4. புவனேஷ்வரி

கருணையே வடிவமாய் காட்சியளிக்கும் இவள், இந்த புவனத்தையே ஆட்சி செய்பவள். பஞ்ச பூதங்களைத் தோற்றுவித்து பிரபஞ்சத்தை ஆளுவதால், “பிரபஞ்சேஸ்வரி” என்று போற்றபடுபவள். சிரித்த முகத்தோடு, வர, அபய முத்திரைகளுடன் பெயர், பொருள், புகழ் என்று கேட்டவருக்கு கேட்ட வரம் தருபவள். இவள் துர்கையம்மனின் அம்சமாகவும் பார்க்கப்படுகிறாள். மும்மூர்த்திகளாலும் வணங்கப்படுபவள். போருக்கு செல்லும் முன், புவனேஸ்வரியை, துர்கையின் வடிவில் வழிபாடு செய்த இராமன், சுவர்கத்தையே வென்ற இராவணனையும் வென்றான் என்று சில புராணங்கள் சொல்லுகின்றன.


5. பைரவி

தந்திரர்களிடையே பிரபலமான இந்த தேவி, சக்தியின் மூர்க்கத்தனமான வடிவம். சிவனின் ஆக்ரோஷ வடிவமான பைரவரைத் துணையாக கொண்டுள்ளாள் பைரவி. பைரவி போர்க்கள தேவியாகவும் இருக்கிறாள். மூன்று கண்களுடன், இரத்தம் ஒழுகும் உதட்டுடன் பைரவியின் தோற்றம் பயத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது. போர்க்களத்தில் பைரவியின் பயங்கரமான தோற்றத்தைக் கண்ட மாத்திரத்திலேயே அரக்கர்கள் நடுநடுங்கிப் போனார்கள். அழிவை குறிக்கின்ற தேவியாய் காட்சியளித்தாலும், அழிவினால் ஏற்படும் மாற்றங்களையே உணர்த்துகிறாள். அழிவில்லையேல் படைப்பு தொடர முடியாதே! அஹோரிகள் சிவ ஆலயத்தில் பைரவரையும் பைரவியையும் வழிபடுகின்றனர்.

6. சின்னமஸ்தா

தன் தலையை தானே கொய்து கையில் பிடித்திருக்கும் தேவி, நிற்பதோ கூடுகின்ற காமன், ரதியின் மேலே. கழுத்திலிருந்து பீச்சியடிக்கும் ஒரு இரத்த ஊற்றை தானே குடிக்க, இன்னும் இரண்டை அதன் பணிப் பெண்கள் பருகுகின்றன. சின்னமஸ்தா வழிபாடு மிக அரிதானது. தன் தலையையே கொய்து பணிப்பெண்களின் தாகத்தைத் தீர்த்து, தியாகத்தையும், தாயுள்ளத்தையுமே இந்த தேவி வெளிப்படுத்துகிறாள். காம இச்சையை அடக்குதல், மரண பயத்தை வெல்லுதல் போன்ற குணாதிசயங்கள் உணர்த்தப்படுகின்றன. சின்னமஸ்தா வழிபாடு நடுநிசியில் செய்யப்படுவது. இது சாமானிய இல்லறவாசிகளுக்கான வழிபாடு அல்ல.

7.தூமாவதி

அழகற்ற, வயதான, கைம்பெண்ணாக, விதவை கோலத்தில் துரதிஷ்டம், மரணம், அழிவு, கோபம், துயரம் போன்றவற்றின் பிரதிபலிப்பாய் காட்சி தருகிறாள் இந்த தேவி. மஹா பிரளயத்தின் போது தோன்றுபவளாக தூமாவதி சித்தரிக்கப்படுகிறாள். இல்லற வாசிகள் தூமாவதியை வழிபடக் கூடாது, உலக இன்பங்களை துறந்தவர்களே வழிபட வேண்டும் என்று சொல்லப்பட்டாலும், உண்மையில் மனித வாழ்வின் துயரங்களிலிருந்து நம்மை காக்கும் கருணை உள்ளம் கொண்ட தேவியே தூமாவதி. அமங்களமும் வாழ்வின் ஒரு பகுதியே. அதிலிருந்து எல்லா நேரங்களிலும் தப்பி ஓட முடியாது என்பதை உணர்த்தும் வடிவம் இது.

(தொடரும்)


tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.