நினைவுகள் நீங்காமல்

மென்பொருள் கனவில் - 1

அழகான
கவர்ச்சிகரமான
கவனத்தைக் கவரக்கூடிய
இனிமையான
வசீகரமான
தெய்வீகமான
சுவாரஸ்யமான
பிரார்த்தனையுடன்
ஈர்க்கக்கூடிய
புதுப்பொலிவுடன்
மென்பொருள் வேலையின் கனவில் .....

மென்பொருள் வேலையின் கனவில் 2

சாப்ட்வேர் துறையில் வேலை
இப்படி தான்
இளைஞ்சிகள் அழகினால் கிரங்கடிப்பார்கள்
இளைஞ்சர்களின் சேட்டை
ஆட்டம்
பாட்டம்
கொண்டாட்டம்
என
வாழ்க்கையே கூதூகளிகும்
அரம்பமமே நல்ல சம்பளம்
இருபது ஆயிரம் இருபது ஒரு வயதில் கொடுத்தால்
எப்படி இருக்கும் வாழ்க்கை
வீட்டில் யாரும் கணக்கு கேட்பது இல்லை
சாப்பாடு இலவசம்
வந்துப் போக கார் இலவசம்
சனி ஞாயிறு வேலை செய்தால் தனி சம்பளம் ..
தினமும் மேக்அப் போடத் தூண்டும் வேலை
ரெண்டு வாரத்திற்கு ஒரு முறை க்ளபுக்கு போகலாம்
குடிக்கலாம்
ஆடலாம்
பாடலாம்
எல்லோர் கனவைப் போல நானும் ...


மென்பொருள் கனவில் 3

வேலைப்பயிற்சி சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார்கள்
அழகான உடையில்
ஒயிலான நடையில் ஒருத்தி
பாடம் நடத்தினாள்
அழகாக இருந்தாள்
அவள் வாசனை திரவியமும்
ஹை டெக் உடையும் அவள் வயதை மறைத்தது
இன்னொருத்தி சினிமா நடிகை போல உடை
மெல்லிடை
அழகான குரல்
என்ன ஒரு சொர்க்கமான வாழ்க்கை
இதற்காகத்தான் எல்லோரும் சாப்ட்வேர் வர ஆசைப்படுகிறார்கள் என நினைத்தேன்


மென்பொருள் கனவில் 4

அன்று ஒரு நாள்
வண்ணபூக்கள் வரைந்த ஒரு ஓவியத்தைக் கண்டேன்
வண்டாக நான் ரீங்காரம் இட துடித்தேன்
இவ்வுளவு அழகை நான் எங்கே காண்பது
எட்டாத உயரத்தில் இருக்கும் நிலவல்லவோ அது
நான் அமாவாசை வரைக்காத்திருந்து
அவளை எப்படியும் கைது செய்ய வேண்டும்
கேள்விப்பட்டேன்
என்னோடு ஒரு வயது அதிகம் எனக் கேள்விப்பட்டேன்
இருந்தால் என்ன
சம்பளம் அதிகம்
அமெரிக்க வேலையைத் தேடி அவள் மனதில் இடம் பிடிப்போம்


மென்பொருள் கனவில் 5

அன்னத்தோடு அன்னமாய்
பறவையோடு பறவையாய்
சிறகடித்துக் கொடிருந்தாள் அந்தப் பாவை
எனது பூவை
அழகான தமிழால்
இதமாக பேசுவாள்
குயில் தோற்கும் அவள் குரலில்
மயில் தோற்கும் இவள் குழலின் முன்
மல்லியும்
ஜாதியும்
கனகாமரமும்
ரோஜாவும்
சண்டை போடுகின்றன
இவள் குழலை யார் அழகு படுத்தவென
சிறுவாணி போல கலகலக்கிறாள்
தாமிரவருணிப் போல ஓடுகிறாள்
நான் என்னவென்றுச் சொல்ல
அதை எப்படிச் சொல்ல
பேரழகிலும் பேரழகை
கொடி இடை
அழகு மிடுக்கு
எப்படி இப்படி இருகிறார்கள்
கானல் நீர் போல


மென்பொருள் கனவில் 6

நிறைய நண்பர்கள் கூடத்தின் நடுவே தான் அவளும் இருந்தாள்
நாங்கள் ஒன்றாக சனியன்று சினிமா பார்க்கலாம் என்று முடிவு செய்து
சினிமாவில் கூடினோம்
கண் கூசும் மாடர்ன் உடையில் வந்தாள்
இப்படியா இருப்பாள் பெண் என நினைத்தேன்
அவளிடம் தள்ளியே இருபது நல்லது தான் என நினைத்தேன்
பிறகு அவர்கள் தான் தனியாக படம் பார்க்கச் செல்வார்கள்
எனக்கு ஏனோ பிடிக்கவில்லை
இந்த மாயாஜால உலகில்
பெண்கள் ரொம்ப சுகந்திரம் எடுத்துக் கொள்கிறார்கள் போல
நடிகையின் உடையும் அவர்களின் அழகும்
பணத்தை கொட்டி அடைந்து விடுகிறார்கள்
ஒரு வருடத்தில் லோன் மூலம் கார்
அடுத்த வருடம் பிளாட்
இதுவே இதுவே சாப்ட்வேர் வாழ்கை
இதையே எல்லா பெண்களும் விரும்புகிறார்கள்
US போக வேலைக் கிடைத்தால் உங்களுக்கு தனி மதிப்பு
அதுவரைக்கும் நண்பர்களோடு நன்றாக ஊர் சுற்றி அனுபவிக்க வேண்டும்
இதுவே ஆணும் பெண்ணும் நடத்தும் சூதாட்டம்
இதற்கு பெயர் தான் சாப்ட்வேர் துறைப்போல என நினைத்தேன்


மென்பொருள் கனவில் 7

ஒரு நாள் சட்டையிலும் பாண்டிலும் வந்தாள்
ஜீன்ஸ் போட்டு ஷேப்பை காண்பிக்கிறாள் என பெண்கள்
இவளைக் குறை கூறினார்கள்
அவர்களுக்கு என்ன பொறமையோ
கொள்லென சிரிப்பாள்
ஆனாலும் அவளைப் பார்த்ததும்
முன் இருந்த ஈர்ப்பு இல்லை
ஏதோ சாதாரனமாய்தான் இருந்தாள்
முகத்தில் ஒரு களையும் இல்லை
யாருடனும் ஊர் சுத்த தயங்கியது இல்லை
ஆண் நண்பர்களுடன் தான் எங்கும் போகிறாள்
பெயருக்கு ஒரு வயதான தோழி
எதற்கு
இவள் அழகாக தெரிய வேண்டும் என்பதற்காகவா?


மென்பொருள் கனவில் 8

எதற்கோ ரொம்பச் சண்டை போட்டாள்
எல்லோரையும் திட்டினாள்
கூட வேலை செய்பவரை மதிப்பதே கிடையாது
மரியாதை என்பது துளி கூடக் கிடையாது
தனக்கு மட்டும் எல்லாம் தெரியும் என்ற நினைப்பு
ஆடாமல் ஆடினாள்
எல்லோரும் பயந்தார்கள்
பெண் என்றால் பேயே ஓடும் என்றால்
இவளைக் கண்டாள் அரக்கனும் அலறுவான்
கொடுமைக்காரி
அவள் பல் இளித்து ஓசியில் சாப்பாடும் சாப்பிடுவாள் போல
ஒரு நாள் நண்பன் ஒருவன் சொன்னான்
" அவளாக பணம் கொடுத்து சாபிட்டால் ..
ரெண்டு இட்லி தான் சாப்பிடுவாள்
ஆனால் ..
வேறு யாராவது வாங்கிக் கொடுத்தால்
சிக்கன் பிரியாணியும்
மட்டன் பிரியாணியும் சாப்பிடுவாள்
" எண்ணக் கிண்டல் அடிப்பான்


மென்பொருள் கனவில் - 9

ஒரு நாள் அப்படிப் போகும் பொழுது ஒரவிழியால் பார்த்துக் கொண்டே போனாள்
யாரோ சொனார்கள்
உன்னைப் பார்க்கிறாள் என்று
அதுவும் ஒரு பெண் சொன்னாள்
அவள் ஏன் நம்மைப் பார்க்க வேண்டும்
ஒரு அறுவாளின் கூர்மையான விழிகள் என்னை எப்பொழுது வெட்டுமோ
எனத் தெரியவில்லை
ஏன் இடன் உள்நோக்கம் புரியவில்லை
ஏன் அவள் இப்படி
ஏன் மனம் ஏற்க மறுக்கிறது
யார் சொனாலும் நம்பமாட்டார்கள்
இருந்தாலும் ஆசை யாரை விட்டது
அந்த வெள்ளை வண்ண பூக்கள்
என் மேல் மாலையாய் விழுந்தன
அவளிடம் பேசவேண்டும் என ஆசை
எப்படிப் பேசுவது
ஒருநாள் இந்தியாவின் கிரிக்கெட் போட்டி நடந்தது
என்ன ஸ்கோர் என்று கேட்க
ஒரு மணி நேரம் யோசித்துக் கேட்டேன்
சொன்னாள் ..
என் காதில் விழவில்லை
அவள் அழகான இதழ் அசைவும் விழி அசைவும் கண்டேன்
திரும்பவும் அவளே வந்துச் சொன்னாள்
இந்தியா மூன்று ரன்னில் சேவித்து விட்டது என்று ...!


மென்பொருள் வேலையின் கனவில் - 10

இப்பிடித்தான் ஒரு நாள் என் எதிரில் வந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்
விழி மோத
மொழி கூட
இமை தவழ
இதழ் குவிய
கூந்தல் பேச
அழகு அவிழ
மல்லி கமழ
கமல விரிப்போடு
கருவிழி அது உருண்டோடும் வேளையில்
வெண்மதி கலக்கும் என் மதியில்
கொய்யா சிவப்போடு
பிஞ்சு மொழியோடு
தோழியோடு சிணுங்கிக்கொண்டு இருந்தாள்
அன்று பார்தவளா இவள்
என்ன அடக்கம்
என்ன அழகுடா
வெண்திரையில் பூத்த வெண்தாமரைப் போல


மென்பொருள் வேலையின் கனவில் - 11

வாரமானால் வெள்ளியன்று கண்டிப்பாக கோவில் செல்வாள் போல
அழகாக
அமைதியாக
அடர்ந்த கூந்தலோடு
அமர்க்கலாமில்லாமல்
அல்லிக் கொடியாள்
அம்சமாக
அலட்டிக் கொல்லாமல்
அமுத மொழியால்
அங்கம் மின்னிட
அளந்த சேலையில்
அலுங்காத அழுகுக்குவியலாய்
அள்ளிட அளவில்லாமல்
அலையடிக்காத கடலைப் போல்
அலங்கார பரியை
அரண்மனையின் இளவரசி
அன்பாக
ஆலய மணியாக சேலையின் சோலையாய் வந்தாள்


மென்பொருள் கனவில் - 12

இவ்வளவு அழகானவள்
வாழ்கையில் ஏதோ கஷ்டப்பட்டு இருக்கிறாள்
இல்லையெனில் ஏன் இப்படி
இவளும் ஒரு சுயநலவாதி தான்
அடுத்தவன் கஷ்டப்பட்டு செய்த வேலையை
தான் செய்தேன் என்பாள்
தான் மட்டும் தான் முனேற வேண்டும் என்ற திமிர் பிடித்தவள்
இது தான் மென்பொருள் உலகின் ஒரு பகுதி
அடுத்தவனை வேலை வாங்குவது
அழகான பெண்ணுக்காக சுற்றி வருபவனை
அழகாக உபயோகப்படுத்தி
அவள் முன்னேறி விடுகிறாள்
இவள் மட்டும் என்ன
ஒரு நல்ல சம்பளம் வாங்குபவனோடு பல் இளித்துக் கொண்டுதான் இருந்தாள் அன்று
நாம் உலகை புரிந்துக் கொள்ள வேண்டும் என நினைத்து அழுதேன்
நண்பனின் கதை இது
அவனை என்னால் தேர்ற முடியவில்லை
அவளுக்காக கார் வாங்கினான்
நிறைய செலவு செய்தான்
கடைசியில்
அவள் அவள் வழியில்
என்ன செய்ய முடியும்
பார்வையால் புரிந்துக் கொள்ள இது சினிமா அல்லவே


மென்பொருள் கனவில் - 13

இருபத்தி இரண்டு வயதில் வரும் கவலையா இது
கவலை குடி
கண்ணில் கருவளையம்
அவள் உன்னை ஏமாற்றினாலா இல்ல இல்லை நான் ஏமாந்த்தேனா ?
அவள் எந்தக் கவலையும் இல்லாமல் அவள் வாழ்க்கையை பார்க்கப் போய்விட்டாள்
வேலைப் பளு வேறு அதிகமாகி விட்டது
இதே போல் பல கதைகளை கேட்டு விட்டேன்
முடிவு
இது தான் மென்பொருள் வேலையில் பெண்களின் விளையாட்டு ...
ஒரு விளையாட்டு முடிந்தது
அடுத்த விளையாட்டைப் பார்ப்போம்


மென்பொருள் கனவில் - 14

இப்படியே போய்க் கொண்டிரந்த வாழ்கையில்
ஒரு வசந்தம் வராதா என ஏங்க வழி இல்லை
காலை உணது மன்னிக்கு வந்தால் இரவு 11 மணிக்குத் தான் போக முடிகிறது
அதுவும் அவன் காரை 12 மணிக்கு குடுத்து அது 8 பேரை ஏற்றும்
ஊரை எலாம் சுற்றி 1,15 மணிக்கு வீடு சேர்ந்து சாபிட்டு தூங்கி
அரை குறை தூக்கம்
காலை மறுபடியும் கம்பெனி
சனியும் வர வேண்டும்
ஞாயிறுரும் சில நாள்
சாப்பாடு மட்டும் தான்
மற்றது ஒன்றும் கிடையாது
காலக் கொடுமை
நாங்கள் தான் அதிகம் சம்பாடிகொறோம்
எங்கே
சாப்பிட நேரம் இல்லை
ஒழுங்கான லீவ் இல்லை
வீட்டிலும் கணினியில் விழி செய்ய வேண்டும்
நடுவில் அவளைப் பார்தேன்
அவள் சந்தோசமாக ஊர் சுற்றிக் கொண்டு தான் இருந்தாள்


மென்பொருள் கனவில் - 15

எங்கள் அணியில்
புதிய தென்றலாய்
ஒரு சிரிப்பழகி வந்திருந்தாள்
மெல்லப் பேசினாள்
கன்னக் குழியோடு
அழகாக சிரித்தாள்
சலங்கை ஒளி நாட்டியம் போல் நடந்தாள்
கொஞ்சம் முதிர்ச்சியான முகச்சாயல்
முல்லைக்கொடி இடை
ஒரு பக்கம் பார்த்தால் அழகுதான்
முதலில் சாதாரணமாகத்தான் இருந்தாள்
பின்பு அவள் அழகு போகப் போக
கூடி கொண்டே போனது
பணம் எப்படி வேலை செய்கிறது பாருங்கள்
சின்னக் கண்கள்
பல நாள் சப்பியக் கானம்
சில நாள் உப்பி அழகாக இருக்கிறது
அதற்கும் அழகுசாதன மையத்தில்
காத்து அடிப்பாள் போலத் தோன்றும் ..


மென்பொருள் கனவில் - 16

இவள் அவனது தலைமைப் பொறுப்பில் இருப்பத்தால்
அவள் மேல்
மையம் கொள்ள
வாய்ப்பு கம்மி
வயது வேறு இருக்கும் போல
மாடர்ன் டிரஸ் அவளுக்கு அவ்வுளவு அழகாக இல்லை தான்
அவள் அடியே விரும்பி அணிந்தாள்
கோல விழியாள்
மௌன மொழியால்
கிறங்கடிப்பாள் ..
கருப்பான உடைதனில் வந்து ஏலோர் கண்களையும் அலையவிட்டாள்
சிங்காரி
ஒய்யாரி
அலங்காரி
கூத்தாடிப் போல் உடை அணிந்தவள் இப்பொழுது தேவதையாய்
ஆடிபாடுவாள்
எல்லோரிடமும் சமமாக பழகுவாள்
எதற்கும் அஞ்சமாட்டாள்
அடங்க மாட்டாள்
சாடுவாள் ..


மென்பொருள் கனவில் - 17

ஒரு வெள்ளியன்று சேலையில் வந்தவள்
தேவதை போல இருந்தாள்
பச்சை வண்ணச் சீலையில்
வெள்ளை மல்லி சூடி வந்தாள்
வெள்ளியன்று மட்டும் ஒரு பெண்ணாக இருக்கிறாள்
ஏன்
மற்ற நாட்கள் இப்படி பேயாக இருக்கிறாள்
என்னவோ கடவுளுக்கே வெளிச்சம்
விரல் வீணை மீட்ட
நன்றாக அசைத்து அசைத்து பேசி
தலை கோதி
நம் இமையை ஒரு நிலையில் நிற்க விட மாட்டாள் அழகு மோகினி
ஏதோ நெருங்கிய சொந்தம் போல்
நன்றாக பழகியவள்
அவள் பெயர் புன்னகை அரசியாக இருக்கக்கூடும்
எப்படி இவ்வுளவு அழகாக ஒருவரால் சிரிக்க முடியும்
கொள்ளேன..
மத்தாப்பு புன்னகையுடன்
பௌதீக வெடிப்புடன்
கண் இம்மைக்கும் நேரத்தில் பேச்சை விறுவிறுப்பாக மாற்றும்
பேச்சாற்றல்
அவ்வுளவு தங்க நகையும் அணித்து நான் பார்த்தது இல்லை
ஆனாலும் அழகு தான்
தோற்றத்தில் ..
பார்வையில் ..
நடையில் ..
உடையில் ..


மென்பொருள் கனவில் - 18

வானில் விண்மீனைக் காணவில்லை
என நிலா குறை சொன்னது என்னிடம் ..
நானும் கண்டுக்கொண்டேன்
இதோ
இவள் குழலில்
மல்லிக்கொடியாய் !


மென்பொருள் கனவில் - 19

நீளமும் வெண்மையும்
மாறி நிற்கும் வானில்
நீளமும் வெண்மையும்
அடித்துக் கொள்ளும் கடலில்
அதைப்போல்
வண்ணத்துப் பூச்சி
சிறகடிக்கையில் பல வண்ணங்கள் ..
இவளும் ஒரு நவரசக்காரி தான்


மென்பொருள் கனவில் - 20

பல அழகான கதைகள் உண்டு எங்கள் மென்பொருள் உலகில்
ஒரு கஞ்சப் பிசிநாரி இந்திக்காரப்பையன்
அவன் ஒரு பெரிய படிப்புக்காரன்
குறைந்த வயதில் நிறைந்த சம்பளம்
அவன் ஒரு நல்ல கைப்பேசி கூட நாம் அவனிடம் பார்த்தது கிடையாது
அவனிடம் யாரும் ரொம்ப நெருக்கம் கிடையாது
இந்திக்காரன் என்றாலே திமிர் பிடித்தவன்தானே என் தமிழர்கள் நினைப்பதுண்டு
அவன் ஒரு தனிப்பிறவி
வேலையும் ஒரு வித்தியாசமாக செய்பவன்
அவன் வந்த நேரம் இருந்த இந்திகாரர்கள் வேலையை விட்டு போய் விட்டார்கள்
இவனாகப் போனான்
வருவான்
கேட்பார் இல்லாத பிள்ளை
அவனுக்கு வாழ்வில் வந்த இன்ப அதிர்ச்சியைப் பாருங்கள் ..
அவனையும் ஒருத்தி இழுத்துவிட்டாள்
அழகால்
அறிவால்
அடங்கா திமிரால்
அலங்காரமின்றி
அழகு தேசத்தில் பிறந்தவள்
அமுதாக பேசுபவள்


மென்பொருள் கனவில் - 21

வெள்ளாவியில் வெளுத்து வெள்ளை அடித்தாற்போல் இருப்பாள்
அவள் பெயரைக் கேட்க
ஒரு மேலாளருக்கு சாட் (அரட்டை) மூலம் கேட்டான்
நல்ல நிறம் கொண்டவள்
அமைதியாகதான் இருந்தாள்
மெல்ல சிரித்தாள்
இது போதாதா எங்கள் ஆண் இளவட்ட நண்பர்களுக்கு ..
நல்ல புது சட்டை
புது கார்
புது பைக்
என அவர்கள் வழியில் ஆரம்பித்து விட்டார்கள் வேலையை ..
ஆனால் இவள் அப்படி
அலுவலகம் விடு வெளியி சுற்றும் அளவுக்கு மோசம் இல்லை போல
ஒழுக்கமான
பாங்குடைய
வரம்பு மீறாத
ஏற்புடைய
பண்பார்ந்த
உடையே அணித்து வந்தாள்..
ஒரு சினிமா நடிகையும் மேக்கப் இல்லாமல் இவளிடம் போட்டி போட முடியாது
அழகாக தமிழ் பேசுவாள் ..


மென்பொருள் கனவில் - 22

சிகப்பு அவளுக்கு பிடித்த நிறம் போல
ரொம்ப நாட்கள்
சிவந்த ரோஜாப் போல
சிவப்பு சுடியுடன் வளம் வரும் சிவந்ததாரகை
ஒரு பக்கம் பார்த்தாள் ஹன்சிகா போலத் தெரிகிறாள் ..
மறுப் பக்கம் பார்த்தாள் சதா போலத் தெரிகிறாள் ..
அந்த விழியன் ஏக்கம்
காளையை சும்மா விடுமா ..
அவளுக்கோ திருமண வயது நெருங்குகிறது..
அவள் விழி சுறாவிற்கும் திமிகலதிற்கும்
வலை வீசுகிறது
ஒரு வாட்டசாட்டமான தமிழ்க்காரன்
அவள் பார்வையில் முதலில் அகப்பட்டுக் கொண்டான்
காமம் கடந்து காதல் தீயை பத்தவைத்து விட்டாள் அந்த
சிவந்த மேனியுடையாள்
சிவந்த கொய்யாவித்துப் போல் சிரித்தாள்
மயங்கியும் விட்டான்
அவன் கனமான பர்சை விட
அவன் மனம் கணம் அதிகம் என இருவருக்கும் தெரியவில்லை ..
இவனோ ஒரு பெண் பிடித்தால் திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறான்
பெரும்பாலான மென்பொருள் வேலையின் பெண்களுக்கு மத்தியில்
இவள் எப்படி எனப் போகப் போக பார்ப்போம்


மென்பொருள் கனவில் - 23

அவனுக்குள் ஒரே சந்தோசம் ..
அவன் சிறகடித்துப் பறந்தான்
இருவருக்கும் கைபேசி உரையாடல்கள் ஆரம்பித்துவிட்டன
இப்படியே உலகம் உருண்டோடியது
அவள் ஏதோ போட்டியில் கலந்து கொண்டாள்..
பரிசு வாங்கினாளா எனத் தெரியவில்லை ..
அவளும் வயதானவலும் ஒரு போட்டியில் கலந்து கொண்டார்கள் ..
இவனிடம் அவள் ஏதோ உதவி கேட்டாள் போலும் ..
அதற்கு அவன் என்ன பதில் சொன்னான் எனத் தெரியவில்லை ..
இவன் அதில் கோபமாகி இரவு பகல் என்று பாராமல் ஒரே கைபேசியில்
குறுந்தகவல்கள் அதிகம் அனுப்பவே அவள் மிரண்டு போய்விட்டாள்
அதற்கு அப்புறமாக அவர்கள் ரொம்பப் பேசி யாரும் பார்த்ததில்லை ..
அவனோ ஏதோ அவன் தான் ஒதுங்கி விடேன் எனப் பெருமையாக சொல்லிக் கொள்வான்
இவனோ தனிமையில் ....
சோகம் கொஞ்சம் இருக்கத்தானே செய்யும் ..
அவள் பிடித்து விட்டாள் இந்திக்காரத்தோழனை


மென்பொருள் கனவில் - 24

இருவரும் ஒரே கொண்டாட்டம் தான்
குறைந்த வயது
இளமையின் ஆட்டம்
அளவுக்கதிகமானப் பணம்
சிரிப்புத் சத்தமும்
ஒய்யார நடையும் தான் ..


மென்பொருள் கனவில் - 25

அன்றிலிருந்து
அவனுடன் கை கோர்த்து அடங்காமல் ஓடினால்
ஓடினால் ... ஓடினால் ..
யாருடன் நான் சுற்றினால் உன்னக்கென்ன என விழி செய்வோருக்கு
என்பதுப் போல்
இருந்தது அவள் போக்கு
அவள் தோழிகள் மிரண்டார்கள்
கூட வேலை செய்பவர்கள் நன்னகள் என் அவள் விழியை செய்ய வேண்டும்
எனச் சாடினார்கள்
ஷால் போடமால் அவள் அழகை தூக்கிக்காட்டினாள்
அவள் ஆன் நண்பனோ
கிரெடிட் கார்டு பில்லை பார்த்துக்கொண்டு இருந்தான்
கஞ்சப் பிசிநாரி செலவாளி ஆனான்
என்ன செய்வது வாழ்கையில் புது குதூகலம்
ஒரு இனம் புரியாத இன்பம்
ஊரே தூற்றியது
ஒரு நாள் யாரோ பக்கத்து மேலாளர் கேட்டேவிட்டாள்
என் வேலையும் செய்யாமல்
அடுத்தவனையும் செய்யவிடாமல்
என் இப்படி செய்கிறாய் என்று
பாவம் அவன் வெட்கித் தலை குனிந்தான்
இவள் ஆத்தாடி ஆட்டத்தை வேகமாக விளையாடினாள்
பாவம் எல்லா தலப்பாக்கட்டு பிரியாணி கடைகளிலும்
அவன் கிரெடிட் கார்டுதானே தேய்க்கப் படிக்கிறது


மென்பொருள் வேலையின் கனவில் - 26

மலரோடு மலராக பயணித்தாள்
நல்ல குணமாக
பாட்டோடு குயிலாக
ஆடத்தோடு மயிலாக
அழகோடு நிகராக
நிறத்தோடு நிறமாக
நாணத்தோடு வெட்கமாக
காதலோடு காதலாய்
கலந்தாள்


மென்பொருள் வேலையின் கனவில் - 27

அன்றொரு நாள்
வெண்ணிலாவை கிழித்துக் கொண்டு வந்தாள்
வானத்தை
இடியாய் இடித்துக் கொண்டு வந்தாள்
பூச்செண்டு
ஏந்தி வந்த பூக்கூடை
வண்ணத்தை
தங்கி வந்த வண்ணத்துபூச்சியவள்
வெள்ளை உடையில் ஒரு வெண்ணிலா
காலங்கள் சிறகடிக்கட்டும்
கோலங்கள் நேர்கோடாய் மாறிப்போனது
அவள்
சிரிப்புத் சத்தமே காதை கிழித்தது


மென்பொருள் வேலையின் கனவில் - 28

அவள் அன்று தன்னை அலங்காரப் படுத்தினாள்..
நான் நினைத்தது
அழகு கண்ணாடியை பார்க்கும் நிஜக் கண்ணாடி
ஒயிலாக நடந்து வருவாள்
மயிலாக ஆடி வருவாள்
தீயாக மாறி விடுவாள்
கர்வம் கொண்டவள்
கண்டிப்பானவள்
அடங்கடவள்
மயக்குவாள்
சுண்டி இலுப்பாள்
ரொம்பப் பேச மாட்டாள்
நன்றாக நண்பனிடம் அரட்டை அடிப்பாள்
அவள் இந்தத் துறையை நன்றாக தெரிந்து வைத்து இருக்கிறாள் போல !


மென்பொருள் வேலையின் கனவில் - 29

இப்படிதான் மென்பொருள் வேலையில் அழகு பெண்கள் மேலிடத்தில் பெயர் எடுப்பது
அடங்காமல் நண்பனோடு
உறவாடி
கொண்டாடி
அலுங்காமல்
குலுங்காமல்
அழகாக வளம் வந்தாள்
அழகாக பார்க்கும் காளையர் கூடம் அவளை பேயாக பார்த்தது ..
திமிராக நடந்தாலும்
மேலாரின் வலக்கை அவள்
உங்களை அல்லக்கை ஆகி விடுவாள்
அதற்காக பயந்த கூட்டம் பல
நண்பனும் செலவு செய்தான்
இவள் தன் காதலி தான் என்று
அவளால் இவனும் புகழ் பெற்றான்
வெட்கித் தலை குனிந்தான்
இவனையும் ஊர் சுற்றுகிறான் என்று தூற்றியது
கவலைப்படாமல் வஞ்சிக் கோடியை வலைப்பதிலயே குறியாக இருந்தான்


மென்பொருள் வேலையின் கனவில் - 30

இப்படியே போய்க் கொண்டிருந்த வாழ்கையில்
அவளுக்கு ஏதோ பிரச்சனை குடும்பத்தில்
அடங்காமல் எல்லோரிடமும் அன்பில்லாமல் நடந்தால்
அவள் நண்பனோ திக்கித் தடுமாறிப் போனான் ..
பேய் பிடித்தது போல ஆகி
அவளும் அழக காரணமேனோ
அவள் வீட்டில் பிரச்சனை
திருமண பேச்சை?
இல்லை வேற ஏதாவதா?
தெரியவில்லை
அங்குமிங்கும் நண்பர்கள் அலைந்தார்கள் ..
அவள் குடும்பதி யாருக்கோ உடல்நலம் சரியில்லையோ?
நண்பனும் நிறைய செலவு செய்தான்
என்னில் அடங்காத செலவு ..
இன்னும் அவன் கடலை அவளிடம் அவன் சொல்லவில்லை
வெள்ளியுலக நண்பர்கள் இன்றும் ..
அவள்ளுக்கு கல்யாணம் என இடியான செய்தியை மெளனமாக சொன்னால் ..!


மென்பொருள் கனவில் - 31

இப்படியே இருவரும் முக்கிய முடிவை எடுக்க சிரமப்பட
அவள் பெற்றோக்கு உடம்பும் சரியில்லை
வீட்டோடு தான் நான் இருப்பேன்
நண்பா கலந்கதே
கண் இமைக்கும் நேரத்தில்
கூப்பிடும் தூரத்தில்
நான் இருப்பேன்
நான் தான் உனக்கு மயில்
பாடாத குயில்
கம்பன் எழுதாத கவிதை நம் நட்பு
என காதலாய் நட்பை சொன்னாள்
அவனுக்கு ஒன்றும் புரியவில்லை
அவளுக்கு செலவு செய்வதைத் தவிர
திடீரென்று ஒரு நாள் வேலையை விட்டு நின்றாள்
புன்னகையோடு
ஆயிரக்கணக்கில் சம்பளத்தை விட்டு என் நின்றாள்?
வீட்டில் திருமணத்திற்கு நிர்பந்தமா?
எவனுக்கு ஒன்றும் புரியவில்லை
பைத்தியம் பிடித்தது போல ஆனான்......!!!


மென்பொருள் கனவில் - 32

இந்தக் கவிதை கதையில் வரும் சம்பவம், பெயர்கள் எல்லாம் கற்பனையே ...


இத்தனை கலக்கத்தில் காதலன் இருக்க
அவளோ
லட்சக்கணக்கில் ஒரு நல்ல வேளையில் சேர்ந்து விட்டதாக பிறகு அறிந்தான்
என்ன செய்ய
அவள் ஏமாற்றிநாளா?
இல்லை இவனைப் பிடிக்கவில்லையா ?
ஒன்றும் பிரியவில்லை அவனுக்கு ..
நடை பிணம் ஆனான் ..
வேலையும் செய்ய முடியவில்லை
பணமும் நிறைய கடன் ..
கடைசியில்
அவன் இப்பொழுது தான்
மென்பொருள் வேளையில் முதல் பெண்ணை பார்த்து இருக்கிறான் ..
போகப் போக இன்னும் ஏமாற்றக் காத்து இருக்கிறார்கள்
இவனைப் போல்...
அவள் சந்தோசமாய் இன்னொரு நண்பனை ...
தவறு நண்பனை அவள் நடத்துவாள் ..
காதலனாக அவன் நினைக்க வேண்டும்
அவளும் கற்புக்கரசியாக இருப்பாள்
லண்டன் மாப்பிள்ளை கனவும் நிறைவேறும் ...
ஒரு சிகப்பு ஹன்சிகா கதை முடிந்தது ..
இன்னொரு அழகியை பற்றி பாதியில் நின்ற கதையை தொடருவோம் ..
இப்படி பல பெண்கள் ஹைடெக் உடையில் சுற்றுகிராகள் ..
பெரும்பாலும் மென்பொருள் துறையில் ..

கடைசியில் அவனுக்கு ஒரே ஒரு சங்கடம் தான் ..
சொல்லாமல் சென்று விட்டாள்


மென்பொருள் கனவில் 33 ...........
மென்பொருள் கனவில் - 19 .. தொடர்ச்சிக் கவி


யாரோ ..
முல்லைக் கொடியை ஒடித்து வைக்கச் சொன்னதற்கு
மின்னலை
உடைத்து பூமிக்கு கொண்டு வந்து விட்டார்கள் !


மென்பொருள் கனவில் 34

இப்படிதான் வரைந்த ஓவியம் போல்
ஒரு நாள் வந்தாள்
அவள் வேறு
நான் வேறு
என் நம்மை செண்டி இழுக்கிறாள் அந்த வெள்ளை தேவதை
அவள் நம்மை ஆட்டிப் படைப்பாளே
கொடுங்கோல் ஆட்சிக்கு சொந்தகாரி அவள்
அந்த வெள்ளைச் சிரிப்பும்
படபடக்கும் இரு இமைகளும்
போக வழி தெரியாமல் அவளிடம் தடுமாறும் புன்னகையும்
கிறங்கடிக்கும் பார்வையும்
அவளுக்கு சொல்லியா தர வேண்டும்


மென்பொருள் கனவில் 35

என் கண்ணனுக்கு தீடிரென்று தேவதையாய்
தெரிய ஆரம்பித்தாள்
மெல்லச் சிரித்தாள்
அழகாக பேசினாள்
தலை குனிந்து நடக்க ஆரம்பித்தாள் ..
என்ன மாயம்
கூர்மையான நகங்களின் நடுவே
சேலையை விட்டும் விடாமலும் பிடித்து இருப்பாள்
ஆண்கள் இதயத் துடிப்பை
ஆட்டோ மீட்டர் போல வேகமாக அடிக்க வைப்பாள் அந்த மாயக்காரி ..
அவள் சேலைக் கட்டினால்
கோவில் சிலை உங்கள் முன்னாள் நிற்பது போலத் தோன்றும் ..
மாயா என்று தான் அவளுக்கு பெயர் வைத்திருக்க வேண்டும்
ஏனோ கிரிஜா என வைத்து விட்டார்கள் ..


மென்பொருள் கனவில் 36

ஒரு வேலை
நானும் அவள் மாயவலையில் விழுந்து விட்டேனா ?
இந்த மென்பொருள் உலகில் பெண்கள் பற்றி தெரிந்துமா?
இருந்தாலும் அது ஒரு இணை புரியாத இன்பத்தை தந்தது
அதை பணத்தால் வாங்க முடியாது
அதிகாரத்தால் வாங்க முடியாது
வற்புறுத்தலால் முடியவே முடியாது
அன்பால் மட்டுமே
அவளால் மட்டுமே
அடைக் குடுக்க முடியுமோ..
அவள் அன்பிலும்
ஸ்பரிசதிலும் அவள் ஒரு தினுசு தான்


மென்பொருள் கனவில் 37

இப்படிதான் அவிளிடம் மயங்கிவிட்டேன்
மயங்கியது எனது விழியா?
மனதா ?
அவள் ஒரு வகை அழகு
நகக் கீறலில் கோலம் போடுவாள்
ஒற்றை விரல் நெற்றியில் வைத்து அழகாக தலை அசைப்பாள்
அவள் பேசும்போது
மத்தாப்பில் சிதறும் பூக்கள் போல அழகாக இருக்கும்
வானவில்லின் அத்தனை வண்ணங்களும் அவள் நகக்கீரலில் இருக்கும்

மென்பொருள் கனவில் 38

வாரம் ஒரு நாள் அல்ல
தினமும் ஒரு மணி நேரம் அல்ல
ஒரு மணி நேரத்தில் ஒரு நொடியும் அல்ல அவள் நினைவுகள் ..
எவ்வளவோ அழகு பெண்களைக் கடந்து விட்டேன்
எவ்வளவோ சிரிப்புச் சத்தத்தைக் கேட்டும் விட்டேன்
எவ்வளவோ படங்கள் பார்த்தேன்
அழகு நடிகைகள்
புதுத் தோழிகள்
இருந்தும் அவள் நினைவுகள் நீங்கவில்லை
இன்னும் அதிகம் ஆகின்றன ..


மென்பொருள் கனவில் 39

ஆள் அழகாகத் தான் இருக்கிறாள்
இருந்தும் தன் அழகை தூக்கிக்காட்ட நினைக்கிறாள்
தான் ஒரு இலைஞ்சி என்பதை இப்படி
வாலிபரை ஏங்க விட்டு தான் நிரூபிக்க வேண்டுமா?
அரைகுறை ஆடையில்
செயற்கை அழகை மேல வைத்துக் காட்ட சாப்ட்வேர் பெண்ணுக்குத் தான்
அவ்வுளவு ப்ரியம்


மென்பொருள் கனவில் 40

திங்களன்று ஆடுகிறாள்
செவ்வாயன்று சாடுகிறாள்
புதனன்று கூடுகிறாள்
வியாழன்று ஈர்க்கிறாள்
வெளியன்று மெளனமாகிறாள்
சனியன்று மயக்குகிறாள்
ஞாயிறன்று கலகலக்கிறாள்

இவள் என்ன வாரத்திருமகளா?


மென்பொருள் கனவில் 41

தடுமாறும் என் நெஞ்சம்
இடம் மாறியதேனோ

காற்றில் குழல் அசைந்தால்
மனம் சிறகடிகுத்தடி

மெலிதான சிரிப்பழகில்
முத்துப் பல்லும் தெரியுதடி

இன்றும் நான் நினைத்தால்
அது நீ என்னிடம் " களவாடிய பொழுதுகள் "


மென்பொருள் கனவில் 42

வெண்தாமரையின் மேல் ஒரு கத்திரிப்பூ


மென்பொருள் கனவில் 43

ஒரு பக்கம் சிரிக்கிறாள்
மறு பக்கம் முறைக்கிறாள்
ஒரு கண்ணில் தண்ணீர்
மறு கண்ணில் நெருப்பு
ஒரு கையில் பூக்கூடை
மறு கையில் கத்தி


மென்பொருள் கனவில் 44

மற்றொரு நாள்
கொடியோடு சேலையில் ஒட்டிக்கொண்டு வந்தாள்
அவளைப் பார்க்காத கண்ணில்லை
ஏற்றெடுத்து பார்க்க வேண்டும்
குங்குமச் சிரிப்போடு
மெல்லிய புன்னகையோடு
அழகோவியம் அவள்
வெட்கப்படும்போது அவள் ஒரு "அழகிய தமிழ் மகள்"
பெண்ணிற்கு நாணம் வந்தாள் எப்படி வெக்கப்படுவாள்
என்று
அவளிடம் தான் பெண்களும் கற்க வேண்டும்
அவள் போடும் கோலம் அழகு
இவள் கோலமே அழகு
அவ்வுளவு அழகாக தலை குனியும் இமை திறவா கமலம் போல நடப்பாள் ..


மென்பொருள் கனவில் 45

அப்படி என்னடி மாயம் செய்தாய்

நீ சிரித்தாள்
சிரிக்க வைக்கிறாய்

நீ அழுதாள்
ஏங்க வைக்கிறாய்

நீ விக்கினால்
ஏக்கமாய் பார்க்க வைக்கிறாய்

நீ தும்மினால்
பதற வைக்கிறாய்

நீ பேசினாள்
ரசிக்க வைக்கிறாய்

நீ உரசினால்
தீயாக எரிகிறாய்

நீ பார்த்தால்
நிலவாக குளிர்கிறாய்


மென்பொருள் கனவில் 46

மழைச்சாரலில் நனையாத வெண்ணிலா அவள்
மணமேடையில் உலா வரும் மேனகை அவள்
தமிழ்க் கவிதையின் சோலை அவள்
கனவில் வந்து காதல் சொல்லும் தேவதை அவள்
காண்பவர் மனதை அள்ளிச் செல்லும் கொள்ளைக்காரி அவள் !
அவள் உடை அழகைப் பார்த்தே
விழாத ஆண்களும் உண்டோ
பார்க்காத பெண்ணும் உண்டோ
கிறங்கடிக்கும் அழகைக் கொண்டவள் எதுவும் நடக்காதவாறு
நடப்பது அவளுக்கு கைவந்தக் கலை
மேல் அழகை தூக்கிக்காட்டி திமிராக நடப்பாள்


மென்பொருள் கனவில் 47

இப்படித்தான் கொஞ்சி கொஞ்சிப் பேசி
மனதை கிறங்கடித்தாள்
அந்த பல வேசத்துக்கு சொந்தக்காரி
சுண்டி இழுப்பாள்
சீண்டி பார்ப்பாள்
முடி கோதுவாள்
இமை விரிப்பாள்
தோல் சாய்வாள்
இதில் மயங்காத ஆண் மகனை தேர்ந்தேடுப்பாள்
அந்த பால் வண்ணக்காரி
கொஞ்சும் சிரிப்பழகி
பொல்லாத பேச்சுக்காரி


மென்பொருள் கனவில் 48

எல்லோரையும் சமமாக பாவிப்பாள்
முல்லைச்சரம் போல பற்கள்
அவளை அழகாக படைத்த பிரம்மன் தவறா?
அதை கால காலத்திற்கு திருமணமாகாமல்
தள்ளிப்போட்டு அழகு பணம் மட்டும் போதும் என
முடிவெடுத்தது அவளா?
இல்லை வாலிப காலத்தில் ஏமாந்தாளா ?
இல்லை திருமணம் ஆகி விவாகரத்தானவளா?
இல்லை இளம் விதவையா?
எதுவும் தெரியாது
அவள் ஒரு புரியாத புதிர்
எல்லோரும் சந்தோசமாக இருக்க வேண்டும் என நினைப்பாள்
அவளும் சிரிப்பாள்
சற்று நிறத்தில் அவள் எங்கோ பார்ப்பாள்
ஒரு சோகமயமாக
ஒரு ஏக்கத்துடன்
இருப்பாள்


மென்பொருள் கனவில் 49

இப்படித்தான் அவள் மேல் அன்பும் பாசமும் அதிகம் ஆனது
காலம் களம் கண்டது
மௌனம் மொழி பேசியது
ஊமை வார்த்தை பேசியது
குருட்டு வாழ்க்கை வாழ்ந்தது
இளமை பொய்த்தது
அவளுக்கும் வெட்கம் வந்தது
வெட்கம் வரச் செய்தவன் யாரோ ?
சினிமாக் கதைப்படி
அவன் தானே காதலன்
அவனேதான் மாப்பிள்ளை
நானும் அப்படித்தான் நினைத்தேன்
புதிதாக வெட்கம் கொண்டாள்


மென்பொருள் கனவில் - 50

அவனை ஏன் திருமணம் செய்யவில்லை எனத் தெரியவில்லை
என் மனதுக்குப் புரியவில்லை
எல்லோரோடும் வெளியில் செல்வாள்
நண்பர்களோடு படம், பூங்கா எனச் செல்லும் பழக்கம் உண்டு
ஆனாலும் அவனை மட்டும் ஒதுக்கி வைத்தாள்
சில நாட்காளாக யாருடனும் ஒழுங்காக பேசுவதில்லை
ஆனால் யாருக்கும் தெரியவில்லை
புரியவும் இல்லை
அவோனோடு இவள் காதல் கொண்டாள் என என்
மனது சொல்கிறது
அமைதியானாள்
காணாமல் போனாள்
தீடிரென்று
வேலையை விட்டு நின்றாள்
திருமணம் என்றாள்..
யாருடனோ எவருடனோ
ஒரு அழகான காற்று எங்களைக் கடந்து போயிற்று ..
நினைவுகள் நீங்காமல் .......

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.