ஆரியரும்,திராவிடரும்

***திராவிடரும்,ஆரியரும்***

கல்லூரி நாட்களில்,சக நண்பன் History of Religion என்ற ஒரு ருஷ்ய புத்தகத்தை அறிமுகப்படுத்தினான்.அருமையான புத்தகம்.ஆரியர்கள் கைபர்,போலன் கணவாய் வழியாக வந்தவர்கள்.சிந்து சமவெளி எனும் அருமையான நாகரிகத்தை தோற்றுவித்த,திராவிடர்களை கொன்று குவித்தவர்கள்.

வேதங்களில் நான்கு வர்ணங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.இறுதியாக சூத்திரர்கள்.சூத்திரர்கள் எனும் திராவிடர்கள்,  ஆரியர்கள் எனும் தேவர்களுக்கு சேவை செய்தால்,பூணூல் அணியலாமாம்.பூணூல் அணிந்தால் மறுபிறவி நிச்சயம் உண்டாம்.எப்படி எல்லாம் ஏமாற்றி இருக்கிறார்கள்.வேதங்களை பிரித்து மேய்ந்திருக்கிறது அந்த புத்தகம்.

ஆரியர்கள் வெள்ளை தோல் கொண்டவர்கள்,மெலிந்தவர்கள்.திராவிடர்கள் எங்கள் சரித்திர பாடத்தில் சொன்ன படி தடித்த உதடும்,சப்பை மூக்கும் கொண்டவர்கள்.குறிப்பாக,கறுப்பு நிறமும்,தடித்த உடலும் கொண்ட  திராவிட பெண்ணான சூர்ப்பநகை ராமாயணம் எழுதிய வால்மீகிக்கு அரக்கியாக தோன்றியிருக்கிறது.திராவிடர்களை ஆரியர்கள் மனிதர்களாக பார்க்கவில்லை.

பிறகு ஆரிய,திராவிட இனங்கள் கலந்திருக்க வேண்டும்.இந்த இன கலப்பில் நல்லவர்கள் பலர் தோன்றி இருக்கிறார்கள்.உதாரணம் அசோகர்.பெரும்பாலான வட இந்தியர்களும்,பாகிஸ்தானியர்களும் ஆரிய-திராவிட மக்களே.இவர்களிருவரும் அடித்து கொள்வதுதான் விந்தை.திராவிட இனத்தின் எஞ்சியவர்கள் தமிழ்நாட்டு மக்களும்,தமிழும்.தற்போதைய ஆரியர்களில் வியப்பூட்டுபவர்களில் ஒருவர் கமல் ஹாசன்.

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.