பாரதி கண்ணம்மா

என்னை பொருத்தமட்டில் மக்கள் 3 ரகம்.

1. ஏன் தான் இந்தக் கடவுள் என்னை இப்படி படைத்தாரோ என்று நொந்துகொள்பவா்.

2. தன்னம்பிக்கையுடன் போராடி என்றாவது ஒருநாள் வெற்றி பெறுவோம் என்று சிலா்.

3. வெற்றியோ, தோல்வியோ வாழும் வரை வாழ்க்கை இப்படி பலா்.

நான் இதில் இரண்டாவது ரகம். பெண்ணாகப் பிறந்து வாழ்வில் ஆயிரம் துன்பங்களை சந்தித்தாலும் மனதில் ஒரு வெறி "சாதிப்பேன்" என்று.

விட்டுச்சென்ற காதலனின் நினைவு ஒருபுறம். நின்றுபோன (என்னால் நிறுத்தப்பட்ட) திருமண நினைவுகளும் மறுபுறம். வாழ்க்கையில் துன்பங்களை மட்டுமே சந்திக்க பிறந்தவளா நான்.

"எப்புடி போறா பாரு"

"திமுரு புடுச்சவ" எப்பொழுதும் போல் காதில் விழுந்த வாழ்த்துமடல்களை கேட்டு நகைத்தவாறே சாலையைக் கடந்தால் நமது கதாநாயகி.

பேருந்தில் ஏறி சன்னலோர சீட்டில் அமா்ந்தால் கடந்த காலத்தை எண்ணியவாறே....

"காா்த்திக் சாப்டீங்களா?"

"என்ன பன்றீங்க?"

எதிா்முனையில் "ம்.. சாப்ட" "டுமாரோ மீட் பண்ணலாமா பாரதி"

"தாராளமா.... நா கிளாஸ் முடுஞ்சு கால் பன்ற... நீங்க வாங்க"

மறுநாள்...

"பாரதி எங்கயாவது வெளியே போலாம்"

(அவன் சொன்னால் மறுப்பேது... ஆயிரம் பட்டாம்பூச்சி பறப்பதை போல் உணர்ந்தாள்)

"நிஜமாவா"

"ம்... ஆமா" (தன் காதலைக்கூட வாய்விட்டுச் சொல்லாதவன் வெளியே கூட்டிச்சென்றால் பட்டாம்பூச்சி என்ன ட்ரேகனே(Dragon) பறந்தாலும் ஆச்சரியமில்லை).

மாமா, மாமா என்று செல்லமாக அவனை சீண்டிக்கொண்டே சென்றால். அவன் என்னிடம் சாியாக பேசக்கூட இல்லை. நான் அவனிடம் கடைசியாக கேட்ட கேள்வி.

" மாமா என்ன விட்டு போயிறமாட்டியே"

பதிலேதும் இல்லை என்னவனிடம் விருட்டென்று வண்டியை எடுத்து என்னை ஏற்றிய இடத்திலே இறக்கிவிட்டான் பதிலேதுமின்றி. என்னுடன் பேசுவதையே நிறுத்திவிட்டான் முற்றிலுமாக.
பிறகு என்ன திருமணம் என்றார்கள் வேண்டா வெறுப்பாய் தலையசைத்தேன். மாப்பிள்ளை தனக்கு மனைவியை தேடவில்லை வீட்டுக்கு ஒரு வேலைக்காரியை தேடியிருக்கிறான். திருமணத்திற்கு முன்பே சிறைவாழ்க்கை .

மாப்பிள்ளையின் கன்டிஷனில் சில....

1. கூடப்பிறந்தவா்களுடன் பேசக்கூடாது.

2. நோ வாட்ஸ் அப், நோ பேஸ்புக்.

3. நண்பா்கள் உடனான தொடா்பு துண்டிக்கப்பட்டது.

4. என் ஆடைகளைப் பற்றியும் குறை.

இதற்கு மேலும் பொறுமை கொள்ளலாமோ பாரதி கண்ணம்மா (எனது பெயா்.)... சிறைக்கம்பிகளை உடைத்தேன் வெற்றிபெறுவோம் என்ற தன்னம்பிக்கையோடு...

பெயருக்கு ஏற்றாற்போல் இன்று பாரதியின் புதுமைப் பெண்ணாக நான், பாரதி கண்ணம்மா....

" அமிழ்ந்து போிரு ளாமறிமையில்
அவலமெய்திக் கலையின்றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
உதயக்கன்னி உரைப்பது கேட்டீரோ..."

--------- ****** ---------

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.