பாசம் இல்லா காதலன்

எல்லாரோட பயணமும் ஒரு நாள் முடியத்தான் போகுது.. அந்த முழு பயணத்துல முக்கியமான, மனசுக்கு நெருக்கமான (ஒரு) சிலரை நிச்சயமா தவறவிட்டுருவோம்.. இன்னைக்கு நான் போகப்போற இந்த பஸ் பயணத்துல, ஒருத்தர தெரிஞ்சே தவற விடப் போறேன்.

இந்த பயணம் எப்படிப்பட்டது? ஒரு இராணுவ வீரன் ஆயுதம் இல்லாம போர் முனைக்கு போக போறோம்னு தெரிஞ்சும், அத மனசுக்கு நெருக்கமானவங்க கிட்ட கூட சொல்லாம, போய்ட்டு வாரேனு சொல்லுற மாதிரி.. மனசுல மரணத்த மட்டுமே எதிர்பார்த்துகிட்டு, வெளிய அத காட்டிக்காம இருக்குற வலி இரண்டு மரணத்துக்கு சமம்..

அவ கிட்ட மனசுல இருக்குற எல்லாத்தையும் சொல்லனும்.. இன்னைக்கு நான் சொல்லவில்லை என்றால், இனி எப்பவுமே சொல்ல முடியாது. ஆனா சொல்ல மனசு வரல. நான் கடைசியா அவள பாக்குற இந்த நாளுல, அவ முகத்துல சந்தோஷத்த மட்டும் தான் பாக்கனும்னு நினைக்குறேன்.. என்னோட பக்கத்துல இருக்குறா. அவளும் நானும் ஒரே விஷயத்த தான் சொல்லத் தவிக்கிறோம்.. அவ எதுக்கு சொல்லத் தயங்குறா?? பெண்... இதான் பதில்.. பெண் முதல்ல தன்னோட காதலை சொல்ல மாட்டா.. எனக்கு என்ன தோனுதுனா,

"அடப் பெண்ணே, இன்னைக்கு உன் மனசுல உள்ளத எங்கிட்ட சொல்லவில்லைனா, அப்புறம் எப்பவுமே சொல்ல முடியாது"..

கேக்கனும்னு போல ஆசையா இருக்கு.. ஆனா அவ சொல்லமாட்டா.. ஏன்னா அவ ஒரு பெண்.. ஒரு பொண்ணு முதல்ல லவ்-அ சொல்லிட்டா, இந்த உலத்துக்குள்ள, நாம உருவாக்குன ஒரு கேடுகெட்ட உலகம், அவள தரம் இல்லாத பெண், அப்படினு சாட்சி சொல்லும்.

இந்த சமூகத்தோட அரசியல் இது தான்.. ஒரு பையன் பல பொண்ணுக்கு பின்னாடி சுத்துனாலும், அவன Play boy னு சொல்லி புகழ்ந்திடும்.. (Play boy அப்படிங்கிற பெயர ஒரு கெத்தான பெயரா மாத்துனதே, ஆணாதிக்கத்தோட அடையாளம் தான்). இதுவே ஒரு பெண், தன்னோட மனசுக்கு புடிச்ச ஒரு பையன் பின்னாடி சுத்துனா கூட, இவ ஏன் இப்படி அலையுறானு வேற ஒரு பெயர் குடுத்துரும்.. இதான் இப்போ என்னோட பிரச்சனை.. அவ நிச்சயம் இந்த சமூகத்துக்கு பயந்தே, மனசுல உள்ளத சொல்லமாட்டா.. நான் சொல்லி நிறைவேறாத ஆசைய, அவ மனசுல வளர்க்க விரும்பல.

பஸ் பக்கத்துல அவளும் நானும் நிக்கிறோம். இரண்டு பேருக்கும் இடையில, இரண்டு பேரும் விரும்பாத மெளனம் மட்டும் தான் இருக்குது.

"சரி எங்க போறனு சொல்லவே இல்ல" அவ கேக்குறா.

"அது surprise" னு நான் பொய்யா சிரிச்சுகிட்டே சொன்னேன்.

கொஞ்சும் பாணியில் "சொல்லு" அப்படினு சொன்னா.

என் மனதை பயம் மட்டுமே சுத்திக்கிட்டு இருக்குது. அவக்கிட்ட என்ன சொல்லுவேன்?? நான் திரும்பி வர முடியாத பயணத்த தொடங்க போறேனு சொல்லவா?? :நான் எதுவும் சொல்லவில்லை”

"முக்கியமான எல்லாத்தையும் எடுத்துகிட்டியா, எதையும் மறக்கலையே" என் கண்ண பாத்து கேட்டாள்.

"உன்னோட நினைவுகளையும், நீ செஞ்சு குடுத்த இட்லியையும் எடுத்துக்கிட்டேன், இத விட வேற என்ன முக்கியம்" அவள் முகத்தில் வெட்கம். (இத தான் பாக்கனும் ஆசை. பாத்துட்டேன்)

"நான் ஒன்னு சொல்லனும்"னு அவள் ஏதோ சொல்ல வந்தாள்.

(நிச்சயம் காதல பத்தி தான். இத தான் எதிர்பாத்தேன்.. என்னோட இறுதி ஆசைனு கூட சொல்லலாம்)

"என்ன???" காதல் தோரனைல தெரியாத மாதிரி கேட்டேன்.

"இப்போ சொல்ல மாட்டேன்.. போய்ட்டு வா சொல்லுறேன்" ஒரு சஸ்பென்ஸ் குடுத்துட்டா.

சோகமாக கெஞ்சும் குரலில் ““இப்போவே சொல்லேன், Pleaseeeee” என்றேன்.

“எவ்வளோ கெஞ்சினாலும் சொல்லமாட்டேன். போய்ட்டு வா சொல்லுறேன்”

"சரி, வந்தா சொல்லிக்கோ" சிரிச்சுகிட்டே சொன்னேன். (இந்த வார்த்தையோட உண்மையான அர்த்தம் அவளுக்கு புரிய கொஞ்சம் நாளாகும்)

"சரி வராத, போ"னு பொய்யா அழுகுற குரல்ல சொல்லுறா.

"நான் அங்க கல்யாணம் பண்ணி அங்கயே இருக்கலாம்னு யோசிச்சுருக்கேன்.. என்ன நான் சொல்லுறது"" அவளை வெறுப்பேத்தி பாத்தேன்.

"போடா, போய் என்னமோ பண்ணிக்கோ.. எனக்கென்ன??" முகத்த திருப்பிகிட்டா.

பஸ் கிளம்புது. அவளுக்கு டாடா காட்டுனேன், என் கைய கீழ இறக்கவே இல்லை. ஏனா இதான் என்னோட கடைசி டாடா. ஆனா அவளோட அந்த பொய்யான கோபத்துனால, அவ, அவளோட முகத்த திருப்பிக்கிட்டா.

“ஏய் லூசு, திரும்பி பாரு.” (இதான் என்னோட கடைசி டாடா.. என் மனசுக்குள்ளவே சொல்லிக்கிட்டேன்.) ஆனா அவள் பார்க்கவில்லை..

பஸ் மறுபடியும் நிக்கிது. (எதுக்குனு தெரியல)

அவளை கூப்பிட்டேன். பஸ் ஜன்னல் வழியாக, அந்த சகிக்க முடியாத சத்தத்தில், நான் அவளிடம் சொன்னேன், "சில விஷயங்கள் நம்ம விட்டு விலகிப் போகும் போது, போகட்டும்னு விட்றனும்.. அப்போ தான், அத விட நல்ல விஷயங்கள் நம்ம தேடி வரும்" னு கொஞ்சம், இல்லை, ரொம்பவே சோகமா சொன்னேன்.

"இப்போ ஏன் இப்படி சொல்லுற???" அவ முகத்துல ஒரு புரியாத சோகம்.

(அட ச்சே, நான் இந்த வார்த்தைகள சொல்லிருக்கவே கூடாதுனு தோனுது.)

"நீ எங்க போறனு சொல்லு" கோபமா கேக்குறா.

பஸ் மீண்டும் என் முடிவில்லா பயணத்தை தொடர்கிறது. நான் எந்த பதிலையும் உதிர்க்கவில்லை. அவள் என்னோட போனுக்கு கால் பண்ணுறா. நான் கட் பண்ணிவிட்டேன். பஸ் ஜன்னல் வழியே, தலையை வெளியே நீட்டி, மீண்டும் அவளைப் பார்க்கிறேன். என் கண்ணில் அடக்கி வைத்த கண்ணீர் துளிகள். விடைகொடு என் வாழ்க்கையின் இறுதிக்கு என என் கண்ணீர் கதறியது. அவளும் அமைதியாக, ஆனால் சோகமா என்னை பார்க்கிறாள். நான் இறுதி வரை என் காதலை சொல்லவில்லை. இப்போது, என் மனதுக்குள் சில வரிகள் எழுகிறது.

நான் அவளை ஏமாற்றியதாகவே நினைத்துக் கொள்ளட்டும். என்னை கேவலமானவனாகக் கூட நினைத்துக் கொள்ளட்டும். நான் உண்மையான பாசத்திற்கு துரோகம் செய்துவிட்டாக உலகம் பழித்துக் கொள்ளட்டும். ஆனால், அவளுக்கு தெரியாமலே போகட்டும், நான் இனி திரும்பி வரமாட்டேன் என்பது.. அவளுக்கு தெரியாமலே இருக்கட்டும், என்னை கேன்சர் கொன்று கொண்டிருப்பது. அவளுக்கு தெரியாமலே நகரட்டும், நான் இல்லாத அவளுடைய உலகம். முடிந்தால், அவளுக்கு தெரியாமலே மறையட்டும், ஆழமான என் நினைவுகள்.

நாங்கள் இருவரும், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட அந்த இறுதி நொடியை மறந்து போக, அவள் வேதனையில் துடிக்கப் போகிறாள். பேருந்தின் ஓட்டத்தில், அவள் என்னை விட்டு மறைகிறாள். வாழ்க்கையின் ஓட்டத்தில், நானும் அவளை விட்டு மறைய வேண்டுமென, விதியை பிரார்த்தனை செய்கிறேன்..

வீழ்ந்தபின் உன் அருகில் இருப்பேன், உன் ஆயுள் வரை...


இப்படிக்கு,

பாசம் இல்லா காதலன்...!

என்னை பாசம் இல்லா காதலன் என உலகம் பழித்தாலும் பரவாயில்லை ...!

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.