ஜெயராமன் ரகுநாதன்
படைப்புகள்
29
படித்தவர்கள்
54,809
விருப்பங்கள்
4,604

சிறுகுறிப்பு  

பிரதிலிபியுடன்:    

படைப்பைப் பற்றி:

ஜெயராமன் ரகுநாதன் சென்னை லயோலா கல்லூரியில் பிகாமும் அகில இந்தியக்கணக்காளர்கள்  தேர்வும் முடித்த சார்டர்ட் அக்கௌன்டன்ட். ஹிந்துஸ்தான் யுனிலீவர் மற்றும் டிவீஎஸ் கண்பெனிகளில் மேலாளர், பொது மேலாளர் மற்றும் துணைத் தலைவராக 25 வருடங்களாக பணியாற்றிய பின்னர், ஒரு மென்பொருள் தயாரிக்கும் நிறுவனத்தைத் தொடங்கி வெற்றிகரமாக 5 வருடங்கள் இயக்கினார்.  பின்னர் அதன் வளர்ச்சியின் காரணமாக நிறுவனத்தை இன்னொரு மிகப்பெரிய மென்பொருள் நிறுவனத்துடன் இணைத்தார்.  இப்போது லாப நோக்கமில்லாத கம்பெனி ஒன்றைத் தொடங்கி, அதன் மூலம் இறுதியாண்டு கல்லூரி மாணவர்களின் வேலைத்திறனை அதிகரிக்கும் பயிற்சிகள் நடத்தி வருகிறார்.  மார்க்கெட்டிங் , விற்பனை, விஸ்தரிப்பு, மேலாண்மை, ERP என்னும் கம்பெனி தழுவிய மென்பொருள் ஆலோசனை ஆகியவற்றில் விற்பன்னராக விளங்கும் ரகுநாதன், இரண்டு மென்பொருள் கம்பெனிகளில் இயக்குனராகவும் இருந்து வருகிறார். MIcrosoft மற்றும் IBM கம்பெனிகளில் பாட்னாராக இருக்கும் இந்தக் கம்பெனிகளின் மூலமாகவும் வாடிக்கையாளர்களுக்கு ஆலோசனை தந்து வருகிறார்.  எம் ஓ பி வைஷ்ணவா, எதிராஜ், சிவ நாடார், காஞ்சி பல்கலைக்கழகம், இந்தோ ஜெர்மெனிய வர்த்தக தொழிற்பயிற்சி மையம், ஆசான் கல்லூரிக்குழுமம் போன்ற இடங்களில் அழைக்கப்படும் பேச்சாளராகச் சென்று மாணவர்களுக்கு ஊக்கமும் தன்னம்பிக்கையும் தரும் விதத்தில் சொற்பொழிவு ஆற்றி வருகிறார். பல கல்லூரிகளின் பாடத் திட்டக் குழு உறுப்பினராக இருந்து பாடத்திட்டங்களை காலத்திற்கேற்ப மாற்றுவதற்கும் ஆலோசனைகள் சொல்லி வருகிறார்.  உலகத்தின் பல நாடுகளுக்குச் சென்று வந்திருக்கும் இவர் சில ஆண்டுகள் ரோட்டரி க்ளப்பின் இயக்குனராகவும் சேவை புரிந்திருக்கிறார். 2010 இல் வளரும் தொழில்முனைவோரின் தலைவராகவும்  குறிப்பிடப்பட்டுள்ளார்.  சிறு வயதிலிருந்தே தமிழ் படிப்பிலும், எழுத்திலும் ஆர்வமானவர். பத்தாவது வயதிலேயே எழுத்தாளர் சுஜாதாவின் அறிமுகம் பெற்று பின்னாளில் அவரின் நண்பராகவும் ஆனார். சுஜாதா , தி ஜானகிராமன், பாலகுமாரன், போன்றோரின் எழுத்தாலும் அறிமுகத்தாலும் படிப்பாலும் தன் சிந்தனையின் எழுத்தும் சீரடைந்ததாக இவர் குறிப்பிடுகிறார்.  இவர் எழுதிய கதைகள் சில, தென்றல் , சிறகு, பால ஹனுமான், போன்ற மின்னிதழ்களில் வெளிவந்துள்ளன. Facebook இல் மிகத் தீவிரமான ஈடுபாடு கொண்டு இவர் மூன்று ஆண்டுகளாக கதை, கட்டுரைகள் எழுதி வருகிறார். 


, Kavithai Priya

3 ஃபாலோவர்ஸ்

Suresh Durai

61 ஃபாலோவர்ஸ்

Raja Mudaliar

14 ஃபாலோவர்ஸ்
tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.