எழுத்து என்பது
உனக்கு வரம்...
உன் படைப்பு ஒவ்வொன்றும்
நீ செய்த தவம்....
உன்னை நினைக்கும்போதே
உருக வைக்கிறது
உன் ஆற்றல்....
எதார்த்த வாழ்வை
நுண்ணியமாய் உள்வாங்கி
அதை நீ எழுத்தாக்கிடும் போது
அந்த வானமும்
சுருங்கிப் போகிறது...
கடலும் ஆழமில்லாமல் போகிறது...
பிரபலங்களை
அருகிலிருந்து பார்த்தவன் நான்...
உலகியலையும் எழுத்தையும்
அவர்களிடம் விவாதித்தவன் நான்...
ஆனால்,
உன் எழுத்தை வாசிக்கும் போதெல்லாம்
நான் பிரமித்துப் போகிறேன்...
எத்தனை ஆற்றல் உனக்குள்....
எத்தகைய சிந்தனை உனக்குள்....
ஞானிகளின் மன நிலை...
சித்தர்களின் யோக நிலை...
உண்மைகளின் உயர்வு நிலை....
ஆனாலும்,
பார்வைக்கு சாதாரணமானவளாய்...
அதிசயித்துப் போகிறேன்...
நீ எழுதியதை படிக்கும் போதெல்லாம்...
நீ பேசுவதை கேட்கும் போதெல்லாம்....
ஒன்றிலிருந்து மற்றொன்றை
உருவாக்கும் உனது ஆற்றல்...
இப்படியும் இருந்திருக்குமோ என்று
யோசிக்க வைக்கிறது....
சருகுகள் கூட சலசலக்கும் இந்நாளில்
வேர்களாய் ஆழம் பதித்திருக்கும்
வித்தகியுன் மௌனமே
உன் பெருமையை உணரச் செய்கிறது...
புகழ்ச்சிக்கும் நீ மயங்கியதில்லை
எந்த போதையும் உனக்கில்லை...
எழுத சொல்கிறது உன் மனம்
எழுதுகிறாய் நீ....
போட்டியோ பொறாமையோ
இல்லாதவள் நீ என்பதால்
உன்னெழுத்து உண்ணதமாகிறது...
காயங்கள் செய்தவரிடத்தும்
கர்வத்தை காட்டாத எழுத்தாளியே...
உன் எழுத்துகளே ஒரு நாள்
உன்னை சிம்மாசனத்தில் ஏற்றும்...
பாரதிசுகுமாரன்