நவம்பர் 14


சாகர்:


குட் மார்னிங்


நவம்பர் 15


சாகர்:


குட் மார்னிங்


நவம்பர் 16


சாகர்:

குட் மார்னிங்


நவம்பர் 17


சாகர்:

குட் நைட்


தன்யா:


குட் நைட்


சாகர்:

எதாவது பேசலாமே


தன்யா:


என்ன பேச?! நீ யாருன்னே தெரியாது..!?


சாகர்:

தொலைந்து போன உன் நண்பனின் போனை உன் மூலம் தானே தந்தேன்..! இனி என்ன வேணும்..!


தன்யா:


இது மட்டும் போதுமா..? பேச?


சாகர்:

சரி வேணாம் பேசாத..


தன்யா:


நாளைக்கு பேசறன்...

இன்னிக்கு தூங்கு...

ஸ்லீப் டைட்...இப்படியாக ஆரம்பித்த நட்பு, மெல்ல இருவரின் வீடு, அம்மா, அப்பா என அனைத்தையும் பரிமாரிக் கொண்டது. இருவரின் வீடும் அருகருகே இருப்பதைக் தெரிந்த சாகருக்கு அவளைப் பார்த்துவிட ஆசை. தன்யா, முகம் தெரியாதவன் மீதும் எதிர்பார்ப்பில்லாத அன்பு கொண்டாள். சாகர், மின் மற்றும் மின்னனு பொறியியல் மாணவன், தன்யா பல் மருத்துவ மாணவி.


அவரவர் வேலைகள் நகர்த்தும் நாட்களுக்கு இடையிலும் தன்யா கூப்பிடுவாள்.


"துவைச்சிட்டு இருந்தன், அதான் கூப்டன்."


"சமைச்சுட்டு இருந்தன், சும்மா கூப்டன்."


"போன் பேசிட்டே சைக்கிள் ஓட்டாத?".


"என் தங்கைக்கு சாப்பாடு ஊட்டிட்டு இருந்தன், சாப்பிட்டியானு கேக்க கூப்டன்".


இப்படி ஒன்றுமில்லாத காரணங்களுக்காக கூப்பிட்டாள், இயல்பாகவே அன்பு காட்டினாள். ஒரு தங்கையை, தாய் போல் பார்ப்பவளுக்கு இயல்பாகவே அன்பு காட்டத் தெரிந்தது.


சாகருக்கு ஒன்றுமே புரியவில்லை, அவள் அன்புக்காய் ஏங்கி நின்றான், அது மட்டுமே தெரிந்தது...!


இது தான் காதல் என்று தெரியாத பதினாறு இருவரும்.


ஒரு நாள்...


சாகர், "நான் உன்ன பாக்கனும், இன்னிக்கே".


தன்யா, "சரி வா. உனக்கு ஆர்.எஸ். புரம் லைப்ரரி தெரியுமா?".


சாகர், "எனக்கு லெவி ஷோரூம் தான் தெரியும்".


தன்யா, "லைப்ரரி தெரியாது, லெவி ஷோரூம் தான் தெரியுமா."


அங்கு வந்து சேர்ந்தான். கோவையின் இதையம், ஆர்.எஸ்.புரம். அதனால்தானோ என்னவோ காதல் அங்கே பூத்தது அவர்களுக்கே தெரியாமல்... தன்யா தைரியமானவள் தனியாக தான் வந்தாள். சாகர் ஏனோ துணைக்கு நண்பனைக் கூட்டி வந்தான்.


"இருட்டுல தனியா தான் வரனுமா?!" சாகர்.


"ஏன் பொண்ணுங்க தனியா வரக்கூடாதா?" தன்யா.


"அப்படி இல்ல, இனிமே என்ன கூப்பிடு. நான் வரேன் துணைக்கு" சாகர்.


"சரி கூப்படரேன். இப்ப யாராவது பாத்துட போராங்க. கெலம்பலாம்!" தன்யா.


இப்படியாக முதல் சந்திப்பில் அறிமுகம் இனித்தது. குண்டான உருவமும், மூக்குக் கண்ணாடியுமாய் வசிகரிக்கவில்லை தான், தன்யா. சாகர் மட்டுமென்ன, கருப்பான உருவம், ஒள்ளியான உடல்வாகு. இருந்தும் இருவருக்கும் ஈர்ப்பு குறையவில்லை.இருவரும் பரஸ்பரம் பூசிக்கொண்டார்கள், நட்பிற்கும், காதலுக்குமான இடைவெளியில் பயணப்பட்டார்கள். வயது கோளாறு பல பெண்களை பார்க்கவைத்தது, ஆனாலும் தன்யா குழந்தைத்தனமான அன்பிற்குரியவள். புத்தகம் படித்த பகுத்தறிவாளினி, அவளுக்கும் எட்டவில்லை. பாலினம் கடந்த அன்பாகவே இருந்தது இருவரின் பார்வைக்கும்.


ஆனாலும் பிடித்த விஷயங்களைப் பரிமாறிக்கொள்கையில் காதல் தெரியாமலே எட்டிப்பார்க்கும்.


தன்யாவிற்கு டேய்லர் ஸ்விப்ட் பிடிக்கும், லவ் ஸ்டோரி பாடலை மனப்பாடமாய் போனில் பாடிக்காட்டுவாள். ஹாரி பாட்டரை புடிக்கும், கதைகள் பேசுவாள்.


சாகருக்கு ஹிந்தி பாடல் பிடிக்கும், பாடிக் காட்டுவான். அர்த்தம் தெரியாது, ஆனாலும் பாடுவான். தன்யா சொல்ல அர்த்தப்படும் அவனுக்கு. என்ன சட்டை போடவேண்டும் என்பது வரை கேட்க ஆரம்பித்தான். பால்கனியில் நின்றவாரு காத்திருப்பாள், நான்கு முக்கில் அவன் வந்து நிற்க நேரம் மறந்து செய்கையில் பேசி மகிழ்வார்கள். ஆர்.எஸ்.புரம் பூத்துக் குழுங்கும், இவர்கள் காதலில்....


"காலேஜ் முடிச்சுட்டு பேங்களூர் பொய்டலாம்னு இருக்கன்" சாகர்.


'இப்ப தான் பர்ஸ்ட் இயர், அதுக்குள்ளயா?' தன்யா.


"இல்ல.. இது என் ட்ரீம்" சாகர்.


'இவ்ளோ நாள் இங்க வளந்துட்டு எங்கயோ போய் என்ன பன்னபோர?!' தன்யா.


"நீ எங்கயும் போமாட்டியா!"சாகர்.


'இல்ல இங்க தான் இருப்பன்' தன்யா.


"நான் உன்ன பேங்களூர் கூட்டி போரன்" சாகர்.


'வேணாம் நான் இங்கயே இருக்கன், கோயம்புத்தூரும் கொஞ்சம் டெவலப் ஆகனும்ல' என்று தனக்கே தெரியாமல் கேப்பிடலிஸத்தையும், சென்ட்ரலைஸேஷனையும் சாடிவிட்டு சிரித்தாள், அழகழகாய்...


நாட்கள் நகர்ந்தது...


கொஞ்ச நாட்களில் எல்லாம் மாறியது, முதல் செமஸ்டரில் அரியர் வைத்தான். அதற்கு மருகி படிப்பு முடியும்வரையில் ஒழுக்கமாக படிக்கவேண்டும் என்று தனக்குள் கூறிக்கொண்டான். சாகர், தன்யாவிடம் பேசுவதைக் குறைத்துக் கொண்டான். வசந்த காலம் முடிந்தது, ஆர்.எஸ். புரம் மரங்களை எல்லாம் கொஞ்ச கொஞ்சமாய் இழந்தது. மீண்டும் பூக்குமா இந்த குறிஞ்சிக் காதல்....அவ்அப்போது நலம் மட்டும் விசாரித்துக் கொள்வார்கள்.


அப்பறம் ஒரு நாள்..


சாகர் படித்து முடித்திருந்தான், வேலை கிடைக்காத விரக்தி. நிறைய வாசிக்க ஆரம்பித்திருந்தான்.


தன் பல் சீரமைக்கப் படுவதற்காய் ஒரு பல் மருத்தவமனைக்குச் சென்றிருந்த சாகர் மறுபடியும் தன்யாவைக் கண்டான். அங்கு அவள் தன் இறுதி ஆண்டு படிப்பின் நிமித்தமாக இருவருக்கு பல் சீரமைக்க வேண்டும். யாரும் வரவில்லை, அவன் சென்றான் யதார்த்தமாக. காதல் அவனுக்காய் மறுபடியும் வழி விட்டது.


தன்யா தன் பல்லை சீரமைக்கையில் மெய்யாகவே காதலில் விழுந்தான்,ஆனால் காட்டிக்கொள்ளவில்லை.


மறுபடியும் பேசத் தொடங்கினார்கள், இம்முறை தன்யா அக்கறை காட்டவில்லை. கேட்ட கேள்விகளுக்கு சம்பிரதாயமாய் பதிலளித்தாள்...


"உங்க அப்பா டாக்டர் தான.. நீயும் டாக்டர் படிச்சிரருக்கலாம்ல... ஏன் பல் டாக்டர் ஆன...?!" சாகர்.


'எனக்கு ஜர்னலிஸ்ட் ஆகனும்னு ஆசை.. ஆனா விடல... டாக்டர் பொண்ணும் டாக்டர் தான் ஆகனுமாமா.. அதான் டென்டிஸ்ட் எடுத்தன்' என்று ஜாதியம் பரிணாமித்திருப்பதை அழகாய்ச் சொன்னாள். சாகருக்கு சமூக ஏற்றத்தாழ்வுகள் தன் காதலுக்கு இடையில் வரும், அதனால் இவளை தோழியாகவாவது தக்கவைக்க என்னினான்; வேலையில்லாத திண்டாட்டம் வேறு அவனை அப்படித் தான் சிந்திக்க வைத்தது. அதனால்...


"இனிமேல் அடிக்கடி கூப்பிடு" என்று மட்டும் சொல்லி வைத்தான், பாவம்.


ஆனால் போன் மட்டும் வரவேயில்லை.


வேலையில்லாத் திண்டாட்டம் அவனை இதற்கு வருத்தப்பட இடம் தரவில்லை.காலம் ஓடியது, சென்னைக்கு சென்றான்.. நல்ல வேலை தான், ஆனால் அவன் துறையில் இல்லை. அது அவனைக் குடைந்து கொண்டே இருந்தது. புத்தகங்களில் மூழ்கி தப்பித்தான் வெறுமையான வாழ்விலிருந்து.


அப்பப்போ தன்யா நியாபகமும் வந்து போகும், கடந்து விட்ட காதலாகவே என்னி ஆறுதல் படுவான். ஊர் விட்டு, அம்மா விட்டு, நண்பர்கள் விட்டு இப்படி வாழ்வது பிடிக்கவேயில்லை. ஆறுதலுக்காய் ஒருமுறை தன்யாவிடம் மின்னஞ்சலில் பேசினான்.


அதற்கு அவனை யார் என்றே தெரியாது, 'நாம் இருவரும் ஆரம்ப கட்ட நிலையிலே பிரிந்து விட்டோம்... அதனால் என்னுடன் பேசாதே... ' என்று முகத்திலறைந்தாள்.


இவனும் திட்டி விட்டான், ஆறு மாதம் அவளை மறந்த நிலையிலே இருப்பதாய் நினைத்துக் கொண்டான். ஆனால் ஆர்.எஸ்.புரம் மட்டும் போகத்தவறியதில்லை. சென்னையிலிருந்து இரயிலில் வருபவன், வடகோவை ஸ்டேஷனில் இறங்கி அங்கிருந்து ஆர்.எஸ்.புரம் வழியாகவே வருவான். இவர்கள் நினைவுகளால் நிறைந்து கிடக்கும் ஆர்.எஸ்.புரம் இவனுக்காய் பூ பூக்கும், இவனுக்கு அது புரியாது.சென்னையில் மழை பெய்து வெள்ளம் ஓடிக் கொண்டு இருந்த நேரம். கோவையில் ஒரு பிரபல நாளிதழ் சார்பில் விழா நடந்து கொண்டிருந்தது. கோவை விழா, ஆர்.எஸ் புரத்தில், காதலுக்கா பஞ்சம். இருவரும் சந்திக்க மீண்டும் ஒரு இடம் கொடுத்தது பிரபஞ்சம்.


இருவரும் வார்த்தை பரிமாறிக் கொள்ளவில்லை, அவள் முன் நடந்தால், இவன் பின் தொடர்ந்தான்.


மீண்டும் பிரிந்தனர்... சென்னை வாழ்க்கை தனிமையில் வாட்டவே, வேலை துறந்து. கோவை வந்தான். பொறியியலுக்கு சம்பந்தமாக எதாவது செய்ய வேண்டும் என்று மட்டும் என்னிக்கொண்டான். தற்காலிகமாய் ஒரு வேலையை தேடிக் கொண்டான். தனக்கென்று ஒரு நிலையான இடமில்லாத போதும் மனம் தளரவில்லை...


ஆனால்....விதி விடுவதாய் இல்லை...


இம்முறை வாட்ஸ்அப் செயலி வடிவில்... சமீபத்திய ஸ்டேட்டஸ் அப் டேட் வழியில்... எப்போதோ கூகுளில் கொஞ்சிக் கொண்டது, இப்போதும் அவள் என்; இவன் போனில்...


அவள் ஒரு படம் போட்டாள், இவன் பார்த்தான்... இவன் பல பாடல்கள் போட்டான் அவள் எல்லாவற்றையும் பார்த்தாள்... பார்த்த புகைப்படம் காதலை எழுப்ப கடைசியில் சொல்லிவிட்டான் தைரியமாய்... செயலியில்... அவ்வளவு தான் சாகர்... பயந்தவன்....


செயலியை நீக்கி விட்டான்.. சில நாட்களுக்குப் பின்...தன்யா பதிலளித்திருந்தாள், தான் இன்னும் படித்துக் கொண்டிருப்பதாகவும், படித்து முடித்தவுடன் ஒரு நல்ல பையனை காதலித்து திருமணம் செய்ய வேண்டுமென்றும், டிஸ்டர்ப் செய்ய வேண்டாமென்றும். அவள் வார்த்தைகளில் அவன் இல்லவே இல்லை, ஆனால் அவள் முழுவதுமாய் அவனுள்....


விடுவதாய் இல்லை, சாகர். பேசத் தொடங்கினான், செயலியில். ரொம்பவும் சம்பிரதாயமாய் மட்டும் பேசினாள், தன்யா. எவ்வளவு மாறிவிட்டாள்.


ஸ்டேட்டஸ் வைப்பான்... காதல் பொழிவான்... கண்டுகொள்ளவே மாட்டாள். தனக்கு பிறந்த நாள் என்றும், ஹாரி பாட்டரும் இதே நாளில் தான் பிறந்தான் என்றும் சொல்வான். வாழ்த்துக்கள் கூட குவிக்காது அவள் வாய்.


இப்போதெல்லாம் அவள் விலாசம் சொன்ன நூலகத்தில் தான் இழைப்பாருகிறான். புத்தகங்களில் மூழ்கிவிடுகிறான், சாகர்.


நூலகமும் ஆர்.எஸ் புரத்தில் தான், ஆதலால் தன் பங்கிற்கதுவும் வேலையை காட்டியது.

அவன் இருந்த நேரம், அவளும் வந்தாள். காதலில் மூச்சுத் தினறி வெளியேறினான் கண்கலங்கியவனாய். அவனுக்கு தன்யா தான் தன் வானின் நிலா என்று பட்டது. அவன் தூரிகையானான் அவள் உள்ளத்தில். இனிமேல் இவனை சந்திக்கவே கூடாதென்று ப்லாக் செய்துவிட்டாள். இது தெரியாமல் "தெரிந்த கோவை, தெரியாத கதை" என்ற புத்தகத்தை பரிசளிக்க வாங்கி காத்திருக்கிறான்.


கவிதைகளில் எல்லாம் அவளை கறைத்து

விட முடியாது, ஆனாலும் காத்திருக்கிறேன்;

என் பகுத்தறிவாளினிக்காய்


-சாகர்


வைகை நீ சேராமல்

கரிக்கும் சாகரம் நான்.


-சாகர்


தன் படிப்பு சார்ந்த துறையில் சாதிக்க நினைத்வனுக்கு போன இடமெல்லாம் ஏமாற்றம் மட்டுமே மிச்சம். யாரும் வேலை தருவதாயில்லை, இவனும் விடுவதாய் இல்லை. கட்டிட உள் கட்டமைப்பில் விளக்கு மட்டும் சார்ந்த லைட்டிங் டிசைன் துறையில் சாதிக்க வேண்டும் என்ற வெறி. உங்கள் வீட்டுக்கு விளக்குகளை எப்படி அலங்காரமாக மாட்டுவது என்று கேட்டால் அவனே டிசைன் செய்து தருவன். சுருங்கச் சொன்னால் லைட்டிங்கிற்கு என்று ப்ரத்யேகமான இன்டீரியர் டிசைனர், ஆனால் ப்ரீலேன்ஸர் தான். பல இடங்களில் கோட்டேஸன் வரை சென்று கை நழுவும் வாய்ப்புகள். ஆனாலும் கலங்கவில்லை. சின்னச் சின்ன வேலைகளில் தன் திறமையை காண்பித்தான். ஒரு நல்ல வாய்ப்கிற்காக காத்திருந்தான்.


தன்யாவையும் மறக்க முடியவில்லை, போன் செய்தே பேசுவான். இவன்மீது வெறுப்பை உமிழ்ந்தாலும் பயனில்லை போலும் என்று தெளிந்து, சாங்கியமாய் பேச ஆரம்பித்தால்.ஒரு நாள்... இரவு 1 மணி...


"எப்படி இருக்க, தன்யா"


'நல்லா இருக்கேன்'


"தூங்கல?!" சாகர்.


'தூக்கம் வரல' தன்யா.


"ஏன்" சாகர்.


'எக்ஸாம்ஸ் வருது, அதான்' தன்யா.


"இன்னும் படிச்சுட்டு தான் இருக்கியா?!" சாகர்.


'ஆமாம், எம்.டீ.எஸ் ஆர்த்தோ... நீ என்ன பன்ற?!' தன்யா.


"வேலைக்கு போரன்"


'பேங்களூர் போலையா?!' தன்யா.


"எனக்கு வேற ப்ளான் இருக்கு" சாகர்.


'என்ன?!' தன்யா.


ஒரு வரி பரிமாற்றம் எரிச்சல் தந்தாலும் தொடர்ந்தான்...


"இங்கையே பிசினஸ் பன்னனும். அதான்..."


'மேல படிக்கலையா?!'


"இல்ல... நான் நினைக்கற படிப்பு இங்க இல்லை" சாகர்.


'அப்படி என்ன படிப்பு?!' தன்யா.


"லைட்டிங் டிசைன்.. இந்தியால இல்ல... வெளிநாடு தான் போனும்... அதான் படிக்கல" சாகர்.


'இருக்கறதுல மாஸ்டர்ஸ் படிக்கலாம்ல' தன்யா.


கோபம் தலைக்கேறியது, ஆனாலும் நிதானமாய்...


"நீ என்ன பன்னுவ ப்யூச்சர்ல?!"


'நான் டென்டிஸ்ட்... க்ளினிக் வைப்பேன்'


"ஊருக்குள்ள நிறைய இருக்காங்க, ஆனா நான் அப்படி இல்ல. என் ஆசை ஏகாந்தமானது, நான் ப்ரத்யேகமானவன்.

ஐ டுக் த ரோட் லெஸ் ட்ராவல்ட் பை, அன்ட் தட் ஹேஸ் மேட் ஆல் த டிப்ரன்ஸ்.. " என்று ராபார்ட் ப்ராஸ்ட் கவிதையைச் சொல்லி துண்டித்தான், முதல் முறையாக...


அதற்கு பின் கூப்பிடவே இல்லை, அவன்.


சில மாதங்களுக்குப் பின்...


ஒரு போன் கால்...


'ஹலோ! உங்க லைட்டிங் டிசைன் ஆட் பாத்தன்.' ஒரு முதிர்ந்த ஆண் குரல்...


'சொல்லுங்க, சார். உங்களுக்கு என்ன வேனும்' சாகர்.


'ஒரு க்ளினிக் இன்டீரியர் டிசைன் பன்னனும், லைட்டிங்கும் இன்னோவேட்டிவ்வா வேனும். அதான் உங்கள கான்டாக்ட் பன்னன்'


தனக்கு சரியான வேலை வந்ததாய் எண்ணி, உடனே அந்த முதிய ஆண் குரல் சொன்ன இடத்துக்குப் பார்க்கச் சென்றான்.


மீண்டும் தன்யா... விதி விடுவதாய் இல்லை.


போன இடத்தில் அவள் இருந்தாள், என்ன பைசுவதென்று தெரியவில்லை. லைட்டிங் டிசைன் பற்றி போன் வந்ததைச் சொன்னான். யாரென்று தெரியாதவல் போல் நடந்து கொண்டாள். உள்ளிருந்து அந்த வயதான ஆண் குரலுக்குச் சொந்தக்காரர் வந்தார். அவர் தன்யாவின் அப்பா, மலரவன், டாக்டரும் கூட. தான் தன்னுடைய பிள்ளைக்கு க்ளினிக் வைத்து தர அழைத்ததாய்ச் சொன்னார். பின் தன் மகளைக் காண்பித்து, அவள் க்ளினிக் தான், அவள் எண்ணம் போல் வேண்டுமென்று சொல்லி, தனக்கு வேலை இருப்பதாய்ச் சொல்லி மறைந்தார்.


பின்..


"எப்படி இருக்க, சாகர்"


'எதுவும் வேண்டாம். உனக்கு என்ன வேலை ஆகனும்..?! அது மட்டும் சொல்லு.. என் வேல் வேண்டாம்னாலும் சொல்லு.. பொய்டறேன்' சாகர்.


சில நேர மவுனத்திற்கு பிறகு.. தன் க்ளினிக் எப்படி இருக்க வேண்டும் என்பதைச் சொன்னாள்.


"இது க்ளினிக், இங்க கோல்டன் கலர்டு லைட் போட்டா பேசன்ட்ஷ் இரிடேட் ஆவாங்க. ஸோ, உனக்கு நார்மல் கலர் தான் கரக்ட்." சாகர்.


'ஓகே!' தன்யா.


அவன் சொன்னவாரே ஏற்றுக்கொண்டவள், இவன் வேலைக்கு முன் பணம் தந்தாள். இவுவளவு நாள் களித்தும் இவள் முகம் பார்த்ததால் விதியைநொந்து கொண்டான். வேலைக்காகவாவது பேசிக்கொள்ள வேண்டிய கட்டாயம். அவனுக்கு கோபமெல்லாம் இவள் கல்யாணம் செய்திருப்பாள், தான் இனும் முழுவதுமாய் மீலவில்லயே என்று மட்டுமே.


கொட்டேஷனில் மிஸஸ்.தன்யா என்று செகண்ட் நேம் இல்லாமல் மெயிலில் அனுப்பினான்.


"தேங்க் யூ அண்ட் ஐ'ம் நாட் மேரீட்" என்று ரிப்லை செய்தாள்.


'ஐயம் லீஸ்ட் பாதர்ட்.' என்று ரிப்லை செய்தான், சாகர்.உடனே ஒரு போன் கால், தன்யா கூப்பிட்டாள்.


அட்டன்ட் செய்த சாகர், "சொல்லுங்க மிஸ்.தன்யா. உங்களுக்கு கோட் வேல்யூ ஓகே வா?! ஓகேன்னா சொல்லுங்க, இல்லன்னா இது நம்ம லாஸ்ட் காலா இருக்கட்டும்" என்று பேசினான்.


தனக்கு ஓகே என்று சொல்லிவிட்டு வேலை சீக்கிரமாக ஆரம்பிக்கப்படுவேண்டும் என்றும் சொன்னாள். தனக்கு என்ன டிசைன் என்று காண்பித்து விட்டு வேலையை ஆரம்பிக்க சொன்னாள். அதற்கு அவன் வாட்ஸ் ஆப்பில் போட்டோஸ் அனுப்புவதாகச் சொன்னான்.


சொன்னது போலவே வாட்ஸ் ஆப்பில் அனுப்பி வைத்தான், வேறொரு எண்ணிலிருந்து. அது அவன் அலுவலக தொடர்பிற்கானது.


தன்யா க்ளினிக் வேலை நடுவில்... தன்யாவும், சாகரும் க்ளினிக் டிசைன் பற்றி..."இந்த எல்லோ கலர் லைட் போட்ட நல்லா இருக்கும்ல?!" தன்யா.


'அது வார்ம் வைட். அது நகைக்கடைக்கும், ரெஸ்டாரன்ட்க்கும் தான் செட் ஆகும். அந்த கலர் இங்க போட்டா பேஷன்ட்ஸ் டிஸ்டர்ப்டா ஃபீல் பண்ணுவாங்க. அது மட்டுமில்லாம நீங்க மைன்யூட்டான வேலை பாக்கறைங்க, கூல் வைட் ஐ மீன் வைட் லைட் தான் பெஸ்ட். வேணும்ணா ரிசப்ஸன்ல மாட்லாம்' சாகர்.


"பரவால்லை வேணாம், பேஷண்ட்ஸ் டிஸ்டர்ப் ஆவாங்கன்னா வேணாம்" தன்யா.


ஒரு வழியாக தன்யா க்ளீனிக் வேலை முடிந்தது. இனிமேல் இவளைப் பார்க்க வேண்டியதில்லை என்று பெருமூச்சு விட்டான்.


தன் வேலைக்கான கூலியை தந்த தன்யாவிடம், வேண்டாமென்று சொல்லி, தனக்கு பல் சீரமைப்பு செய்ததற்கு பதிலாக இந்த வேலை என்று சொல்லிவிட்டான். தன் க்ளீனிக் திறப்பு விழாவிற்கு அழைத்தாள், வருவதாய்ச் சொல்லி பத்திரிக்கை மட்டும் வாங்கிக் கொண்டான், போகவில்லை.


நாட்கள் நகர்ந்தன.... தன் அலுவலக நம்பர் வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் பார்த்தான். பல ஸ்டேட்டஸ்களுக்கு நடுவில் அவள் ஸ்டேட்டஸ் தனியாய் தெரிந்தது. அன்று அவள் பிறந்த நாள், தன் குடும்பத்துடன் செலவிட்ட புகைப்படங்களை வைத்திருந்தாள். கூப்பிட எண்ணம் வந்தது, ஆனாலும் கூப்பிடவில்லை.


இரவு பன்னிரண்டு அடிப்பதற்கு பத்து நிமிடம் முன்பு தன்யாவிடம் இருந்து போன் வந்தது.


"எனக்கு இன்னிக்கு பிறந்த நாள்" தன்யா.


'தெரியும்' சாகர்.


"ஒரு விஷ் கூட பன்னல", தன்யா.


'க்ளைன்ட் கிட்ட ப்ரெண்ட்லியா பழகறதில்லை' சாகர்.


"நீ என் கிட்ட பேமென்ட் வாங்கல, அது ஒரு ப்ரெண்டா தன பன்ன" தன்யா.


'இந்த வார்த்தைய எத்தனை தடவை சொல்லிருப்பன், நீ என்ன கண்டுக்கவேயில்லை. இப்ப நான் என்ன பன்னனும்னு எதிர்பார்க்கிற?!' சாகர்.


"இன்னிக்கு நாம சண்டை தான் போடனுமா?!" தன்யா.


'சரி என்ன பன்னனும்?! நீயே சொல்லு.' சாகர்.


"ஒரு விஷ் பன்னியா, பர்ஸ்ட்?!" தன்யா.


'தன்யா. எனக்கு உன்ன பாத்தா ரொம்ப பெருமையா இருக்கும், உன் குணம் அப்படி, அதனால தான் உன்ன லவ் பன்னன். இப்பவும் அட்மையர் பன்றன். ஆனா என்ன விரும்பர பொண்ணு கூட தான் சந்தோஷமா வாழ முடியும், அது நல்லா தெரிஞ்சுகிட்டன். நமக்குள்ள எவ்வளவோ நடந்திருச்சு, இனிமேல் ப்ரெண்ட்லீயா இருக்க முடியாது. ஸோ! விட்டுரு. இப்போ உனக்கு வேண்டப்பட்டவங்க முதல் ஆளா விஷ் பன்னிருப்பாங்கல்ல. நான் விஷ் பன்றதெல்லாம் விஷயமா' என்று கொட்டித் தீர்த்தான் சாகர்.


அழுகை மட்டும் பதிலாய் போனை கட் செய்தால்.அழுகையை கேட்டவன் சற்று யோசித்தான். "இவ்வளவு ப்ரச்சனைகள் இவளுக்காக பார்த்தும், இவள் அழுகையில் கரைகிறதே. சரி இவ்வளவு துன்பம், இவள் அதற்குத் தகுதியானவளா?!" என்று ஒரு கேள்வி.


"வாழ்க்கைத் துணையாக யார் வந்தாலும் ஒருநாள் அழத்தான் வைப்பார்கள். நாம் எவ்வளவு அழுதாலும் இவள் அதற்குத் தகுதியானவள்" என்று ஒரு எண்ணம்.


சட்டென்று தன் வண்டியை எடுத்து ஒரு முச்சந்திக்கு வந்தான். கடைசியில் காதல் இவனை நடுத்தெருவில் நிருத்திவிட்டது, அதுவம் இரவில். இவள் வேண்டாம் என்று சொல்லிவிட்டால் ரோட்டிலேயே அழுதுவிட்டு

போவதாய் முடிவுசெய்து கொண்டான்.


அவளுக்குத் தன் பலைய நம்பரிலிருந்து போன் செய்தான். போனை அட்டண்ட் செய்தவள் எதுவும் பேசவில்லை. விசும்பல் சத்தம் மட்டும் கேட்டது.


"என்ன கல்யாணம் பன்னிக்கிறயா, தன்யா" என்று சாகர் கேட்டான்.


'நீ தான் ஒரு பர்த் டே விஷ் கூட பண்ணமாட்டிங்கற, உன்னைய கல்யாணம் என்ன பன்றது?!' தன்யா.


"ஹேப்பி பர்த் டே, தன்யா" சாகர்.


'ம்ஹூம்.. எனக்கு கிப்ட் வேணும்' தன்யா.


"சரி நான் உனக்கு ஒரு கிப்ட் குடுக்கறன். உன்னால வெளிய வரமுடியுமா?" சாகர்.


'கிப்ட் என்னன்னு சொல்லு அப்பறம் பாப்போம்.' தன்யா.


"சரி. என் கிப்ட் இதான். ஆர்.எஸ்.புரம் சவிதா ஹால் த்ரி கார்ணர்ல ஒரு பலைய ஆர்க் இருக்கும்." சாகர்.


'அப்படியா' தன்யா.


"இருக்கு, ஆனா டாப் இருக்காது வெறும் தூண் தான் இருக்கும் ரெண்டு பக்கமும்" சாகர்.


'இதான் உன் கிப்டா?!' தன்யா."கேளு. அங்கிருந்து டீ.பீ. ரோட்டப் பாத்தா ஸ்ட்ரைட்டா இருக்கும், கடைசி வரைக்கும் தெரியும். ரொம்ப அழகா இருக்கும். நைட் மட்டும் தான் பாக்க முடியும் பகல்ல க்ரவுடா இருக்கும் பாக்க முடியாது. கிப்ட் ஓகே வா?!" சாகர்.


'இரு பாத்துட்டு சொல்றன்' தன்யா.


இரவானாலும் பரவாயில்லை என்று அந்த இடத்திற்கு வந்தாள். அவளின் வீட்டருகில் தான் அந்த இடம். அங்கு வந்தவளுக்கு ஆச்சரியம், சாகர் அங்கு தான் இருந்தான்.


"கிப்ட் எப்படி இருக்கு?!" சாகர்.


'சரியா தெரியல.' என்றாள்.


"இங்க வா, என் வண்டில ஏரு," என்று நடு ரோட்டில் வண்டிய நிறுத்தினான். ஏரி உட்கார்ந்தாள்.


"அப்படியே என் தோள புடிச்சு எந்திரிச்சு பார்" சாகர்.அந்த நேரம் இரவிலும் பூத்தன, தெருவோர மரங்களெல்லாம்."உன் மேல் பட்ட வெளிச்சமெல்லாம்

அகச்சிவப்பாகவே தெறிக்கிறது, வெட்கத்தில்"


-சாகர்

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.