v.s. செல்வி

எதிர் வீட்டில் புதிதாக ஒரு மாட்டுவண்டி வந்து நின்றது. அதில்இருந்து பட்டுப்பாவாடை இரட்டை சடையில் பெரியகுஞ்சம் வைத்த ரிப்பன் காதில் நீலக்கல் வைத்த தோடு அதில் நீளமான சிமிக்கி தோடுக்கும் சிமிக்கிக்கும் நடுவில் ஒரு நட்சத்திரம் நெற்றியில் நீள சாந்துபொட்டு அடர்த்தியான புருவம் இரண்டும் சேர்ந்து விடும் போல இருந்தது சுமாரான கண் சின்ன மூக்கு ஆரஞ்சு சுளைகள்போன்ற பெரியஉதடு உடம்பு முழுவதும் மஞ்சளை அரைத்து அதில் உருண்டு இருப்பாலோ என்ற சந்தேகம் எனக்கு இருந்தது கழுத்தில் செயின் கையில் நிறைய கண்ணாடி வளையல் காலில் நிறைசலங்கை கொலுசு சகிதமாக வண்டியை விட்டு இறங்கி நின்றாள். எனக்கு பொறாமை யாக இருந்தது என் வயது தான் இருக்கும் அவளுக்கு நான் மாநிறம் தான் ஆனால் நல்ல அழகு என்று என் அம்மா சொல்லுவார்.பின்..னாடியே ஜெமினியும் சாவித்திரியும் போல இருவர் இறங்கினார்கள் என் அப்பாவிற்கு ஏற்கனவே தெரியும் போல வாங்க இப்பதான் வரிங்களா என்றார் அவர் ஆமாம் வாங்க பால்காய்ச்சுறம் என்றார்.
இதோ வருகிறோம் என்றார் என் அப்பா. நானும் என் அம்மாவும் பால் காய்ச்ற வீட்டுக்கு சென்றோம் அவளோட அம்மாவும் என்னோட அம்மாவும் பேசி கொண்டார்கள்.
நான் அவளிடம் போய் நீ என்ன படிக்கிற என்றேன் நான் மூணாப்பு என்றாள் ஏதோ கிராமத்தில் படித்ததாக சொன்னாள் இப்ப இங்க தான் படிக்க போவதாக சொன்னாள் எனக்கு பயமாக இருந்தது எங்கே இவள் நம்மை விட நன்றாக படிப்பாளோ என்று மறுநாள் காலையில் நான் பள்ளி சென்று விட்டேன் இரண்டாவது பிரியட் நடந்து கொண்டு இருந்தது அவளும் அவள் தந்தை யும் வந்தார்கள் என் வகுப்பில் அவளை விட்டு விட்டு அவர் என்னிடம் வந்து வரும் போது அவளை பத்திரமாக கூட்டிவர சொன்னார் சரி என்று தலையை ஆட்டினேன் வகுப்பு நடந்து கொண்டு இருந்தது டீச்சர் கேட்ட எந்த கேள்விக்கும் அவ பதில் சொல்லவில்லை எனக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது மாலை வீட்டுக்கு வந்த பின் என்னை அவர்கள் வீட்டுக்கு கூப்பிட்டு அவள் படிக்க நான் உதவி செய்ய வேண்டும் என அவள் தந்தை கூறினார் .அன்றிலிருந்து நானும் அவளும் நல்ல சிநேகிதி ஆனோம்.உன் பேர் என்ன என்ற போது அவள் ,v.s.செல்வி என்று கூறி னால் எனக்கு சிரிப்பு வந்தது அது என்ன vs என்றேன் என் தாத்தா பெயர் வேலுபிள்ளை என் அப்பா பெயர் சுப்பிரமணிய பிள்ளை என்றாள். அவளும் படிக்காமல் என்னையும் படிக்க விடாமல் பண்ணுவா அதனால் எனக்கும் அவளுக்கும் அடிக்கடி சண்டை வரும் நான் பேச மாட்டேன் அப்போதுஅவள் தந்தை யுடன் என் வீட்டுக்கு வந்து பஞ்சாயத்து வைப்பது வாடிக்கையாகிவிட்டது அப்போது நான் பேசவில்லை என்றால் நான் அழுகும்வரை கிச்சு மூச்சு மூட்டுவாள் நானும் பேசி வடுவேன் அவளுக்கு ஒரு அண்ணன் இருந்தார் அவர் செல்வியைவிட பதினாறு வயது மூத்தவர் அதனால் தான் அவள் எல்லாருக்கும் செல்லம் ஒரு பொங்கல் அன்று புது ஸ்கர்ட் போட்டு கொண்டு செல்வி வீட்டுக்கு சென்றேன் அடுப்படியில் அவளும் அவள் அண்ணனும் சாப்பிட்டு கொண்டு இருந்தார்கள் நான் பொங்கலை கொடுத்து விட்டு திரும்பி வரும் போது என் ஸ்கர்டின் ஒரு பக்கம் தூக்கி கொண்டு இருந்ததை கண்டு இரண்டு பேரும் கேலிசெய்து சிரித்தார்கள் நான் அழுதுகொண்டே வீட்டுக்கு வந்து விட்டேன் அப்போதிலிருந்து நான் அவளிடம் பேசாமல் இருந்தேன். பிறகு அவள் அழுது என் அப்பாவிடம் பஞ்சாயத்து வைத்து திரும்பபேசினோம். பிறகு நாங்கள் நல்ல தோழிகள் ஆனோம். ஒவ்வொரு ஆண்டும் அடுத்த வகுப்பு போவதற்கு ஆண்டு விழா விற்கு நான்கு கலர் பெட்டி தேவை பட்டது செல்வி அப்பா கலர் கம்பெனி வைத்திருப்பதால் அவளால் சுலபமாக ஐந்தாம் வகுப்பு வரை பாஸாக முடிந்தது.அப்போது ஐந்தாம் வகுப்பு பரிட்சை பேப்பர் வேற பள்ளியில் திருத்துவார்கள் அதனால் அதற்கு மேல் அவளால் படிக்கமுடியவில்லை. நான் பிளஸ் டூ முடித்துவிட்டு கல்லூரி செல்ல என் அப்பா விடம் அழுதும் பயனில்லை அதற்கு மேல் நம் சொந்தத்தில் படித்த மாப்பிள்ளை இல்லை என்று மறுத்து விட்டார் அப்போது செல்வியின் அப்பா தொழில் நஷ்டம் வந்து கிராமத்தில் இருக்கும் நிலத்தை என் அப்பா விடம் விற்று விட்டார் அண்ணனுக்கு கால் நடக்க முடியாமல் போனது நிறைய செலவழித்து பார்த்து பலனின்றி உயிரிழந்தார் மனதுதாங்கமுடியாமல் செல்வி அப்பா பிழைப்புதேடி வெளியூருக்கு சென்று விட்டார் செல்வியும் அவள் அம்மாவும் இங்கேயே இருந்தார்கள் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அவள் அப்பாவிடம் இருந்து கடிதமும் பணமும் வரும் செல்வி இன்னும் பெரிய மனுசி ஆகவில்லை அது எனக்கு மட்டும் தான் தெரியும் ஆனால் எல்லோரும் போல அவளும் வீட்டுக்கு வெளியே மூன்று நாள் இருப்பதால் யாருக்கும் தெரியாது பிறகு எனக்கு திருமணம் செய்துவைத்து விட்டார்கள் மாப்பிள்ளை அரசாங்க உத்யோகம் இருந்தும் மிகவும் கஷ்டப்பட்டேன் அப்பப்ப என் தாய் வீட்டுக்கு வந்து போவேன். அது மாதிரி வந்தபோது அவள் அப்பாவை ஊரிலேயே இறந்து வேனில் கொண்டு வந்தார்கள் அழுது புரண்டாள் பிறகு கொஞ்ச நாளில் அவள் அம்மாவும் இறந்து விட்டார் செல்வி எங்கள் வீட்டில் தான் இருந்தாள் ஊரில் இருந்த ஓட்டு வீட்டைவிற்ற பணத்தை என் அப்பாவிடம் கொடுத்து அதில் வரும் வட்டியைவாங்கி செலவுக்குவைத்துகொண்டாள்.நானும் முடிந்தவரை சமாளித்துவிட்டுஅம்மாஊரிலேயே ஒரு வீட்டை பார்த்து வந்து விட்டேன் அவர் கொடைக்கானலில் வேலை பார்த்தார் செல்வி எனக்கு மிகவும் உதவியாக இருந்தாள் என் கெட்டநேரமோ அவள் கெட்டநேரமோ அவள் கால்களை செயழிலக்கசெய்தது அப்போது கூட நாங்கள் நல்ல தோழிகளாகவே இருந்தோம் எங்கள் கனவுகள் கலைந்ததே தவிர எங்கள் நட்பு என்றும் கலையவில்லை எங்களுக்கும் வயதாகி விட்டது நான் பாட்டியாகி விட்டேன் இருந்தாலும் நாங்கள் ஒருவரோடுஒருவர் கலந்து இருக்கிறோம் அவள் காற்றில் கலந்து இருக்கிறாள் அவளை நான் சுவாசிக்கிறேன்.
இந்த ஓவியம் நானே வரைந்தது என் தோழிக்காக

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.