பார்வைகள் விசாலமாகட்டும்,,,

கட்டிய மனைவியோடு
கட்டிலில் கொஞ்சியப்படி
கீர்த்திசுரேஷ்பற்றி
கீர்த்தனைப்பாடுகிறோம்,,,

கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு
தண்ணீரை தாரைவார்த்துவிட்டு
சந்திரனில்~தண்ணீர்
இருக்குமாயென
ஆராய்ச்சிசெய்கிறோம்,,,

பக்கத்து வீட்டிலுள்ள
சிந்தனையாளன்பற்றி
ஒரு
உற்சாக வார்த்தையும் பேசாமல்
முகம்காணாத
சிந்தனையாளன்பற்றி
கட்டுரை வடிக்கிறோம்,,,

சிமினி விளக்கை
அணைத்து வைத்துவிட்டு
நிலாவைக்காட்டி
சோறூட்டுகிறோம்,,,

"சனியனே"
சீக்கிரம் பொறப்படு
பரிட்சைக்கு நேரமாகுல,,,
பாஸ்மார்க் எடுக்கல
கொன்னுப்போடுவேன்னு ~தன்
மகளை மிரட்டிவிட்டு
முகநூலில் வாழ்த்துச்சொல்லி
பதிவிடுகிறோம்,,,

வைரங்கள்
கவனிக்கப்படாதவரை
கண்ணாடி துகள்களே,,,
உங்கள் பார்வையில்,,,

பார்வைகள் விசாலமாகட்டும்,,,,!
*********************************


நாகை ஆசைத்தம்பி

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.