விடுதி

கருவறை தொடங்கி
கல்லரை முடியும்
உன்னத பயணம்
எண்ணாத உயரம்

இன்பம்தான் எங்கும்
இளமைதான் பொங்கும்
இலையுதிரா காலம்
மனம் அதன் பின்னே போகும்

கனவாக வந்து செல்லும்
கல்லூரி ஒரு பகுதி– அதில்
நினைவாக வந்து சொல்லும்
விடுதியின் இன்பம் மிகுதி

பயணமென்று அறிந்திருந்தும் – சிறு
பயணமென்று அறிந்திருந்தும்
பயணித்தோம் கூட்டமாய் – ஒன்றுசேர்ந்து
நண்பர்களின் தோட்டமாய்

தனித்தனி கருவறைகளில்
பிறந்திருந்தால் கூட
மணி மணியாய் சேர்ந்திருந்தோம்
விடுதி அன்னையின் மடியில்
ஒரு குடும்பமாய்

இன்பம் என்றவுடன்
மகிழ்ந்தோம் ஒன்றாக
துன்பம் என்றவுடன்
தோள் கொடுத்தோம் ஒன்றாக

சண்டையிட்டு கொண்டோம்
சகோதரர்களாக
சட்டை மாற்றி கொண்டோம்
சகாக்களாக
ஊர் சுற்றினோம்
ஊர் வளமாக

பிறந்தநாட்களில்
பூஜையும் அர்ச்சனையும்
இறைவனுக்கு அல்ல
நண்பனுக்கு
தேர்வு நாட்களில்
விடுதி என்பது
தூங்கா நகரம்
விடுமுறை நாட்களில்
விடுதி என்பது
ஆளில்லா நரகம்

ஒரு புத்தகத்தை பங்குபோட்டு
பத்து பேர் படித்தோம்
ஒரு தட்டில் சோறுபோட்டு
பத்து பேர் சாப்பிட்டோம்
தேர்வும் சுகமானது
சோறும் சுவையானது

காந்தி முதல் கலாம் வரை
உருவாக்கப்பட்ட பட்டறை
உன்னிலிருந்து வந்தவர்கள்
மேதையானர்கள்
விடுதியே………..
நானும் செல்கிறேன்
கண்ணீருடன்
காலம் போற்றும்
கலாமாக பவனி வர

மரணம் வரும் வரை
மறக்கமாட்டேன்
மீண்டும் வருவேன்
உன்னிடத்தில்
வெற்றியாளனாக
என் வெற்றியை பகிர !


கவிஞர் க.சங்கர்tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.