காதலனுக்கு அன்பு காதலி எழுதுவது,


"ஒரு கிளையில் வாழ்ந்து, காதல் புரிந்த காதல் கிளிகள் நாம்.. மதிப்பிற்குறிய வேடன் என்னை சிறைபிடிக்க, ஏக்கத்தில் உயிர் பிரிந்து கொண்டிருக்கிறது..சிறையில் எனக்கு உணவளிக்கிறார்கள், ஆனால் அதற்கு விலையாக என் உயிரைப் பறித்து கொண்டிருக்கிறார்கள். என் காதலோ, சிறையின் கதவுகளை உடைக்க முயற்சித்து தோற்றுப் போகிறது.. காதல் உண்மையில் பலவீனமானது என்பதை உணர்கிறேன்.. அழுகிறேன்." இதற்கு மேல் என்னால் அவள் எழுதிய இந்த கடிதத்தை படிக்க முடியவில்லை.. "அழுகிறேன்" என்ற அவள் எழுதிய வார்த்தையை என் கண்ணீர்த்துளி அழித்து ஆறுதல் கூறியது. (தொடந்து படிக்கிறேன்..)
காதல் பறவைகள் ஒன்று பிரிந்தால் மற்றொன்று இறந்துவிடுமாம்.. நினைவில் கொள், நாம் நினைவால் பிரியாதிருப்போம்.. தினமும் என்னை நீ அணைப்பது போல் நினைத்துக் கொள், நான் ஆறுதல் கொள்வேன்.. உன் ஆத்மா என்னை தினமும் தீண்டட்டும் ஆறுதல் கொள்வேன்.. தூரமும் காலமும் நம் காதலை சிதைத்து விடுமோ என்ற அச்ச உண்ர்வில் தவிக்கிறேன்.. ஏக்கம் என்னை எடுத்துக் கொள்ளும் முன், நாம் கனவுகளில் வாழ்ந்து முடிப்போம். உடல்கள் இணைய வாய்ப்பில்லை.. உண்மை தான்.. ஆனால் அது மட்டுமே நம் காதலின் நோக்கமல்ல. இந்த கடிதத்தின் நோக்கம், என் வார்த்தைகள் உன்னை தீண்டட்டும், என் வலிகள் கொஞ்சம் தீரட்டும்.. என்றும் என் அன்புக்கு உரியவன் நீ. என் கண்ணீர் துளியை துடைக்க பின்னே ஓடி வரும் இன்னொரு கண்ணீர் துளி போல், என் காதல் உன்னை தொடரும்.. இந்த பிரிவின் வலி, மரணம் வரை மட்டும் தானே நம்மை துரத்திட முடியும்.. வேறு என்ன செய்திட முடியும் அதனால்.. பிரிவு என்பது, நம்மால் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை, மாறாக அது எழுதப்பட்டுள்ளது.. நமக்காக கடவுளால் எழுதப்பட்டது பிரிவு என்றால், அதை வலியுடன் படித்துக் கடந்து போவோமே.. ஆனால், என்னை மறந்து விடாதே.. நம் காதலை உயிரோடு வைத்திருக்க என்னிடம் ஒரு வழி உள்ளது. நான் ஒரு கதை உனக்கு அனுப்பியள்ளேன்.. ஆனால் இன்னும் ஒரு 20 வருடம் கழித்து தான் அதை நீ பிரித்து படிக்க வேண்டும். அது வரை அது என்ன கதையென்று உன் மனம் கற்பனையில் தேடிக் கொண்டிருக்கும். காதல் அல்லது நான் உன் நினைவிலாவது இருப்பேன். தயவு செய்து பிரித்துப் படித்து விடாதே. அது நம் காதலை மீண்டும் ஓர் நாள் உயிர்ப்பிக்கும்.. அந்த நாள், நம் காதல் இந்த பூமியை மீண்டும் அழகாக்கும்.. மீண்டும் மனிதர்கள் வாழத் தகுந்த இடமாக பூமி மாறிவிட்டதாக காதல் அறிக்கை விடும்.. அதனால் இப்போதே கதையை பிரித்து விடாதே.. கருவில் குழ்ந்தை போல் உன் இதயத்தில் சுமந்து கொள்..
ஒருவேளை அதற்கு முன்பே நாம் இறக்க நேரிட்டால், மரணத்தின் மடியில் நாம் ஒருவரை ஒருவர் தழுவிக் கொள்வோம்.
வலியுடன்,
உன் காதலி..
அந்த கதை என்னவாக இருக்கும், அது காதலை மீண்டும் உயிர்ப்பிக்குமா?? படிக்க வேண்டும் என்ற ஏக்கம் என்னை இனி தூங்க விடாது. ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு வலிகள்.. இனி 20 வருடம், வலியுடன் கடந்து போகத் தான் போகிறேன் அந்த ஒரு கதையின் இன்பத்தை அடைய..

#வலிகள்_தொடரும் அடுத்த பகுதியில்

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.