1994ஆம் வருடம் எனக்கு உடம்பு சுகமில்லாமல்.இருந்தது .கிட்டத்தட்டகிட்டத்தட்ட3-மாதகாலம் உடல் சோர்வாகவே இருந்தது.டாக்டரிடம் எல்லா பரிசோதனைகளும் செய்தாயிற்று.ஒன்றுமில்லை என்று சொல்லிவிட்டார்கள்.அப்பொழுது என்னுடைய உறவினர் ஒருவர் தங்கள் குடும்பத்துடன் இந்தியா முழுவதும் சுற்றுலா செல்வதாகவும் ஒரு இடம் காலியாக இருப்பதாகவும் நீ வருகிறாயா என்று கேட்டார்கள்.பேருந்தில்பேருந்தில்1மாதம் சுற்றுலா என்றார்கள்.எனக்கு உடம்பு சரியில்லை வரமுடியாது.என்றேன்.ஆனால் என்வீட்டில் உள்ளவர்கள் ஒரு மாறுதலுக்காக கண்டிப்பாக போகச்சொல்லி அனுப்பியும் விட்டனர்.அந்த ஒரு மாத பயணம் என்ற வாழ்க்கையில் மறக்கமுடியாத அனுபவமாக இருக்கும் என்று நான் நினைக்கவே இல்லை.

பேருந்தில் ஏறி அமர்ந்ததும் இருந்து என்னுடைய ஒரே எண்ணம் மீண்டும் எப்படியாவது.இறங்கி வேறு பேருந்து ஏறி வீட்டுக்குப் போய்விடவேண்டும் என்பது தான்

பேருந்து புறப்பட்டு இரவு முழுவதும் போயக்கொண்டே இருந்தது.அதுவரை எனக்கு நான் எங்கு செல்கிறேன் என்றே தெரியவில்லை.விடிகாலையில் பேருந்து ஒரு இடத்தில் நின்றது.இறங்கி பார்க்கும் போது அங்கு ஒரு பெரிய ஆறு இருந்தது.பேருந்து ஓட்டுனர் எல்லாரும் இந்த ஆற்றில் குளித்து விட்டு புறப்படுங்கள் சுவாமிமல

கனவில் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம் என்றார்

ஆற்றைப்பார்த்தேன்.சிலுசிலுவென்று தண்ணீர் ஸ்படிகம் போல் ஓடிக்கொண்டிருந்தது.அநத விடிகாலை குளிர்ச்சியும்ஆகுளிர்ச்சியும்ஆரஞ்சு நிற சூரியனும் மனதுக்கு ஒரு மகிழ்ச்சியை கொடுத்தது .என்னையறியாமல் ஆற்றில் இறங்கினேன்.சிறிது தூரம் சென்று நின்றேன்.காலில் சில்லென்று தண்ணீர் சலசலத்தது.எல்லோரும் முங்கி குளி என்றார்கள்.எனக்கு பயமாக இருந்தது. ஆனாலும் பயத்தைக்காட்டிக்கொள்ளாமல் நீரில் மூழ்கி னேன்.அப்பொழுது நடந்த அதிசயம் என்ற வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று.நான் நீரில்மூழ்கியவுடன் யாரோ என்னை அழுத்துவது போல் உணர்ந்தேன்.ஒரு நிமிடம் சென்று நான் மேலே எழுந்தேன்.அப்பொழுது என்னைவிட்டு ஏதோ ஒன்று வெளியேறுவதை உணர்ந்தேன்.அப்பொழுது என்றன உடல் லேசாக ஆனந்தமாக ஆரோக்கியமாக சுறுசுறுப்பாக மாறுவதை உணர்ந்தேன்.அன்று முதல் ஒரு மாத காலம் என்னுடைய பயண அனுபவம்சஅனுபவம்சசந்மதோஷம் நிறைந்ததாக இருந்தது.

இன்று வரை அந்த நிகழ்ச்சிக்கு காரணம் புரியவில்லை ஆனால் இறைபக்தி இருப்பதை உணர்கிறேன்.

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.