வாசல் தேடி வந்த நிலவு

வாசல் தேடி வந்த நிலவே! - உன்னில்

வாசம் தேடி கொடுத்தேன் மனதை!

மனதில் நாளும் உந்தன் நினைவே! - என்னில்

மயக்கம் கொடுக்குது உன் வரவே!


வெள்ளைக் குயிலாய் எந்தன் மனதை

கொள்ளை கொண்டு போனவள் நீயே!

தொல்லை கொடுக்கிறாய் மனதில் ஏனோ

எல்லை இல்லாமல் தினமும் நீயே!


தாகம் கொண்ட மீனாய் - உன்

தேகம் நீந்த விழைகிறேன்!

மேகம் கொடுக்கும் மழையாய் - முப்

போகம் உன்னால் விளைகிறேன்!


ஆற்று நீராய் நீ ஓடி வந்து - மன

சேற்று வயலில் கலக்கிறாய்!

நாற்று வளரும் வயலில் நீயோ - காதல்

ஊற்று போல உதிக்கிறாய்!


அகல் போன்ற விழிகளால்

பகல் ஆக்கினாய் என் இரவுகளை!

முகில் போன்ற மேனியால்

திகில் ஊட்டுகிறாய் ஏனோ நீயோ?.....


......தங்கமணிகண்டன்.......

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.