காதல் என்பது

காதல் உலகில் எல்லோருக்கும் பிடித்தமான ஒன்று.

உலகில் கொடுங்கோல் ஆட்சியாளர்களுக்கு கூட காதலிகள் இருந்து இருக்கிறார்கள்.

அந்த காதலாலேயே அவர்கள் அழிந்ததும் கூட உண்டு.

உலகில் தாய்மை என்ற உணர்வுக்குப் பிறகு எல்லோருக்கும் பிடித்த ஒரு உணர்வு காதல்.

ஏன் ஒருசிலர் அந்த தாய்மையைவிட காதல் உயர்ந்தது என்று கூறுவார்கள்.

காரணம் தாய் என்பவள் தன்னுடைய குழந்தைகள் என்ற ஒரு சுயதலத்தால்தான் குழந்தைகள் மீது அன்பு செலுத்துகிறாள்.

ஆனால் எந்த மதம் இனம் நாடு மொழி நிறம் தோற்றம் என்று தெரியாமல் ஒரு ஆண் அல்லது பெண் மீது தோன்றும் இந்த காதல் தாய்மையை விட புனிதமானது.

முதலில் காதல் என்றால் என்ன என்று தெரிந்து கொள்வோம்.

இயற்பியல் விதிகள் படி நாம் பால் வயதை (teen age ) அடையும் போது நம்முடைய ஹார்மோன்கள் சுரக்க ஆரம்பிக்கிறது

இப்போது இயற்கையாகவே நமக்கு எதிர் பால் மீது ஒரு ஈர்ப்பு ஏற்படுகிறது. இதனை பருவக் கிளர்ச்சி என்று கூறுவார்கள்.

இந்த வயதில் எல்லோருக்கும் ஒரு காதல் இருக்கும். ஆனால் இது முழுமையான காதல் இல்லை.

வெறும் உடல் கூறுகளால் கவரப்பட்ட பொம்மை காதல் எனலாம்.

காரணம் சில நாட்களில் காதலர்களின் தோற்றம் மாறுதல் அடைந்தாலே இந்த காதல் காணாமல் போய் விடும்.

அடுத்து சூழ்நிலைக் காதல். ஒரே கல்லூரி.ஒரே ஆபிஸ்.ஒரே பணியிடம்.இப்படிச் சொல்லலாம்.

இதுவும் ஒரு நிலை இல்லாத காதல் எனலாம். காரணம் அவர்கள் வேலை விஷயமாகவோ அல்லது வேறு காரணங்களுக்காக இடம் பெயர்ந்து பிரிந்து விடும் போது நாளடைவில் ஒருவரை ஒருவர் மறந்து விடுகிறார்கள்.

அப்படி என்றால் உண்மையான காதல் என்பது என்ன என்றால்....

நம்மைப் பற்றி கவலை கொள்ளாமல் இன்னொரு உயிருக்காக நாம் வாழ ஆரம்பிக்கிறோம் என்றால் அதுதான் உண்மையான காதல்.

காதல் என்பது எதிர்பார்ப்புகள் அற்றது.

இந்த நிறம் இந்த உயரம் வேண்டும் என்று கேட்டு வாங்க முடியாது.

ஏதோவொரு ஒரு இடத்தில் ஒரு நொடியில் ஒருவர் மீது தோன்றும் அந்த உணர்வுக்கு பிறகு நாம் அவர்களுக்காக உயிரையே விட்டு விடவும் துணிந்து விடுகிறோம்.

இதுதான் காதலின் மகத்துவம்.

அப்படி என்றால் காதலி முகத்தில் ஆசிட் வீச்சு. கல்யாணத்திற்கு மறுத்ததால் இளம்பெண் கொலை என்று வருகிறதே அதற்கு காரணம் என்று நீங்கள் கேட்கலாம்.

சந்தேகம் இல்லை. அதுவும் காதல் தான்.ஆனால் மனித காதல் இல்லை.

தான் விரும்பிய பொருள் தனக்கென மட்டும் என்று நினைக்கும் வெட்டுக்கிளி காதல்.
காரணம் காதலில் இணைந்த பெண் வெட்டுக்கிளி கலவி முடிந்ததும் தன் இணையையே கொன்று விழுங்கி விடுமாம்.

எந்த அளவிற்கு ஒரு பெண்மீது உரிமை எடுத்து கொள்ள வேண்டும் என்று தெரியாத முட்டாள்தனமான காதல்.
பாம்பு கீரியின் விளையாட்டு

தான் விரும்பியது தனக்கு கிடைக்கவில்லை என்றால் யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று நினைக்கும் குரங்குக் காதல்.

ஒரு பெண் தன்னை பிரிந்து சென்ற பிறகு அவளைப் பழிவாங்குவதாக நினைத்துக் கொண்டு மற்ற பெண்களின் வாழ்க்கையில் விளையாடும் போக்கிரித்தனமான மலைப்பாம்பு காதல் .

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆனால் உண்மையில் காதல் என்பது ஒரு உயிரை எந்த காரணமும் இல்லாமல் நேசிப்பதும் அதன் வளர்ச்சிக்கு உயிரைக் கொடுத்து பாடுபடுவதும்தான் என்று நான் கூறுகிறேன்.

உலகில் காதலிக்காத மனிதர்கள் இருக்கலாம். ஆனால் காதலைப் பற்றி தெரிந்து கொள்ளாத மனிதர்கள் இருக்க முடியாது.

ஆனால் உண்மையில் காதலைப் பற்றி உண்மையாகவே அறிந்து கொண்டவர்கள். காதல் கல்யாணத்தில் போய் முடியாதவர்கள் எனலாம்.

காரணம் இப்போது நீதிமன்றத்தில் விவாகரத்து செய்ய வரும் இளஞ்சோடிகள் முக்கால் வாசி பேர் காதலித்து திருமணம் செய்து கொண்டு இப்போது பிரிய வருகிறார்கள்.

காரணம் ஒருசிலர் தவிர மற்றவர்கள் உண்மையிலேயே நேசிக்கவில்லை.வெறும் உடல் இச்சைக்குப் பழகினார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.மீண்டும் சொல்கிறேன் எல்லோரையும் குறிப்பிடவில்லை.

காரணம்
அவர்கள் உண்மையிலேயே நேசித்து இருந்தால் தான் நேசிக்கும் துணைக்காக விட்டுக் கொடுத்து போய் இருப்பார்கள்.அதை விட்டு விட்டு இப்படி கருத்து வேறுபாடு என்று நாலு பேருக்கு மட்டும் தெரியும் படி ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டு இப்படி நாற்பது பேரோடு வரிசையில் நிற்க மாட்டார்கள்.

இந்த விஷயத்தில் தாகூர் ஒரு கவிதையில் சொல்லி இருப்பார்.

இரண்டு நாடுகளுக்கு போர் முடிந்து வெற்றி பெற்ற நாட்டின் வீரன் ,தோல்வி அடைந்த நாட்டின் போர்க்களத்தில் குதிரை மீது அமர்ந்தபடி கையில் வெற்றி பெற்ற நாட்டின் கொடியை வைத்துக் கொண்டு வெற்றி வெற்றி என்று கூவிக் கொண்டு உலவிக் கொண்டு இருக்கிறான்.

அப்போது போரில் தோற்றுப் போன படையில் இருந்த ஒரு வீரன் குற்றுயிரும் குலை உயிருமாக போர்க்களத்தில் வீழ்ந்து கிடக்கிறான்.

அவன் காதில் இது விழுந்ததும் அந்த நிலையிலும் அவன் புன்னகை பூக்கிறான்.

காரணம் அவன் பல போர்களைக் கண்டவன் .வெற்றியை ருசித்தவன்.

ஆனால் இப்பொழுது தோல்வி அடைந்து உயிர் விடும் நிலையில் இருக்கிறான்.

சும்மா குதிரையில் கத்திக்கொண்டு போகும் வீரனுக்கு அல்ல தோல்வியில் துவண்டு துடிக்கும் இவனுக்குத்தான் வெற்றியின் அருமை ருசி எல்லாம் தெரியும் என்று கூறுவார்.

இது இன்றைய காதலுக்கு பொருந்தும். ஒரே மாதத்தில் காதலித்து திருமணம் என்று கூறிவிட்டு ஒரு குழந்தை பிறந்ததும் மணமுறிவு என்று அலைகிறார்கள்.

இவர்களுக்கு எல்லாம் நான் கூறுவது காதல் என்பது பெறுவது அல்ல. கொடுப்பது.

வெற்றியின் அருமை என்பது கிடைத்த வனுக்குத் தெரியாது தவறவிட்ட வனுக்குத்தான் தெரியும். அதனால் தான் கூறுகிறேன்.

காதலிக்க ஆரம்பியுங்கள்.. உங்கள் காதலன் அல்லது காதலியை. அவர்கள் விருப்பங்கள் கருத்துக்களை அல்ல.

இத்தனை அழுத்தமாகச் சொல்ல உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று நீங்கள் கேட்டால் என் பதில்

நானும் ஒரு பெண்ணைக் காதலித்தேன்.. ஜாதியைக் காரணம் காட்டி அவளுடைய தகப்பனார் என்னை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் இப்பொழுது பத்து வருடங்கள் கடந்து விட்டது. நான் திருமணமே செய்து கொள்ளவில்லை.

காரணம் ஒரு பெண்ணிடம் மனதைக் கொடுத்துவிட்டு இன்னொரு பெண்ணுடன் படுக்கையை பகிர்ந்து கொள்வதில் எனக்கு விருப்பம் இல்லை.

ஆனால் உங்களிடம் ஒன்று சொல்கிறேன்; என் காதலியின் நகத்தைக்கூட நான் தொட்டது இல்லை. இப்போது கூறுங்கள்.

காதல் என்பது சுயநலம் இல்லாதது. காரணமின்றி இன்னொரு உயிரை நேசிக்க கூடியது.அதற்காகவே வாழக்கூடியது.உயிரோடு இருக்கும் வரை மாறாதது.தாயைப் போல கருணை கொண்டது.

அதற்கு ஆசிட் அடிக்க எல்லாம் தெரியாது.காதலி இறந்து விட்டாலும் அவளை மறக்காமல் அவள் கல்லறையில் மலர் வளையம் வைத்து கண்ணீர் விடத்தான் தெரியும்.

ஆதலால் காதல் செய்வீர் மனங்களை......
உடலை அல்ல....

உலகம் முழுவதும் பிப்ரவரி பதினான்கு பெரும்பாலும் காதலர் தினம் என்று கொண்டாடப்படுகிறது.

காதலர்கள் சுய நலமிலமில்லாமல் உடல் மன விருப்பு வெறுப்புகளைத் தாண்டி தங்கள் துணையை உண்மையாகவே நேசிக்க ஆரம்பித்துவிட்டால் உலகில் ஒவ்வொரு நாளும்

காதலர் தினம் தான்.

(முடிந்தது)

என்னுடைய "'இதுதான் காதல் "''என்ற உண்மைக் கதையை படித்து பாருங்கள்.

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.