கடமைதான் ... !  யார் இல்லை என்று சொன்னது?

அனிதா சொல்வது உண்மைதான் ! இப்ப இருட்டின பிறகு போய் புடவை வாங்கறதுக்கு நாளைக்கு கார்த்தாலே போவதுதான் நல்லது என்று சுரேஷிற்கு பட்டது... " சரி அனிதா! நாளைக்கே போவோம் " என்றான்... சமையலை முடிக்க சென்றாள் அனிதா..


காலை 9 மணி... டிபின் பொங்கல் சாப்பிட்டு விட்டு வாசலில் பக்கத்துக்கு வீட்டுக்காரருடன் பேசிக்கொண்டிருந்தான் சுரேஷ்.. அன்று ஞாயிற்றுக்கிழமை அதனால்தான் இந்த நிதானம்.... அப்பா, அம்மா தங்கை சுமதி வந்தனர்... அவர்களுடன் சுரேஷ் உள்ளே சென்றான்..

"வாங்கோ ! வாங்கோ !" அழைத்துவிட்டு 10 நிமிடங்களில் காபியுடன் வெளி வந்தாள் அனிதா...

" கிளம்பலாமா? நேரம் ஆறது... இப்ப போனால்தான் மத்யானம் திரும்பமுடியும்.." மாமியார் சொன்னதைக் கேட்ட அனிதா " நிச்சயமா.. நாங்க ரெடி " என்றாள்.

இரண்டு ஆட்டோவில் கிளம்பினர்... தி.நகர் குமரன் கடைக்கு..

சுமதி அனிதாவின் நாத்தனார்.. அவளுக்கு அடுத்த மாதம் கல்யாணம்.. அதற்குத்தான் புடவை வாங்கும் படலம் இன்று..


அனிதாவும் , சுரேஷும் தனிக்குடுத்தினம் வந்துவிட்டனர்.. அவர்களுக்கு கல்யாணம் ஆகி 15 ஆண்டுகள் ஆகிறது... குழந்தை பாகியம் இல்லை.. அவர்கள் அதைப் பொருட்டாகவே எடுத்துக்கொள்ள வில்லை... சில சில பேச்சுக்கள், மனக் கசப்புகள் என்று ஆன பிறகு அனிதா முடிவிற்கு வந்தாள் தனிக்குடுத்தினம் இதற்கு தீர்வாகும் என்று... அதற்கு சுரேஷும் ஆமோதித்தான்... இவன் இரண்டாவது மகன்.. இவனுடைய அண்ணன் குடும்பம் கல்யாணம் ஆன உடனே தனிக்குடுத்தினம் சென்றாயிற்று.. பெற்றவர்களை கவனிப்பதுவும் இல்லை... இவர்களுக்கு ஒரே தங்கை சுமதி..

ஆனால், அனிதாவும், சுரேஷும் அப்படி அல்ல.... இவர்கள் தனியாக வந்தார்களே ஒழிய முழுக்க முழுக்க பெற்றோரையும், தங்கையையும் கவனிப்பது இவர்கள்தான்... இரண்டு தெருக்கள் தள்ளி வீடு.. அவ்வளவுதான்..

சுமதி வேலைக்கு ஒன்றும் போகவில்லை.. பி.ஏ. முடித்தாள்.. வேலைக்குப்போகும் எண்ணம் ஒன்றும் இல்லை... இந்த வரன் நல்லதாய் அமைந்தது... ஒரே பையன் ஒரு பெண்.. நல்ல குடும்பம்.. அவர்களும் வேலைக்கு செல்ல வேண்டாம் என்று சொல்லவே நிச்சயம் செய்துவிட்டனர்... அப்பாவிற்கு மாதம் ரூபாய் 8000 பென்ஷன் வருகிறது... வேறு பெரியதாய் ஒன்றும் சேமிப்பு இல்லை...


சுரேஷிடம் அனிதா சொன்னாள்... " உங்களுக்கு இருப்பது ஒரே தங்கை.. பெரியவரும் ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லிவிட்டார்... அதனாலே நீங்கள் கட்டாயம் அவளுக்கு செய்யவேண்டியதை செய்யணும் .. முடிந்தவரை நல்லா செய்வோம் " அனிதா ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறாள்..

"சரி! பார்போம் ! " என்றான் சுரேஷ்..

இதோ புடவை கடையில்...

சுமதிக்கு 5 புடவைகள் எடுத்தாயிற்று... மாமியார் அனிதாவிடம் " கொஞ்சம் கம்மி விலையிலேயே எடு அனிதா! செலவு ரொம்ப இருக்கு ! " என்றாள்..

"நான் பார்த்துக்கறேன் அம்மா! நீங்கள் கவலை படாதீங்கோ ! " என்றாள் மிகவும் பன்பாய்...

வேஷ்டிகள், மற்றவர்களுக்கு துணிமணிகள் என்று பெரிய லிஸ்ட் , கார்டு தேய்த்தான் சுரேஷ்... அனிதாவைப் பார்த்தான்... " எல்லாம் சரியாய் இருக்கும் " என்பதுபோல் தலை அசைத்தாள்...

கட கட வென நாட்கள் நகர்ந்தன... கல்யாண நாளும் வந்தது... " கெட்டி மேளம் ! கெட்டி மேளம் " முழங்க கல்யாண வைபவம் நன்கு முடிந்து சுமதி புகுந்த இல்லத்திற்கும் சென்றாள்...

ஒரு வாரம் கழித்து ஒருநாள் , அனிதாவும், சுரேஷும் அம்மா அப்பாவைப் பார்க்க சென்றனர்...


" என்ன இருந்தாலும் சுரேஷ், உன் அண்ணனுக்கு இன்னும் நல்ல ஷர்ட் துணி வாங்கி இருக்கலாம்... அவனுக்கு குறை அவன் மனைவிக்கு புடவையிலே ஒன்னும் ஜரி இல்லையாம். ! " ஏதோ குற்றம் சொல்வது போல் அம்மா சொன்னது சுரேஷிற்கு கோபம் வந்தது... புரிந்துக்கொண்ட அனிதா அவன் கையை அமிக்கினாள்.. தள்ளி விட்டு அவன் பேசினான்...


" அம்மா! நிறுத்து.! நீ புரிஞ்சுண்டு தான் பேசறியா? இல்லை வீம்பிற்கு பேசறியா? நாங்கள் இரண்டு பேருமே கஷ்டப்பட்டு இந்தக் கல்யாணத்தை நடத்தி இருக்கோம்.... உடம்பாளையும் சரி, பணத்தாலேயும் சரி... அவன் ஒரு துளி அசைக்கலே.. அவனை ஒரு வார்த்தைக் கேட்க முடியலே,,,, இங்க பேசறே? என்ன?

அப்பா இவன் பேசியது சரியென்றே நினைத்தாலும் மனைவியை விட்டுக்கொடுப்பாரா? " சுரேஷ் ! என்ன அம்மாவை இப்படி எல்லாம் பேசறே? என்னமோ நீ மட்டும்தான் எங்களை தாங்கறா மாதிரி? எல்லாம் அவனும் எங்களுக்கு செய்யறான்..." என்றார் அழுத்தக் குரலில்...


அதிர்ந்தான் சுரேஷ்... அனிதா ஒன்றும் புரியாமல் சிலையானாள்...

"சரி.. நாங்க வரோம் "என்று உடனே கிளம்பினான் சுரேஷ்... அனிதா பின் தொடர்ந்தாள்..

வீட்டிற்கு வந்ததும் சுரேஷ் கோபப்பட , அனிதா சமாதானப்படுத்த முயன்றாள்..

அவள் சொன்னாள்..." அவர்களுக்கு இரண்டுப்பேரும் வேண்டும்... ! " என்றாள் உறுதியாய் .... சுரேஷிற்கு அப்பொழுதுதான் புரிந்தது...

அங்கு அம்மா அப்பாவிடம்.... " நமக்கு ரெண்டு பேரோட தயவும் வேண்டும்.... இவன் சரி இல்லை என்றால் அவனிடம் போவோம்... பார்த்துக்கலாம். " என்றாள் ....

என்ன உலகமடா??


மைதிலி ராம்ஜி

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.