விஜயலட்சுமி

என்ன அண்ணி இது? எவ்வளவு ஆசையா இந்த டிரஸ்ஸ செலக்ட் பண்ணேன் தெரியுமா?

தொடை எல்லாம் தெரியிற மாதிரி என்ன டிரஸ் இது. இதை என் புள்ள போடக் கூடாது.

சின்னப்புள்ள தானே அவ.

அஞ்சு வயசுல கூச்சம் போச்சுன்னா பின்னாடி எல்லோருக்கும் கஷ்டம்.

பரபரவென கவுனைக் கழற்றும் அம்மாவை புரியாமல் பார்த்தாள் விஜி.

நல்ல உறக்கத்தில் சுளீரென்று தொடையில் விழுந்தது அடி. அலறிக் கொண்டு எழுந்தாள்.

கடுகடவென முகம் சிவந்திருந்தது அம்மாவுக்கு.

பொட்டப்புள்ள நடு வீட்ல என்ன லட்சணத்துல படுத்திருக்க. பாவாடை தாவணி எல்லாம் விலகிக் கிடக்கு நாலு பேர் வர்ற இடத்தில என்ன இது.போ உள்ள போய் படு.

அம்மாவின் உடல் மீது விழுந்து கதறிக் கொண்டிருந்தவளிடம் அம்மா ஏதோ சொல்வது போல் இருந்தது. திடுக்கிட்டு நிமிர்ந்து சரிந்திருந்த மாராப்பை சரி செய்து கொண்டாள்.

மேடம், ஷாட் ரெடி என்ற உதவி இயக்குனரின் குரல் கேட்டு போர்த்தியிருந்த துணியை எடுத்து விட்டு குறைந்தபட்ச உடையில் வெறியூறிய கண்கள் மொய்க்கும் உணர்வற்று ஒளி வெள்ளத்தில் நனைத்தபடி அசைய ஆரம்பித்தாள் சில்க்ஸ்மிதா என்ற விஜி என்ற விஜயலட்சுமி.

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.