இராஜேந்திர சோழன்

சோழன் வழி வம்சம் இவன் சூரியனோட அம்சம் இவன், விஜயாலயனின் வீரம் இவன் சுந்தரனின் பேரன் இவன்...

சோழநாட்டின் வீரன் இவன் சூராதி சூரன் இவன்...

வேல் எடுத்து நீ எறிஞ்சா, வேங்கை அது விழுந்திடுமா, விழி பார்க்கும் பார்வையிலே, வேல் முறிஞ்சி போய்டுமே...

கால் பதித்த இடத்தினிலே களிறும் பிளிறுமடா இவன் கால் தடம் பதித்த இடத்தினிலே கலிங்கமும் அடங்குமடா...

வாள் எடுத்து இவன் நின்றால், இமயமும் வணங்குமடா, வேல் எடுத்து இவன் எறிஞ்சா வேங்கிநாடும் சாயுமடா, ஒத்துக்கிட்டு நீ நடந்தா, ஒற்றுமையா போவோமடா , புத்திகெட்டு நீ நடந்தா புறமுதுகிட்டு போவாயாடா...

கண் இமை காட்டியதிலே கடாரமும் விழுந்ததடா, விரல் சொடுக்கு போட்டதிலே ஈழமும் இணங்கியதடா, போர் தொடுத்து இவன் நின்றால், பார் நடுங்கி போகுமடா...

சுத்தி நின்று நீ முறைத்தால் , சுத்தமான வீரன் இவன் எட்டி நின்று நீ சிரித்தால், வெட்டி விடும் சூரன் இவன் சத்தியத்தை நீ மதித்தால், சத்தியமா சொல்லுறேன் நான், உத்தமன்தான் இந்த சோழ மன்னன், குற்றமென்று நீ உணர்ந்தால், குலம் காக்கும் கொற்றவன்தான் இந்த சோழ மன்னன்...

கடல் கடந்த நாடெல்லாம், இவன் கால் தொட்டு போகுமடா, கரை இல்லை இவனுக்கு, கடல் மட்டும் சொந்தமடா படை எடுத்த பாண்டியனும் தடம் மாறி போனானடா, சீறிவந்த சேரனும் சிரம் இழந்து விழந்தானடா...

சோறுடைத்த சோழம் நாங்க , போர் தொடுக்க வந்தோம்ங்க, மண் பார்த்து பழக்கம் இல்ல , பொன் பார்த்து மயங்கியது இல்ல, தினவெடுத்த தோள்கள் இரண்டு, திமிர் பிடித்த வீரம் உண்டு, கவிதையான காதலும் உண்டு , காதலுக்கு இலக்கணம் உண்டு, கயவரை வேர் அறுக்கும் கன்னியும் உண்டு...

இவனுக்கு அழகான அத்தையும் உண்டு, அறிவான மாமனும் உண்டு, பெயர் சொல்லும் பிள்ளையும் உண்டு , பகைவர் வேர் அறுக்க சோழ படையும் உண்டு, இவன் அப்பனோட அதிசயம் ஒன்று, அதைபார்த்து அகிலமும் அசருது இன்று...

அப்பன் பேச்சை மீறினது இல்லை, அம்மா இல்லா கவலையும் இல்லை, தங்கையின் அன்புக்கு எல்லை இல்லை, அத்தைக்கு மிஞ்சிய அன்பும் இல்லை , மாமன் இருக்க அவனுக்கு என்றும் போருக்கு செல்ல தடையே இல்லை...

எதிரில் நிற்க எதிரிகள் இல்லை , இனியும் அவன் வெல்ல உலகில் எல்லைகள் ஏதுமில்லை...

சோழநாட்டின் சூரன் இவன் இராஜேந்திர சோழன் இவன்...

..........சிவா

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.