பெண்

​ ஈரெழுத்தில் ஓர் கவிதையென்றால்அது பெண் தான். இதனையே மூன்றெழுத்தில் உயர்ந்த கவிதை என்றால் அது “அம்மா” அதுவும் ஓர் பெண்ணே! பெண்ணுக்குரிய ஓர் அறிய வாய்ப்பு எந்த ஆணுக்கும் கிடைக்காத அந்த பாக்கியம். ஓர் உயிரை சுமப்பது தான். ஆம் பெண்ணை பற்றி சொல்ல வேண்டுமென்றால் எங்கிருந்து தொடங்குவது? குழந்தையிலிருந்தா இல்லை தயிளிருந்தா. இது முதலில் “கோழி வந்ததா இல்லை முட்டை வந்ததா” என்பது போன்ற கேள்விதான். தியாகத்தின் மறு பெயர் பெண் தான். ஓர் குடும்பமென்று எடுத்துக்கொண்டால் கணவர் ஒருவகையை விரும்பி சாப்பிடுவார், தம்பி ஒருவகை, அண்ணன் ஒருவகை இப்படி ஒவ்வொருவரும் ஓர் வகையினை விரும்பி அதிகம் சாப்பிடுவர் ஆனால் தாயோ என்று உணவு அதிகமாகிறதோ அன்றே அதிகம் சாபிடுவாள். இது மறுக்க முடியாத கூற்று. உலகிலுள்ள அனைத்து சக்திகளுமே பெண்ணிடமே உள்ளது. ஆணை விட பெண்ணே வலிமையானவள். அனால் வளர்ப்பின் போதுதான் அவள் கோளையாக மாற்றப்படுகிறாள். எப்பொழுதும் ஓர் ஆணால் பெண் ஏமாற்றப்படுகிறாள். பெண் இல்லையேல் ஆண் இல்லை. இதனை அறிந்தே “சிவ” பெருமானே என்னுள் பாதி “சக்தி” என்றார். ஆகையால்தான் சிவன் மீது அதிக பயமுள்ளது. ஏனென்றால் சிவன் அழிக்கும் கடவுளென்றால் அப்படியே வைத்துகொள்ளலாம் “எதனையும் அழிக்கும் சக்தி அவனிடம் உள்ளது” அது எப்படி கிடைத்தது சக்தி என்னும் பெண்ணை தன்னுல் வைத்துகொண்டதால்தான். இதனை அறியாத மூடர்கள்தான் ஆணாதிக்கம் செய்பவர்கள். அவர்களே பலவீனமானவர்கள்.

பெண்ணை பற்றிசொல்ல உருண்ட இவ்வுலகை காகித மாக்கினாலும் போதாது என்பதே உண்மையான கூற்று…

- குமரேசன் செல்வராஜ்

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.