பெண்களே அழகு தான். அதுவும், தமிழ் பெண்கள் பாவாடை தாவணி கட்டி, கூந்தலில் மல்லிகை பூச்சூடி, வெட்கப்பட்டு சிரிக்கும் அழகே தனி தான்… வானுலக தேவதைகள் தோற்றுப்போவர். இப்படியாய், காதல் பாடல்கள் கேட்டுக்கொண்டும், கனவுலகில் சிறகை விரித்துப் பறந்துக்கொண்டும் இருந்தவள் தான் இன்று இத்தனை பெரிய மாறுதலுக்கு உள்ளானாள். அவளது தோற்றம் மட்டும் மாறவில்லை. மாறாக, மனிதத்துவத்தை பற்றிய அவள் எண்ணங்களும், பார்வையும் கூட முன்பு போல் இல்லை என்று தான் சொல்லவேண்டும்…

அறிவியல் வளர்ச்சி, பரினாம வளர்ச்சி, மனிதவள மேம்பாடு என எல்லா கோணங்களிலும் இந்தியா வளர்ச்சியடைந்த போதும், அதன் மரபுகள் மற்றும் கலாச்சாரத்திற்காகவே பெரிதும் அறியப்படுகிறது. ஆனால், ஏதோ ஓர் இடத்தில், மனித நேயத்திற்கும் சாதி அமைப்பிற்கும் இடையில் சிக்கிக்கொண்டு மனிதன் தன் சமூக அடையாளத்தை இழக்கத்தான் செய்கிறான்.

மகிழ்ச்சியான வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்துக்கொண்டிருந்த ஒரு சராசரி பெண் தான் ஆனந்தி. எதிர்காலத்தை குறித்த கனவுகளொன்றும் பெரிதாய் இல்லாமல் இருந்தாலும், தோழிகளுடன் தன் கல்லூரி நாட்களை அனுபவிக்க வேண்டும் என்ற ஆவலுடன் முதல் நாள் கல்லூரியில் அடியெடுத்து வைத்தாள். அரட்டைகள், சீனியர் ஜுனியர் ராகிங் என கலகலப்பாய் ஆரம்பித்த மூன்றாவது நாளே, அவளது சீனியர் ஷங்கர் அவளிடம் தன் காதலை சொன்னான். முதலில் மறுத்தவள் பின்பு நல்ல நண்பர்களாய் வலம் வந்தனர். ஆனந்தியை, தான் சிறு வயதில் இழந்த தன்னுடைய தாயாகவே பார்த்தான் ஷங்கர். படிப்படியாய் அவனின் உன்மை காதலை உணர ஆரம்பித்தாள், ஆனந்தி.

தங்களின் சாதி வேற்றுமையையும் மறந்து இருவரும் திருமணம் செய்துக்கொள்ள முடிவெடுத்தனர். அவனோ தலித் சமூகத்தை சேர்ந்தவன், அவளோ தேவர் சமூகத்தை சேர்ந்தவள். அத்தணை தடைகளையும் மீறி திருமண வைபவம் இனிதே முடிவுற்று, ஷங்கரின் கிராமத்தில் வந்து அடைகலம் புகுந்தனர், புதுமண தம்பதியர். ஷங்கர் தனது பி.டெக் படிப்பைத் தொடர்ந்தான். அவளது பெற்றோரின் அச்சுறுத்தல்களால் தனது படிப்பை பாதியிலேயே விடவேண்டியதானது, ஆனந்திக்கு.

எட்டு மாதங்களுக்குப் பின் ஷங்கருடைய பிறந்த நாளுக்காக வெளியில் செல்ல திட்டம் போட்டாள், ஆனந்தி…. நடக்கவிருக்கும் விபரிதத்தை அறியாதவளாய். சந்தோஷமாய் சுற்றித்திரிந்திவிட்டு வரும் வழியில் வழிமறித்தனர், அந்த ஏழு பேர் கொண்ட கும்பல். கண் இமைக்கும் பொழுதில் அனைத்தும் நிகழ, சுயநினைவுக்கு வந்தவள், தான் மருத்துவமணையில் இருப்பதை உணர்ந்தாள். மனம் பதற தன் ஆசைக் கணவனை கண்கள் தேட அருகிலிருந்த அவள் மாமனார் அவளை ஆசுவாசப்படுத்தினார். அந்த ரவுடி கும்பளை அனுப்பியது தன் பெற்றோர் தான் எனஅவளுக்கொன்றும் தெரியாமலில்லை. ஒரு வாரங்கழித்து அவளை மருத்துவமணையிலிருந்து வீட்டுக்கு அழைத்துவந்தனர். வீட்டுக்கு வந்தவள் அதிர்ச்சியில் உறைந்துப்போனாள். ஷங்கர் இறந்து இன்றோடு எட்டு நாட்கள் ஆகின்றது.

மூலையில் அமர்ந்து அழுதுக்கொண்டிருந்தவள், திடீரென்று வெறிப்பிடித்தவளாய் ஓடினாள். காவல் நிலையம் சென்று தனக்கு நிகழ்ந்த கொடுமையை புகாரளித்தாள். டிராபிக் சிக்னல் சிசிடீவி காமிராவில் பதிவான சாட்சியை அடிப்படையாய் கொண்டு, அந்த ஏழு பேரயும், கௌரவக்கொலை செய்ய தூண்டிய ஆனந்தியின் பெற்றோரையும் போலீசார் கைது செய்தனர்.

ஷங்கரின் பெற்றோரை தன் பெற்றோராய் ஏற்றுக்கொண்டாள். தன் கல்லூரி படிப்பை தொடர்ந்தாள். இன்று பெண்கள் விடுதலை மற்றும் மறுவாழ்வு இயக்கத்தின் தேசிய செயலாளரான ஆனந்தி, பெண்களுக்கு எதிரான சாதி வன்கொடுமைகளையும், கௌரவக்கொலைகளையும் எதிர்த்துக் குரல் கொடுத்து வருகிறார்.

பெண்களின் அழகு தோற்றத்தில்லல்ல…தானும் வாழ்வில் முன்னேறி, பிறரையும் முன்னேற்றும் துடிப்பில்...


tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.