பார்வதியைக் காணோம்..!!!

பார்வதியைக் காணோம்..!!! ----------------------------------------

" எங்கே போனா இந்த பார்வதி ? " அம்மா கேட்டுக்கொண்டே சமையலை கவனித்தாள்.... " ஏய்... சுந்தர்... போடா 7.30 மணி ஆயிடுறது இன்னும் இவளைக் காணும்... போய் அவ பிரிஎண்ட்ஸ் வீட்டிலே போய் கேட்டுண்டு வா... அப்பா வந்தா சத்தம் போடுவா... சீக்கிரமா போ.... எங்க போனாலும் சொல்லிட்டு தானே போவா.." கொஞ்சம் கலவரத்தோடு அம்மா கூறியதும் சுந்தர் ஓடினான்...

"எங்கடி யாரையும் காணோம்? கொஞ்சம் குடிக்க தண்ணி கொண்டு வா... இந்த வெய்யில் பாடாய் படுத்தறது...!" வேர்வையை துடைத்துக்கொண்டு வந்த கணவனுக்கு சத்தம் போடாமல் ஒரு சொம்பில் தணண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள்...அம்மா..ஆனால் அவர் விடுவாரா? " பார்வதியும், சுந்தரும் எங்கே? மணி 8.00 ஆறது..வர, வர உனக்கு பொறுப்பே இல்லை... ! கணவனின் கேள்வி இவளுக்கு பகீரென்றது.... " என்னடி சும்மா இருக்கே? " " இதோ சுந்தர் போயிருக்கான் ..... அவ பிரிஎண்ட்ஸ் கிட்ட கேட்க..." என்றதும் எழுந்த கணவன்.... " என்ன சொல்றே? இன்னும் பார்வதி வரலியா? என்ன சொல்லிட்டுப் போனா? உனக்கு என்ன பைத்தியமா? 5 மணிக்கு வரவேண்டியவ இன்னும் வரலே... அலட்சியமா இருக்கே? " மனைவியிடம் கோபமாய் கேட்கவும் சுந்தர் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது...

"அம்மா..! " என்று சத்தம் போட்டுக்கொண்டு வந்த சுந்தர் அப்பாவைக் கண்டதும் வாய் அடைத்துப் போனான்... " என்னடா ஆச்சு? பார்வதி எங்கே? " அப்பா கேட்க " ஒன்னும் தெரியலே பா... அவ பிரெண்ட்ஸ் எல்லோரும் வந்துட்டா இவ கொஞ்சம் நோட்ஸ் எடுக்க லேட்டா ஆகும்னு சொன்னதினாலே மத்தவங்க கிளம்பிட்டாங்களாம்... அப்புறம் தெரியலே... ஸ்கூல் கூட போய் பார்த்தேன்... வாட்ச்மான் 5.15 எல்லாம் கிளம்பிட்டானு சொன்னார்.. " அழாத குறையாக சுந்தர்...

பதறிப் போனாள் அம்மா. "என்ன இது... சோதனை? வாங்க போய் தேடலாம்..." அம்மா அழ அப்பா தடுமாறிப்போனார்... அவருக்கு இருதய நோய் வேறு...

" சுந்தர்... நீ வீட்டிலேயே இருடா... நாங்க போய் பார்த்துட்டு வரோம்..." இருவரும் கிளம்பினர்... அதற்குள் ஊரில் பேச்சுக்கள் ஆரம்பமாயின... சிலர் உண்மையான அக்கறையுடனும் , சிலர் "அட! எவன் கூட போயிட்டாளோ? " நாக்கில் நரம்பில்லாமல்....

பார்வதி, இப்பொழுதுதான் 17 முடிந்து 18 வயதாகிறது.... அழகாய் இருப்பாள்... பள்ளி இறுதி ஆண்டு... நன்றாய் படிக்கவும் செய்தாள்... தான் உண்டு, தன் படிப்பு, வீடு என்று இருப்பவள்... பெற்றவர்களுக்கும், பெரியவர்களுக்கும் மிக்க மரியாதை கொடுப்பவள்.. அடக்கமும், பண்பும் நிறைந்தவள்...

10.30 மணி வரை பெற்றோர் இங்கும் ,அங்கும் எல்லோர் இடத்திலும் தேடிவிட்டனர்,,, ஒரு தகவலும் இல்லை...துடித்தனர்.... ஏதேதோ எண்ணங்கள் மனதில் தோன்றி மறையட்டுமா ? வேண்டாமா? என்று கேள்வி கேட்டுக்கொண்டு பாடாய் படுத்தின...

உடலும், மனமும் சோர்வு அடைந்து சுமார் 11.30 மணிக்கு விரக்தியோடு வீடு திரும்பினார்.

மறுநாள் ஊரார் ஒருவர் போலீசில் புகார் கொடுக்கலாம் என்கிறார்... மற்றொருவர்... " வேண்டாம்.... பெண்ணோட வாழ்க்கையை நாமே வீணடிக்கக்கூடாது " மேலும் ஒருவர் " யாரையாவது காதலிச்சாளா ? " இதுபோல் ஒருவர் மாற்றி ஒருவர் கேள்விகளும் , கருத்துக்களையும் கூற ஆரம்பித்தனர்... ஒன்றும் புரியாமல் நிலை குலைந்து ஒரு ஓரத்தில் பெற்றோர்.... சுந்தர் அழுது கொண்டே இருந்தான்...

நேரம் ஓடிக்கொண்டிருந்தது...தற்போது போலீஸ் வேண்டாம் என முடிவு செய்தனர்.... ஒரு தகவலும் இல்லாமலே மாலை 6 மணி ஆனது... இவர்களை தனியாக விடவேண்டாம் என்று ஊரில் இருந்த ஓரிருவர் இவர்களுக்குத் துணையாக இவர்கள் வீட்டில் இருந்தனர்..

மறுநாள் காலை 8.30... ஊரே கலவரத்தில்.... ஓலங்கள்... அழுகை...

சிதைந்துபோன போஸ்டமோர்டெம் செய்த அந்த இளம் அழகு பார்வதியின் உடல் ஒரு பொட்டலமாக வீட்டின் வெளியில்.....

" இதுக்காகவாடி உன்னை பொத்தி பொத்தி வளர்த்தேன்? என்ன பாவம்டி செய்தேன் நான்...? " அம்மா தாளாமல் நெஞ்சில் அடித்துக் கொண்டாள்... அப்பா இதயம் மேலும் பலவீனமானது... மாத்திரைகள் கொடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை படுக்க வைத்தனர்...

காலை 5.30 மணிக்கு அந்த ஊரின் ஒதுக்கு புறமான ஒரு தோப்பு ... அங்கு ஒரு சிறிய பாகத்தை விற்க அதைப் பார்வை இட ஊர் நாட்டாண்மையும், அவர் நண்பர் குடும்பமும் சென்றபோது... அங்கு அவர்கள் கண்டது ..... அலங்கோலமாய் .... உயிர் பிரிந்த நிலையில் பார்வதி....அதிர்ந்தனர்...

உடனே போலீஸ் வந்தனர்.... 4 அல்லது 5 மணி நேரத்திற்கு மும்புதான் உயிர் பிரிந்திருக்க வேண்டும் ... மருத்துவ மனையில் சோதித்து பார்த்ததில் 8 அல்லது; 10 பேர் சேர்ந்து அவளை நாசமாக்கி இருப்பதாகவும்,,,, 1 1/2 நாட்கள் மேல் அவளை உயிருடன் வைத்து இந்தக் கொடூரச்செயல் நடந்திருப்பதாகவும் தெரிவித்தனர்.... அனைவருக்கும் அதிர்ச்சி....

இதோ பஸ்பமாய் இன்னும் சற்று நேரத்தில் பார்வதி...

என்னடா சமூகம்.....? ஊராரின் வற்புறுத்தலாலும். நாட்டாண்மையின் வேண்டுகோளுக்கு இணங்க போலீஸ் உதவியால் குற்றவாளிகளைக் கண்டு பிடித்தனர். மேலும் அதிர்ச்சி... பள்ளி மாணாக்கள்...என்னே. ஒரு அக்கிரமம்... எங்கிருந்து வந்தது இந்த வக்கிர புத்தி...? இவர்களை அப்படியே விட்டு விடவேண்டுமா?

உண்மை அறிந்ததும் சிலர் கல்லால் அடித்தனர், சிலர் துப்பினர்... பெற்றோர்களே போலீசிடம் " தண்டனை கொடுங்க... அப்பத்தான் இவங்க திருந்துவாங்க" என்று முறை இட்டனர்.. இது போதுமா? சட்டம் என்ன செய்யப்போகிறது? சிறுவர்கள் தானே? விட்டு விடுங்கள்.... அப்படியா? இனி இதற்கு நாம் துணை போகலாமா?

இதற்கு காரணம்,,,,, ? தவறு யாரிடம்.... பெற்றோர்களிடமா? ஆசிரியர்களிடமா? சமுதாயத்திடமா? ஊடகங்களிடமா? பத்திரிகைகள் , சினிமாக்கள், தொலைக்காட்சிகள்.... எதை ? யாரை குற்றம் சொல்வது? இது தொடர்ந்து கொண்டேதான் இருக்கும் எனில் ? சுதந்திரம் எங்கே?

1947 ல் ஆங்கிலேயர் நம்மை அடக்கி ஆண்டதிலிருந்து சுதந்திரம் பெற்று இன்று ஒரு மனிதன் மற்றவனையே அழிக்கும் கேவலமான நிலைக்கு வந்து விட்டோமே...!!! பார்வதி காணாமல் போனது போல் இன்னொரு பெண் போகவேண்டுமா? கூடாது...!!!!

---------------------------------------------------------------------------

குறிப்பு:

-------------

15.8.2016, இன்று சுதந்திர தினம்.... ஒருவருக்கொருவர் சுதந்திர தின நல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டும் இனிப்புகளை வழங்கிக்கொண்டும் இருக்கும் இவ்வேளையில்... சுதந்திரம் என்பது என்ன? விடுதலை என்பது என்ன என்று தெரியாமல் குழம்பிக்கொண்டிருக்கிறேன்...

பெண் சுதந்திரம் என்பது அவள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் , உடை உடுத்தலாம் என்று பொருள் அல்ல.... ஒரு பெண் (எவ்வயதினரும்) என்று பயம் இல்லாமல், தன கற்பிற்கும், மனதிற்கும் பங்கம் இல்லாமல் சுதந்திரமாக வீட்டிலோ, வெளியிலோ, அலுவலிலோ இருக்கிறாளோ அன்றுதான் பெண்ணிற்கு முழு சுதந்திரம் என்று அர்த்தம்...

இன்று காலையில் ஒரு பத்திரிகையில் படித்த உண்மை சம்பவம் என் மனதை இறுக்கியது...!!! என்ன மனிதர்கள்? எங்கிருந்து வந்தது இந்த வக்கிர புத்தி..? வெறி, வெறி, சிறுவர் முதல் முதியவர் வரை... இதுவா சுதந்திரம்? இது சென்னையை அடுத்து ஒரு சிறிய ஊரில் நடந்த நிகழ்வு அதனை இந்நாளில் ஒரு கதை வடிவில் உங்களுக்கு படைத்துள்ளேன்... இதற்கு காரணங்கள் என்ன,? எப்படி சரி செய்யப்போகிறோம், ? படித்துவிட்டு மட்டும் விட்டு விடாதீர்கள்... சிந்தியுங்கள்.... தீர்வு வேண்டும் நிச்சயம்.. இது போல் இருக்கும் காம வெறியினரால் ஒட்டு மொத்த ஆண் சமுதாயத்தை வெறுக்கும் அளவிற்கு செல்கின்றோம்... வேதனைதான்.... இது தவறான எண்ணம் .... மாறவேண்டும்....

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.