்தைகள் உறவினர் குழந்தை நண்பர் குழந்தை என அண்டம் சுற்றிக் கொண்டே இருக்கிறது. செல்லப்பெயர்கள் நம் தாய்மொழியில் உச்சரிக்கையில் மாத்திரையின் அளவை அதிகரித்து அன்பாகக் கொடுக்கிறோம். எடுத்துக்காட்டாக க் என்பது அரை மாத்திரை எனில் நாம் செல்லப்பெயரிட்டு அழைக்கும் போது வெல்லக்கட்டியை வெல்ல்லக்கட்ட்டி என அழுத்தம் கொடுத்து மகிழ்கிறோம். இன எழுத்து தொடரும் வகையிலும் அழைக்கிறோம். (அஜ்ஜி -ஜ் ,ஜ்+இ= ஜி , கண்ணு - ண், ண்+உ=ணு , செல்லம்....) , இகர உகரத்தில் முடியும் வகையில் அமைக்கிறோம். (டாலு - டா ல்+உ=லு)

பிள்ளைகளை பேரப்பிள்ளைகளை செல்லப்பெயரிட்டு அழைப்பதில் வேண்டுமானால் பெண்கள் முன்னணியில் இருக்கலாம் .ஆனால் காதல் மொழிந்து பிடித்த இதயத்தை செல்லமாக பெயர்கள் இட்டு அழைப்பதில் ஆண்களுக்கு நிகர் ஆண்களே. இந்த செல்லப்பெயர்களில் மயங்கி வாழ்நாளை ஓட்டியவர்கள் உண்டு. என்ன புத்திசாலி பெண் பொய் வார்த்தைகளை இனம் கண்டு பிடிப்பாள் . உண்மையில் உண்மையாக செல்லப்பெயரிடும் ஆண்கள் உணரப்படுகிறார்கள் உயிரோட்டத்துடன் பெண்களால். (வெளியில் காட்டிக்கொள்ள மாட்டார்கள்). ஆண்கள் இட்டு அழைக்கும் செல்லப்பெயர்கள் பெண்களுக்கு வரமே. சாபமாகாமல் இருக்க தனித்துவமும் உண்மையும் போதும் .

செல்லப்பெயர்களில் சில...

தங்கம் வைரம் வைடூரியம் மாணிக்கம் மரகதம் கோமேதகம் பவளம் நீலம் அஜ்ஜி புஜ்ஜி டாலு கண்ணு செல்லம் நாய்க்குட்டி சிங்கக்குட்டி வெல்லக்கட்டி முத்தா ....

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.