'பரிவை' சே.குமார்
படைப்புகள்
170
படித்தவர்கள்
112,617
விருப்பங்கள்
16,845

சிறுகுறிப்பு  

பிரதிலிபியுடன்:    

இடம்:     பரியன் வயல்

படைப்பைப் பற்றி:

தேவகோட்டைக்கு அருகில் பரியன்வயல் என்ற சிறிய கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன் நான். ஊரின் பெயரைச் சுருக்கி எனக்கு முன் இட்டு 'பரிவை' சே.குமார் என்ற பெயரில் கடந்த 6 வருடமாக மனசு என்ற வலைத்தளத்தில் கவிதைகள், கதைகள், கட்டுரைகள், கிராமத்து நினைவுகள், வெள்ளந்தி மனிதர்கள் என எழுதி வருகிறேன். எனது படைப்புக்கள் தாமரை, பாக்யா, உதயம்,தினபூமி-கதைபூமி, தினத்தந்தி குடும்ப மலர், தினமணிக் கதிர், மங்கையர் சிகரம் மற்றும் சில பத்திரிக்கைகளிலும் அதீதம், சிங்கப்பூர் கிளிஷே, அகல், கொலுசு போன்ற மின்னிதழ்களிலும் வெளிவந்திருக்கின்றன. எனது படைப்புக்கள் வெட்டி பிளாக்கர்ஸ், சேனைத் தமிழ் உலா நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசும் ரூபனின் எழுத்துப் படைப்புகள் நடத்திய போட்டியில் இரண்டாம் பரிசும், தமிழ்க்குடில் நடத்திய கட்டுரைப் போட்டியில் முதல் பரிசும் அகலின் சிறுகதைப் போட்டியில் புத்தகப் பரிசும் பெற்றிருக்கின்றன. எனது கருத்து பாக்யா மக்கள் மனசு பகுதியில் ஒன்றரை ஆண்டுக்கு மேலாக தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. கல்லூரியில் படிக்கும் காலத்தில் நண்பர்களுடன் இணைந்து 'மனசு' என்ற கையெழுத்துப் பிரதியை நடத்தினோம். அந்தப் பெயர் எனக்கு மிகவும் பிடித்த பெயர் என்பதால் அதையே வலைப்பக்கத்தின் பெயராகவும் வைத்துள்ளேன். கிராமத்தானாக வளர்ந்து தேவகோட்டை, சென்னையில் சில காலங்கள் பணி... கடந்த எட்டு வருடமாக இருப்பது அபுதாபியில்... பணி கணிப்பொறியில்... என்னில் பாதி என் மனைவி நித்யா, என் உயிராய் இரண்டு செல்வ(ல்)ங்கள்... மகள் ஸ்ருதி, மகன் விஷால். வருடத்திற்கு ஒரு முறை ஊருக்கு வரும் எனக்கு பொழுதுபோக்கு மற்றும் தனிமை கொல்லி எழுத்து மட்டுமே. நிறைய எழுதுவேன்... இங்கிருப்பதால் பத்திரிக்கைகளுக்கு அனுப்புவது குறைந்து விட்டது. சிறுகதை தொகுப்பு கொண்டு வர எண்ணம்... இன்னும் எண்ணம் எண்ணமாகவே இருக்கிறது... கைகூடும் நாள் எப்போதென தெரியவில்லை... எதை மறந்தாலும் என்னை எழுத்தாளனாக்கிப் பார்க்க ஆசைப்பட்ட என் கல்வித்தந்தை எனது பேராசான் முனைவர். திரு. மு.பழனி இராகுலதாசனை மனதார வணங்க மறப்பதில்லை. காரணம் அவர் ஏற்றி வைத்த கற்பனைத் தீ இன்று ஏராளமான நட்புக்களைப் பெற்றுத் தந்திருக்கிறது. வலையுலகில் எனது எழுத்துக்கு என்று ஒரு முக்கியமான இடத்தை பிடித்துத் தந்திருக்கிறது. மனசு வலைத்தளத்தில் நட்புக்களின் வற்புறுத்தலின் பேரில் இதுவரை 3 தொடர்கதை எழுதி நாலாவது கதையையும் எழுதிக் கொண்டிருக்கிறேன். வாழ்க்கையைப் பேசும் வெள்ளந்தி மனிதர்கள் மற்றும் கிராமத்து நினைவுகள் மற்றும் வேரும் விழுதுகளும்  (தொடர்கதை) நிறைய நண்பர்களைக் கவர்ந்தும் எனக்கு நிறைய நட்பைப் பெற்றும் தந்திருக்கிறது. நன்றி.


நௌஷாத் கான்

492 ஃபாலோவர்ஸ்

Mari Selvan

4 ஃபாலோவர்ஸ்

Sathish

7 ஃபாலோவர்ஸ்

Vijk

0 ஃபாலோவர்ஸ்

S Kumar

0 ஃபாலோவர்ஸ்

arthi kumar28

0 ஃபாலோவர்ஸ்
tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.