ஆமாம்...அவனை ப்ரேக்-அப் செய்து விட்டேன்..பத்து நிமிஷத்துக்கு முன் தான் வாட்சப்பில்..இனி உனக்கும் எனக்கும் ஒன்றுமில்லையென..அவனும் என்னை தடுக்கவில்லை..பேச விட்டு வேடிக்கை பார்த்தான்..

"நல்லா சண்டை போடுவா..நாய் மாதிரி கத்துவா..ரெண்டு நாள் பேசாம இருப்பா..
அப்புறம் தானா வந்து பேசிருவா..எங்க போய்ட போறா?? அதான உன் நினைப்பு.."

”என் அப்பா இல்லாமயே உயிர் வாழ்றேன்..நீ இல்லாம வாழ முடியாதா..சரிதான் போடா”...எல்லா மெசேஜீமே டபுள் டிக்..ப்ளூ கலர்..ஆமாம்..வாசிக்கிறான் பதில் இல்லை..

”திமிரை பாரேன் ரிப்ளை பண்ண மாட்றான்” உள்ளே ஒரு அரக்கி கத்துகிறாள்..

”நீ தான் அவனை விட்டுட்டு போக போறியே அப்புறம் என்ன ஹேர்க்கு அவன் என்ன ரியாக்ட் பண்றானு பார்க்குற”னு உள்ளே இன்னோர் அரக்கி அர்ச்சனை செய்கிறாள்...

சரி நான் இந்த அரக்கி சொல்வதையே கேட்கிறேன் அவன் என்ன சொல்கிறான் என்பது அவனை விட்டு போக போகும் எனக்கு தேவையில்லாத விசயம்..நான் சொல்ல வேண்டியதை சொல்லி விட்டேன்..இதோ கிளம்பிவிட்டேன்.."குட் பை" டைப்பிட்டு அனுப்பி ரெண்டு டிக் போவதற்குள் அரக்கியானவள் உள்ளே புகுந்து கொடுத்த ஐடியாப்படி வாட்சப் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் காண்டாக்ட் லிஸ்ட் எல்லா இடங்களிலும் வரிசையாக அவனை ப்ளாக் செய்தேன்..அவ்ளோ தான்..ப்ரேக்-அப் சம்பவம் இனிதே நிறைவுற்றது..

அப்பாடா ஏதோ ஒரு நிம்மதி..மொபைலை பெட்'டின் மேல் தூக்கி எறிந்தேன்..பெருமூச்சு விடுகிறேன்...இனி எதற்கும் பயப்பட தேவை இல்லை..மொபைல்லை தூக்கி கொண்டே சுத்த வேண்டிய அவசியம் இல்ல..சார்ஜ் போட்டுவிட்டு சார்ஜர் பக்கத்திலியே அடை காக்கும் கோழி போல உட்காந்திருக்க தேவை இல்ல...யாரும் மொபைலை நோண்டி என் பலவீனத்தை தெரிந்து கொள்(ல்)வார்களோ என்று பயப்பட தேவை இல்லை..

இஷ்டத்துக்கு எங்கனாலும் போலாம் வரலாம்..பெர்மிஷன் வாங்கிட்டு போகனும்னு இல்லை..பிடிச்ச ட்ரெஸ் போடலாம்..ஷாலை ஒன் சைட் போடாத டபுள் சைட் போடு..பசங்களை பத்தி உனக்கு தெரியாது அவனுக என்ன பேசுவானுகனு எனக்கு தான் தெரியும்னு மொக்கை அட்வைஸ்களை கேட்க தேவையில்லை..

பேஸ்புக்ல நிம்மதியா போட்டோ போடலாம்..லைக் போட்டவன் யாரு கமெண்ட் போட்டவன் யாருனு விளக்க தேவையில்லை..

அங்க போய் பார்க்கனும் இங்க போய் பார்க்கனும்..யாராவது நம்மளை பார்த்து தொலைஞ்சுட்டானு டென்சன் ஆக தேவையில்லை..

ஏதோ சிறையில் இருந்த பறவை வெளியே வந்ததாய் உணர்ந்தேன்

பத்து நொடி தான் அனுபவித்திருப்பேன் அந்த சுதந்திரத்தை..

அட மூதேவி..நீ நினைக்கிற மாதிரி தான் அவனும் நினைச்சு இந்நேரம் சந்தோசமா இருப்பான் என்று சொல்லி அரக்கி அகோரமாய் சிரித்தாள்..

என்னாது நான் அவனை விட்டு வந்துட்டா அவன் சந்தோசமா இருப்பானா!?நினைக்கவே ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது..இவனுக்காக எவ்ளோ பொய் சொல்லிருப்பேன்..எவ்ளோ தியாகம் பண்ணிருப்பேன்..எவ்ளோ அவமானப்பட்டுருப்பேன்..அப்போ நான் வச்ச பாசமெல்லாம் பொய்யா?சும்மாவா??

அப்ப அவன் உன் மேல வச்சதுக்கு பேர் என்னம்மா??மீண்டும் அரக்கி சிரித்தாள்..

ச்ச..அவனுடன் பேசி சண்டை போட்டு கூட மீண்டுரலாம் போல..இந்த மனசாட்சி கொலையா கொல்லுது..இதுட்ட என்னால மல்லுக்கட்ட முடியலை..ஃபர்ஸ்ட் உன்ட்ட இருந்து தப்பிக்கனும்..தனியா இருந்தா தான டி என்னை இம்சை பண்வ உன்னை ஜெயிக்கிறேன் பாருனு கங்கணம் கட்டிக் கொண்டு டிவியை ஆன் செய்தேன்..

"பறந்து செல்லவா..பறந்து செல்ல வா"னு சன் மியூசிக் பாடியது..கெரகம்டா வேற பாட்டே இல்லயா..பாட்டு போட்றானுக பாரு..அன்று அவனுடன் படம் பார்த்த போது இனித்த பாட்டு இன்று ஜி.எஸ்.டி.யாய் கசந்தது...

ம்க்கும்..எல்லாத்துலயும் சீரியல்..அழுகை...விளம்பரம்..இல்லனா லவ் சாங் அலுத்துக் கொண்டே சேனலை மாத்திக் கொண்டிருக்கும் போதே அம்மா "அந்த ரிமோட்டுக்கு மட்டும் வாய் இருந்தா அழுதுரும் ஏதாவது ஒன்னை வச்சி பாருடி"னு ரிமோட்டை பிடுங்கி கொண்டது..

போச்சா..ஏதாவது புக் படிக்கலாம்னு தோன்றியது...புக்கை திறந்தேன்..கண்கள் வாசித்தது..மனம் லயிக்கவில்லை..எதையோ யோசித்துக் கொண்டு இல்லை இல்லை மைண்ட் பிளான்க்கா இருக்கு..ஆனா வாசிக்கிறது ஒன்னுமே மண்டையில ஏறலை..
இது சரிப்பட்டு வராதுனு புக்கை மூடினேன்..

மறுபடியும் மொபைலை ஆன் செய்தேன்..இவன் கூட பேசலனா என்ன?? வேற யாருமே நமக்கில்லயா..யார்ட்டயாவது பேசுவோம்..நேரம் போய்டும்..ஒரு வேளை போர் அடிக்கிறது தான் நம்ம பிரச்சனை போல..போர் அடிக்காம பார்த்துப்போம்னு முடிவு பண்ணிணேன்..

வாட்சப்பில் காலேஜ் க்ரூப்பில் ஹாய் அனுப்பினேன்..பத்து நிமிடங்கள் கழித்து கல்யாணியிடமிருந்து ரிப்ளை வந்தது.."என்ன திடீர்னு காத்து இந்த பக்கம் வீசுது?!கார்த்திக் கழட்டி விட்டுட்டுட்டானா!!"

அதுக்குள்ள எப்டி தெரியும்?ஊரெல்லாம் பரப்பிட்டானா?போஸ்டர் அடிச்சு கூட ஒட்டிருப்பான்?ச்ச..எரிச்சலாய் வந்தது..

எப்பவும் அவன் கூட பேசிக்கிட்டு க்ரூப்ல பேசமாட்ட..இன்னைக்கு புதுசா நீ ஹாய்'னு அனுப்பவும் அவ கலாய்க்குறா..
அரக்கி நக்கலடித்தாள்..

ம்ம்..இருக்கும்..ரிப்ளை செய்யாமலே நெட்டை ஆஃப் செய்தேன்..

அவனை ஃப்ரேக் அப் பண்ணி முழுசா ரெண்டு மணி நேரம் கூட ஆகலை..ஆனா எனக்கு என்ன பண்ணனு தெரியலை...என்னமோ பண்ணுது மனசு வலிக்குது..எப்டி லைஃப் புல்லா மேனேஜ் பண்ண போறேன்...யோசித்து கொண்டே இருந்தவள் அம்மா நான் பெருமாள் கோவிலுக்கு போய்ட்டு வரேன்னு சொல்லி விட்டு ஸ்கூட்டி சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்..

ஒரு கிலோமீட்டரில் தான் கோவில்..ஒரு கிலோமீட்டரை ஸ்கூட்டியில் கடக்க எடுத்துக் கொள்ளும் மூன்று நிமிடங்களில் மனம் முன்னூறு முறை அவனையே நினைத்தது...ம்ம்..நம்ம தான் அவனையே நினைச்சிட்ருக்கோம்..இந்நேரம் அவன் அவன் ப்ரெண்ட்ஸோட ஹேப்பியா இருப்பான்..அப்பாடா ஒரு தொல்லை முடிஞ்சதுனு..

இதோ இந்த கோவில் வாசல்..காலேஜ் இல்லாத எத்தனையோ சனிக்கிழமைகளில் "உன்னை பார்க்காம என்னால இருக்க முடியலடி கொஞ்சம் கோவில் வரையும் வாயேன்..பேசலாம் மாட்டேன்..நீ பாட்டுக்கு சாமி கும்பிடு..உன்னை பார்த்துட்டு மட்டும் போயிட்றே"னு வந்து நின்றிருக்கின்றான்..

ச்ச...பாவம்..எனக்காக என்னலாம் பண்ணிருக்கான்..நான் தான் அவனை ஹர்ட் பண்ணிட்டேன் போலனு நினைச்சிட்ருக்கும் போதே "சும்மா ஒன்னும் நீ அவனை ஹர்ட் பண்ணலை..அவன் உனக்கு பிடிக்காத ஒரு விசயத்தை இது போல இன்னொரு தடவை பண்ணுணா சத்தியமா நான் உன்ட்ட பேசமாட்டேனு நீ அழுத்தி சொன்னப்பறமும் அதையே பண்ணி உன்னை ஹர்ட் பண்ணான்..அதான் நீ கோவப்பட்ட.."அரக்கி அலறினாள்

கொடுமை கொடுமைனு கோவிலுக்கு போனா அங்க ஒரு கொடுமை ஜிங்கு ஜிங்குனு ஆடுச்சான்ற மாதிரி கோவிலுக்கு போயும் நிம்மதி இல்லாமல் அவன் நினைவுகள் என்னை அலைகழித்தன..

சாமி கும்பிட்டுவிட்டு கண் திறந்தால் நிற்கும் அவன் உருவம் இன்று இல்லாததால் மனம் கனத்தது...சாமி பார்க்க வந்ததை விட அவனை பார்க்கனு வந்த தினங்களே அதிகம்..இன்று கடவுளே என்னை காப்பாத்துனா சாமி காப்பாத்துமா??போட்டு தான் பார்க்கும்..

மொபைல் வாங்கியதில் இருந்து, மொபைலை வீட்டுலயே வைத்து விட்டு கோவிலுக்கு வந்தது இது தான் முதல் முறை..கையில் எடை குறைந்து மனதில் பாரம் ஏறுவதாய் உணர்கிறேன்..

எதையோ நினைத்துக் கொண்டு வெறுமென உட்கார்ந்திருந்த எனக்கு ஒரு வேளை நான் இங்கிட்டு வந்ததும் அவன் அங்கு போன் பண்ணிருப்பானோனு தோன கிளம்ப எத்தனித்தேன்..ம்க்கும்.. ப்ளாக் பண்ணா எப்டி கால் வரும்னு அரக்கி சிரிக்க மீண்டும் உட்கார்ந்தேன்..வேற யார் மொபைல்ல இருந்து கூட கால் பண்ணலாம்லனு தோனவே திடுக்கென்று எந்திரித்து வீட்டுக்கு ஸ்கூட்டியை விட்டேன்..

அம்மா போனை எடுத்துச்சு அவ்ளோ தான் செத்தேன்..லவ் பண்ணிட்டுருக்கும் போது மாட்டினா கூட பரவால்ல...அதுல ஒரு நியாயம் இருக்கு..ப்ரேக் அப் ஆனதுக்கப்பறம் மாட்டுறதா..இதெல்லாம் அநியாயம்...

வேகவேகமாய் வீட்டுக்குள் சென்று மொபைலை தேடினேன்..அப்பாடா பெட் மேலயே கிடக்கு..யாரும் தொடலை..ப்பா..மூச்சிரைத்தது...மொபைலை பார்த்தாள்..ஒரு மிஸ்ட் காலும் இல்லை..ஏமாற்றத்தில் கண்ணில் கண்ணீர் முனுக்கென்று வந்து நின்றது..

ச்ச..அழக்கூடாது..அவன் எனக்கென்னனு இருக்கான்.. அவனுக்காக நீ அழலாமா?? அரக்கி என்னை கட்டுப்படுத்தினாள்..

என்னை ஏன்டா இந்த பாடு படுத்துற முனங்கியவாறு பெட்டில் முடங்கினேன்..

கை சும்மா இருக்கவில்லை..நான் சொல்லாம கால் பண்ண மாட்டான்...யாராவது எடுத்துருவாங்கனு...நான் கால் பண்ண சொன்னா தான் பண்ணுவான்..ஒரு வேளை கால் பண்ணா டேஞ்சர்னு மெசேஜ் பண்ணிருப்பானோ...நெட் ஆன் செய்து அவனை எல்லா ஆப்'லயும் அன்ப்ளாக் செய்தேன்..ம்ஹீம் ஒரு மெசேஜ்ஜீம் வரவில்லை..ஆத்திரமாய் வந்தது..எவ்ளோ திமிரு பாரு அவனுக்கு..தப்பு பண்ணது அவன்..இனிமே இப்டி பண்ண மாட்டேன்..பேசுடினு சொல்றதுக்கு என்ன கேடு?அம்புட்டும் ஆணவம்..
ஆம்பளைன்ற ஆவணம்.. நான் உன்ட்ட பேசவே போறதில்ல..தொலஞ்சு போ..பதினொறாவது முறையாக மொபைலை பெட்டின் மேல் எறிந்தேன்..

ஒரு வேளை ப்ளாக் பண்ணிருந்தா அப்ப அனுப்புற மேசேஜ்லாம் நமக்கு வராதோ..??அன்ப்ளாக் பண்ணப்பறம் அனுப்புற மெசேஜ் மட்டுந்தான் வருமோ??என்ன எழவோ கொஞ்சம் நேரம் அன்ப்ளாக்லயே இருக்கட்டும்...மெசேஜ் அனுப்புறானானு பார்ப்போம்னு மொபைலையே ஒன்றரை மணி நேரமா உத்து பார்த்துக் கொண்டிருந்த எனக்கு பைத்தியம் பிடித்துவிடும் போலிருந்தது..தலை வின் வின்னென்று வலித்தது...வேறு வழியே இல்லை..காயப்பட்ட மனசுக்கு ஒரே ஆறுதல்..அழுது தீர்ப்பது..ம்ம்...அழுதும் தீர்த்தேன்.

இதுக்கு முன்ன எத்தனையோ தடவை சண்ட போட்ருக்கோம்..ஆனா அவன் இப்டி ரியாக்ட் பண்ணாம இருந்ததே இல்லயே...ஒரு வேளை நான் இனி பேசவே மாட்டேனு சொன்னதுனால..தப்பான முடிவுக்கு..ச்ச..அப்டிலாம் இருக்காது...டேய் அந்த மாதிரில்லாம் எதுவும் இல்லேல்ல..மனசு துடிக்க கொஞ்சம் கூட யோசிக்காமல் கை நடுங்க நடுங்க கால் பண்ணினேன்..பேலன்ஸ் இல்லனு வந்தது..ஐயோ காசு வேற இல்லயா..அவன் தான் எப்பவும் ரீசார்ஜ் பண்ணி விடுவான்..மணி பதினொன்னு..இப்ப எப்டி வெளியே போறது ரீசார்ஜ் பண்ண? அம்மா மொபைல்லை வாங்கி பண்ணலாமா??வேணா இந்த நேரத்துல யாருக்குடி போன் பண்றனு ஆயிரம் கேள்வி கேட்கும்...என்ன பண்றதுனு யோசித்தவள் வாட்சப்பில் கால் பண்ணினேன்..நாட் ரீச்சபிள் என வந்தது..நேரம் ஆக ஆக தலையை பிச்சுக்கலானு இருந்தது..அப்போது தான் ஐடியா வந்தது..ஏர்டெல்லில் லோன் வாங்கி பேசலாம்னு..10ரூவாய்க்கு லோன் வாங்கி வேக வேகமா அவன் நம்பருக்கு போன் செய்தேன்...ஸ்விட்ச் ஆஃப் என்றது..வெறுத்தே போனேன்.
நான் போன் பண்வேனு வேணும்னே மொபைலை ஆஃப் செய்து வச்சிருக்கானா..இல்ல ஏதாவது..அய்யோ இப்ப என்ன பண்றது..??சிவா அண்ணனுக்கு போன் பண்ணி கேக்கலாமா??இந்த நேரத்துல அவருக்கு போன் பண்ணி டிஸ்டர்ப் பண்ணா நல்லாவா இருக்கும்?!வேற வழி இல்ல..

எதுக்கும் ஒரு தடவை இவனுக்கே போட்டு பார்ப்போம்..எடுக்கலனா சிவன் அண்ணன் தான் கதி..ஆஹா ரிங் போகுது..எடுக்கல..திரும்ப திரும்ப போட்டேன்..ம்ஹீம்..ஒரு வேளை போனை சைலண்ட்ல போட்டுட்டு தூங்கிட்டானோ..??ஆமா நான் இங்க அல்லோல கல்லோலப் பட்டுட்டுருக்கேன்..அவன் மட்டும் நிம்மதியா தூங்குறானா??இருந்தாலும் இருக்கும் தூங்குனாலும் தூங்குவான்..தொடர்ந்து கால் செய்தேன்..ம்ஹீம்..எடுக்கவில்லை..

எங்கடா தொலைஞ்ச..பத்து நிமிடம் கழித்து மீண்டும் டயல் செய்தேன்...ரெண்டு புல் ரிங்குங்கு பின் எடுத்து ஹலோ என்றான்...அவன் குரல் தான்..அது கோவமோ இல்லை அழுதுடுவேன்ற பயமோ இல்லை வெறுப்போ அவன் குரல் கேட்டதும் டக்கென்று கட் பண்ண போன என் கை அவன் பேச்சால் சட்டென நின்றது..

த்தா..எதுக்குடி எனக்கு போன் பண்ண??உங்கப்பன் இல்லாமயே வாழ்றேன் நான் இல்லாம வாழ்வேனு சொன்னீல்ல..இப்ப என்ன மயித்துக்கு போன் பண்ண??அதுவும் இத்தனை தடவை..உங்கப்பன் செத்துட்டான் நானும் சாவுறேன்..நீ மட்டும் நிம்மதியா இருடி..அதான் யார் இல்லனாலும் வாழ்ந்துருவீல்ல..ச்சை..நீயெல்லாம்..அவன் பேசி கொண்டே போக எனக்கு அழுகை முட்டியது..

என்ன இருந்தாலும் கெட்ட வார்த்தைலாம் பேச மாட்டானேனு மூளைக்குள் ப்ளாஷ் அடிக்க..

ஏய் குடிச்சிருக்கியா என்றேன்..

ஆமா டி..குடிச்சிருக்கேன்..குடிப்பேன்..நல்லா குடிப்பேன்..உனக்கென்ன வந்துச்சு...உனக்கும் எனக்கும் தான் சம்பந்தம் இல்லையே..நான் என்ன பண்ணா உனக்கென்ன டி??

அதெப்படிடா நான் உன்னை விட்டுட்டு போறேனு சொன்னா எனக்கு எது ரொம்ப பிடிக்காதோ அதை செலக்ட் பண்ணி அதை தான் ஃப்ர்ஸ்ட் பண்ணுவியா..??உன்னலாம்..ச்சீ..உனக்கு போய் என்னமோ ஏதோனு பதறி போன் பண்ணேன் பாரு..என் புத்தியை செருப்பாலயே அடிச்சுக்கனும்....இனி நீ யாரோ நான் யாரோ என் மூஞ்சிலயே முழிக்காத..ப்ரேக் அப் ப்ரேக் அப் தான்.. சொல்லிவிட்டு போனை கட் பண்ணி மொபைலை எப்பவும் போல் தூக்கி எறிந்தேன்..

"மறுபடியும் மொத இருந்தா ஷப்பாஆஆ முடியல"னு அரக்கி நக்கலடித்து சிரிக்க ஆரம்பித்தாள்..

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.