நினைப்பு

பொதுவாக நீங்கள் எங்கே சென்றாலும் அங்கு பெரும்பாலும் உங்கள் கண்களில் படும் வாசகம்

நல்லதே நினை நல்லதே நடக்கும்.

இது ஏதோ சாதாரண வாசகம் என்று நினைத்து விடாதீர்கள்.

மிகப்பெரிய உளவியல் உண்மையை தனக்குள் மறைத்து வைத்து இருக்கும் வாசகம்.

பொதுவாக எண்ணங்கள் தான் நம்முடைய செயல்களைத் தீர்மானிக்கும். அந்த செயல்களின் விளைவுகள் நம்முடைய வளர்ச்சி அல்லது தாழ்ச்சியைத் தீர்மாணம் செய்யும்.

எடுத்துக்காட்டாக இந்த தளத்தில். ஒரு படைப்பைப் பார்க்கிறீர்கள்.

ஐயாயிரம் பேர் அதை படித்து இருக்கிறார்கள். ஐம்பது பேர் அதற்கு நட்சத்திர குறியீடு கொடுத்து இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

உடனே நாம் என்ன செய்கிறோம். அதை வாசிக்க ஆரம்பிக்கிறோம். பிறகுதான்.
தெரிகிறது

ஏதோ ஐம்பது பேர் செய்த முட்டாள் தனத்தால் நாம் நம்முடைய நேரத்தை வீணடித்து விட்டோம் என்று.

காரணம் எல்லோரும் சொன்னால் நல்லதாக இருக்கும் என்று நினைத்த நம்முடைய எண்ணம்தான் காரணம்.

இப்போது புரிகிறதா ;நம்முடைய எண்ணங்கள் தான் நம் செயல்களை தீர்மானிக்கும் என்பது .இது ஆய்வுகள் மூலமும் கண்டுபிடிக்கப்பட்ட உண்மை.

ஒரு விஞ்ஞானி எண்ணங்களைப் பற்றி ஆராய ஒரு முயற்சி மேற்கொண்டார்.

அது என்ன என்றால் ஒரு காலி அறையில் ஒரே ஒரு தம்ளர் தண்ணீர். அவ்வளவு தான்.

இதேபோல் மூன்று தம்ளர் தண்ணீர் மூன்று அறையில்.

அறையில் எந்த சத்தமும் உள்ளே போகவோ வரவோ வழியே இல்லை.

அந்த விஞ்ஞானி தினமும் ஒரு மணி நேரம் அந்த தம்ளர் நீருடன் நேரம் செலவழிப்பது வழக்கம்.

அவர் செய்தது இதுதான் .

முதல் தம்ளரிடம் மனதில் அன்பான எண்ணங்களை வரவழைத்து கொண்டு அன்பாக அதனுடன் பேசுவார்.

இரண்டாவது தம்ளருடன் எதுவுமே பேசாமல் எதுவுமே நினைக்காமல் அமைதியாக இருந்து விடுவார்.

மூன்றாவது தம்ளருடன் மிகுந்த எரிச்சல் மற்றும் கோபத்துடன் பேசுவார்.

ஒரு சில நாட்கள் போனது.

இப்போது நுண்ணோக்கி வழியே மூன்று தம்ளர் நீரையும் அசையாமல் சோதித்தவர்கள் மிரண்டு போனார்கள்.

காரணம் எதுவுமே பேசாத தம்ளரில் எந்த மாற்றமும் இல்லை.

கோபமும் எரிச்சலாக பேசிய தம்ளர் நீரின் அமைப்பு ஒழுங்கற்ற ஒரு பேயின் முகம் போல் இருந்தது.

ஆனால் அன்புடன் கனிவாக பேசிய தம்ளரில் தண்ணீர் தேன்கூடு போன்ற கட்டமைப்பில் அழகாக இருந்தது.

ஒரே ஆள் தான். ஒரே நேரம் தான்.ஒரே அளவு நீர்தான்.

ஆனால் நினைக்கும் சிந்தனை எண்ணத்தில் மாற்றம் ;விளைவு அபாரமானது.

இவ்வளவு ஏன் காந்திஜி குருவாக நினைத்த டால்ஸ்டாய் எப்படி இரயில் நிலையத்தில் இறந்தாரோ அப்படியே தான் காந்திஜியும் இறந்து இருக்க வேண்டும்.

கடைசி நேரத்தில் எண்ணத்தை மாற்றியதால் மறுநாள் பரிதாபமாக இறந்தார்.

இது இருவரின் வாழ்க்கை வரலாற்றைப் படித்துப் பார்த்தால் இந்த ஒற்றுமை உங்களுக்குப் புரியும்.

ஆகவே நான் சொல்ல வருவது என்ன எனில் சுயமாக சிந்தியுங்கள்.

யாரையும் பின்பற்றிச் செல்லாதீர்கள்.

உங்களுக்குப் பிடித்தபடி எதையும் செய்யுங்கள்.

ஐந்தறிவு ஜீவன்கள் தான் தன் கூட்டம் என்ன செய்கிறதோ அப்படியே செய்யும்.

ஆனால் மனிதர்களாகிய நாம் அவைகளில் இருந்து வித்தியாசப் படுவோம்.

நீங்கள் உங்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று முயற்சி செய்தால் மீண்டும் சொல்கிறேன் முதலில் யாரையும் பின்பற்றாமல் இருங்கள்.

காரணம் உதவாத ஒரு கதைக்கு ஐந்து நட்சத்திரம் கொடுத்து விட்டு அதை ஆயிரம் பேர் படித்து விட்டால் அதை எழுதிய எழுத்தாளருக்கு தான் ஒரு பெரிய கவி என்று தலைக்கணம் ஏறி விடுகிறது.

எல்லாம் உங்களுக்கு முன்பு அதை படித்தவர்கள் செய்த முட்டாள் தனமான காரியத்தில் உங்களையும் இழுத்து விட்டதால்.

நீங்கள் என்ன செய்கிறீர்கள். அவர்களை நம்பி படிக்க ஆரம்பிக்கிறீர்கள்.பிறகு போனால் போகட்டும் என்று நீங்களும் மதிப்பீடு செய்து விட்டு போகிறீர்கள்.

ஆனால் உங்கள் மதிப்பீடுகளை நம்பி படிக்கும் என் போன்ற உண்மையான வாசகனுக்கு இதனால் எரிச்சல் தான் ஏற்படுகிறது.

காரணம் சிறுவயதில் இருந்தே சித்தர்களின் ஞானம்.

பாரதியின் கம்பீரம்.

சுஜாதாவின் தோழமை.

புதுமைப்பித்தனின் எளிமை.

கல்கியின் உருவகம்.

அண்ணாவின் பேராண்மை

பாக்கியம் ராமசாமியின் குழந்தைத்தனம்.

ஜெயகாந்தனின் எதார்த்தம்.

ராஜேஸ்குமாரின் திகில்.

விந்தனின் சமுதாய நோக்கு.

பார்த்தசாரதியின் சமுதாய கவலை.

அசோக மித்திரனின் கேலி.

சந்திரவதனாவின் எழுச்சி.

சாரு நிவேதிதாவின் மர்மம்.

முத்துலிங்கம் அவர்களின் உலகம் சுற்றிய ஞானம்.

ரமணி சந்திரன் அவர்களின் காமம் கெடாத காதல் .

சாவி அவர்களின் குழந்தைத்தனம்.

செழியனின் கவி.

நா.முத்துக்குமாரின் சீண்டல்.

சுகிர்தராணியின் வீரம்.

அனார் அவர்களின் மென்மை.

சரோஜினி நாயுடு அவர்களின் கவித்தூறல்.

சேகுவோராவின் தோழமை.

மாவோவின் தலைமை.

அனா அக்மதோவ் ன் நெகிழ்ச்சி.

ஐன்ஸ்டீனின் அறிவியல்.
என்று படித்த வளர்ந்த என் போன்ற வாசகனின் நிலை அதோகதிதான்.

காரணம் கதையில் நடையும் புரியவில்லை. கதாபாத்திரம் யார் என்ன உறவு என்று புரியவில்லை. போதாக்குறைக்கு உவமைகளுக்கு திருக்குறள் வேறு.

ஆகவே ஐயாயிரம் பேர் வாசித்து பாராட்டு பெற்ற கதையை விட்டு விடுங்கள்.

வெறும் ஐந்து பேர் வாசித்து பாராட்டி இருக்கும் கதைகளைக் கண்டு படித்துப் பாருங்கள்.

மதிப்பீடு செய்யும் முன் சிந்தியுங்கள்.அப்போதுதான் நல்ல படைப்புகளை உங்களால் அறிந்து கொள்ள முடியும்.

உங்கள் மதிப்பீட்டை நம்பி பின்பற்றும் எங்களுக்கும் அதுதான் நீங்கள் செய்யும் உண்மையான நல்லதாகவும் இருக்கும்.

நல்லதையே நினையுங்கள்.
நல்லதையே செய்யுங்கள்.
நல்லதே நடக்கும்.

ஆனால் மற்றவர்களை மட்டும் பின்பற்றாதீர்கள்.

'''"உன்னை எல்லோரும் பின்பற்ற வேண்டுமா.
நீ யாரையும் பின்பற்றாதே"'''

ஹிட்லர்.

உலகத்தில் அநீதி கண்டு கோபமும் வெறுப்பும் கொண்டு குமுறி எழுவாயானால் நாம் இருவரும் தோழர்களே.

சேகுவேரா.

ஆகவே சிந்தியுங்கள் .என் உயிருக்கு உயிரான தோழர்களே. தோழிகளே.
வாழ்த்துக்கள்.

(முடிந்தது)

இந்த தளத்தில் நாம் எதை வேண்டுமானாலும் எழுதலாம். அது அவர்கள் நமக்கு அளித்து இருக்கும் உரிமை.

இதனால் என்னைப் போன்ற இளம் எழுத்தாளர்களுக்கு இந்த செயலி ஒரு பொக்கிஷம்.

ஆனால் சில பேர் விளையாட்டுத்தனமாக ,சமூக பொறுப்பின்றி காதல் என்ற பெயரில் வெறும் விரசமாக எழுதுகிறார்கள்.

பெண்களும் படிக்கிறார்கள் என்பதை மறந்து விட்டு

அவர்களுக்கு என் கருத்தைத் தெரிவிக்கும் வகையில் இந்த பதிவு

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.