குழந்தையின் குரல்: ஆபிரகாம் வேளாங்கண்ணிBy. கவிதைமணி

உறவு முறைகள் கொடுத்த குத்தல் குடைச்சல் பேச்சு  வெகு நாளாய் மனம்துடித்து கண்கலங்கி இழிவு பட்டு

ஏறக்குறைய  பத்தாண்டுகள்
படிப்பித்த பாடமோ மலடியென
என் குழந்தையின் குரல் என்னை
தேர்ச்சிப்பெறச் செய்துவிட்டது
ஆண்டவனுக்கு கோடி நன்றி

என்  குழந்தாய் நீ பிறந்து உன் குரல் கேட்ட அன்று தொட்டு  புறம் கூறிய
பொறுமல்கள்  முகம்மூடி
சென்றிடக்கண்டேன் நான்

ஆனாலும் அவர்களை
கண்டு மனம் வருந்தினேன்
மன்றாடினேன் இறைவா அவர்களை மன்னியுமென

அசரீறு போன்றொறு குரல்
என் குழந்தையின் குரல் அது

•••••••
ஆபிரகாம் வேளாங்கண்ணி
மும்பை

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.