தன்னைக் காட்டியது !

கவிதை by :கவிஞர் பூ.சுப்ரமணியன்

மிதக்கும் மேகங்கள்

இடி மின்னலுக்கு.

கருமை காட்டியது !

வானில் முழுநிலா

சிரிக்கும் நட்சத்திரத்திற்கு

தன் முகம் காட்டியது !

ஓடும் நதி

ஆடும் நாணலுக்கு

குளுமை காட்டியது !

மணக்கும் மலர்

பறக்கும் பட்டாம்பூச்சிக்கு

வாசனை காட்டியது !

குழந்தை மழலைச்சிரிப்பு

அன்பான அன்னைக்கு

மென்மை காட்டியது !


பூ.சுப்ரமணியன்,

பள்ளிக்கரணை ,சென்னை

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.